மண்டல அளவிலான கைப்பந்து போட்டி - பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி முதலிடம்

போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களை சார்ந்த 15 அணிகள் பங்கேற்றது. பனவடலிச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் போட்டியினை தொடங்கி வைத்தார்.
வெற்றிபெற்ற  அணிக்கு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.
வெற்றிபெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் வட்டம் மேலநீலிதநல்லூரில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக தென் மண்டல அளவிலான மாவட்டங்களுக்கிடையேயான கைப்பந்து போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சார்ந்த 15 அணிகள் பங்கு கொண்டன. போட்டியில் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணி முதல் இடத்தையும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ். கல்லூரி இரண்டாம் இடத்தையும்,

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மூன்றாம் இடத்தையும், நாகர்கோவில் தூய அல்போன்சா கல்லூரி அணி நான்காம் இடமும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் நெல்லை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் சந்திரகுமார், தென்காசி மாவட்ட செயலர் ரமேஷ்குமார், கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக நடை பெற்ற தொடக்க விழாவில் பனவடலிச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முத்துக்குமார் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com