search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணிகள்"

    • 2 அணிகளுக்கு இடையே போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது.
    • வெற்றி பெறும் அணியானது மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.

    தஞ்சாவூர்:

    புதுக்கோட்டையில் இன்று கிழக்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கி நாளை வரை நடக்கிறது.

    இதில் தஞ்சை ,நாகை, பெரம்பலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட கிழக்கு மண்டலங்களை சேர்ந்த மாவட்ட கழகத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.

    முன்னதாக இந்த மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மாவட்டத்தில் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது.

    இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    அதிலிருந்து தஞ்சாவூர் நண்பர்கள் கைப்பந்து கழக அணி, பிள்ளையார்பட்டி சோழன் கைப்பந்து கழக அணிகள் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில்

    நேற்று இரவு விளையாடின.

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியை தஞ்சாவூர் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து 2 அணிகளுக்கு இடையே போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியை மாவட்ட கைப்பந்து கழக துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் டி. ரவிச்சந்திரன், பன்னீர்செல்வம், தமிழ்ச்செல்வன், இளங்கோவன், ரமேஷ் மற்றும் பலர் பார்த்தனர்.

    இதையடுத்து இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் கிழக்கு மண்டல அளவிலான பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் பிள்ளையார்பட்டி சோழன் கைப்பந்து கழக அணி, தஞ்சாவூர் நண்பர்கள் கைப்பந்து கழக அணிகள் விளையாட உள்ளன.

    இதேபோல் கிழக்கு மண்டலங்களில் பதிவு செய்யப்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.

    நாளை வரை நடைபெறும்

    இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியானது மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டனர்.
    • அமைச்சருக்கு நினைவு பரிசாக கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்கம், கலியபெருமாள் நினைவு கிரிக்கெட் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தின. கடந்த 18-ம் தேதி தொடங்கிய போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் போட்டிகள் முடிந்ததையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் காளிதாஸ் வாண்டையார் வரவேற்று பேசினார்.

    விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சென்னை பிரியர் இன்டர்நேஷனல் அணிக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை வழங்கி பாராட்டினார்.

    இதேப்போல் 2-ம் இடம் பிடித்த எடைமேலையூர் சுரேஷ் கிளப் அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம், கோப்பை, 3 மற்றும் 4-ம் இடம் பிடித்த சென்னை ஜி.எஸ்.டி கஸ்டம், தஞ்சை பேட் மெம்மோரியல் அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கினார்.

    மேலும் தொடர் நாயகன் பரிசாக ரூ.10 ஆயிரம், சிறந்த பேட்டர், சிறந்த பந்து வீச்சாளருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார்.இதையடுத்து அமைச்சருக்கு நினைவு பரிசாக கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், கவுன்சிலர்கள் மேத்தா, நீலகண்டன், தமிழ்வாணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணிகண்ணன், விளையாட்டு பயிற்சியாளர்கள் தமிழ்குமரன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய மாவட்ட இளைஞரணி மாநகர அமைப்பாளர் வாசிம்ராஜா நன்றி கூறினார்.

    • ஒவ்வொரு ஆண்டும் ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
    • விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 15.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான தகுதிச்சுற்று போட்டி ஜூன் இரண்டாவது வாரம் துவங்குகிறது.

    மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் அணிகள் இப்போட்டியில் பங்கேற்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் திருப்பூர் முருகம்பாளையத்தில் செயல்படும் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் தங்கள் அணியை பதிவு செய்யலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 15. மேலும் விவரங்களுக்கு 9344207615 என்ற எண்ணில் அழைக்கலாம். இத்தகவலை மாவட்ட கிரிக்கெட் சங்க மேலாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

    • கல்வி சர்வதேச பொதுப்பள்ளி சார்பில் மகளிர் ஆக்கி போட்டி நடந்தது.
    • விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 27 அணிகள் பங்கேற்கின்றன.

    சோழவந்தான்

    தேனி மாவட்டம் பெரிய குளம் தாலுகா தேவதான பட்டியில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி சார்பாக மகளிர் ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதனை சரவணகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, பெரிய குளம் பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி குழும தலைவர் டாக்டர் செந்தில்குமார் வரவேற்றார்.

    இந்த விழாவில், தமிழ்நாடு ஆக்கி யூனிட் தலைவர் சேகர் மனோகரன், பொது செயலாளர் டாக்டர் செந்தில் குமார், தேனி மாவட்ட ஆக்கி செயலாளர் சங்கிலி காளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    4 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 27 அணிகள் பங்கேற்கின்றன.

    • பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
    • 22 மாநிலங்களிலிருந்து 36 அணிகளை சேர்ந்த சுமார் 450 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாடவுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கத்தில் 11 ஆவது அகில இந்திய பாரா வாலிபால் போட்டி பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

    இது தொடர்பான இலச்சி னையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது :-

    இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா வாலி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி சங்கம் ஆகியவை சார்பிலும், மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைந்து அகில இந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 11 ஆவது அகில இந்திய பாரா வாலிபால் போட்டி தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கத்தில் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி, 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்தப் போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம், உத்ரகாண்ட், ஜார்கண்ட், பிகார், ராஜஸ்தான், ஒரிசா, மேற்கு வங்கம், திரிபுரா உள்பட 22 மாநிலங்க ளிலிருந்து 36 அணிகளைச் சார்ந்த சுமார் 450 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர்.இப்போட்டியிலிருந்து வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, உலக அளவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

    இந்தப் போட்டியைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். நிறைவு நாளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு வெற்றிக் கோப்பையையும், பரிசுத் தொகையையும் வழங்கவுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக அவர், போட்டிக்கான லோகோவை வெளியிட்டார்.

    அப்போது, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, தமிழ்நாடு பாரா வாலி சங்க மாநிலத் தலைவர் மக்கள் ராஜன், மாவட்ட தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட பாரா வாலி சங்க தலைவர் ராமநாத துளசி அய்யா வாண்டையார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல்உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களை சார்ந்த 15 அணிகள் பங்கேற்றது.
    • பனவடலிச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் போட்டியினை தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வட்டம் மேலநீலிதநல்லூரில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக தென் மண்டல அளவிலான மாவட்டங்களுக்கிடையேயான கைப்பந்து போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சார்ந்த 15 அணிகள் பங்கு கொண்டன. போட்டியில் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணி முதல் இடத்தையும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ். கல்லூரி இரண்டாம் இடத்தையும்,

    பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மூன்றாம் இடத்தையும், நாகர்கோவில் தூய அல்போன்சா கல்லூரி அணி நான்காம் இடமும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

    பரிசளிப்பு விழாவில் நெல்லை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் சந்திரகுமார், தென்காசி மாவட்ட செயலர் ரமேஷ்குமார், கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக நடை பெற்ற தொடக்க விழாவில் பனவடலிச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முத்துக்குமார் செய்திருந்தார்.

    ×