search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் பெண்கள் பங்கேற்ற பாரம்பரிய சமையல் போட்டி
    X

    குன்னூரில் பெண்கள் பங்கேற்ற பாரம்பரிய சமையல் போட்டி

    • கேழ்வரகு அடை, பாசிபருப்பு பாயாசம், சிவப்பு அரிசிபுட்டு செய்து அசத்தல்
    • பர்லியார் பஞ்சாயத்துக்கு முதல் பரிசு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில், குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் வட்டார அளவிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இடையே பராம்பரிய சிறுதானிய உணவு தயாரிப்பு போட்டி நடைபெற்றது. திட்டஇயக்குனர் முத்து தலைமை தாங்கினார்.

    பராம்பரிய சிறுதானிய உணவு தயாரிப்பு போட்டியில் 6-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டு கேழ்வரகு அடை, பாசிபருப்பு பாயாசம், சிவப்பு அரிசிபுட்டு, கேழ்வரகு இடியாப்பம், அவல் வடை, எள்ளு சிம்லி, கம்பு குழிபணியாரம், கேழ்வரகு அல்வா, சத்துமாவு கேக், பிரண்டை துவையல், கொள்ளு அவல் கஞ்சி, உளுந்து பனைவெல்லம் கஞ்சி, எள் உருண்டை ஆகிய பல வகை உணவுகளை தயாரித்தனர்.

    இதில் சுவை மிகுந்த பாரம்பரிய உணவுகள் தயாரித்த மகளிர் குழுவினருக்கு ஊராட்சி ஒன்றிய தலைவி சுனிதா நேரு, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரமங்கலம் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் பர்லியார் பஞ்சாயத்து முதல் பரிசும், மேலூர் பஞ்சாயத்து 2-வது பரிசும், உபதலை பஞ்சாயத்து 3-வது பரிசும் பெற்றது. அவர்கள ஊட்டியில் வருகிற 21-ந்தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    Next Story
    ×