search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிட வீரர்கள் தேர்வு
    X

    ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை காணும் பார்வையாளர்களுக்கான போட்டியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

    மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிட வீரர்கள் தேர்வு

    • நெல்லை மாவட்டத்தில் இருந்து போட்டியை பார்வையிட செல்லும் வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது.
    • இதில் முதல் 25 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும்.

    நெல்லை:

    44-வது ஒலிம்பியாட் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் 180 நாட்டை சேர்ந்த சுமார் 1,800 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த போட்டியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பாக 15 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு தனி தனியாக போட்டிகள் நடத்தி அதில் முதல் இடம் பெறும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் போட்டியை கண்டு களிக்கவும் மற்றும் அங்கு வீரர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது .

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் இருந்து ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிட செல்லும் வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அனைத்து இந்திய சதுரங்க பெடரேஷன் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் அனுமதியோடு நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர். நாளையும் போட்டி நடைபெறுகிறது. இதில் முதல் 25 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும். நுழைவு கட்டணம் கிடையாது.

    Next Story
    ×