மகளிர் ஆக்கி போட்டி

கல்வி சர்வதேச பொதுப்பள்ளி சார்பில் மகளிர் ஆக்கி போட்டி நடந்தது.விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 27 அணிகள் பங்கேற்கின்றன.
மகளிர் ஆக்கி போட்டி
Published on

சோழவந்தான்

தேனி மாவட்டம் பெரிய குளம் தாலுகா தேவதான பட்டியில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி சார்பாக மகளிர் ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதனை சரவணகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, பெரிய குளம் பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி குழும தலைவர் டாக்டர் செந்தில்குமார் வரவேற்றார்.

இந்த விழாவில், தமிழ்நாடு ஆக்கி யூனிட் தலைவர் சேகர் மனோகரன், பொது செயலாளர் டாக்டர் செந்தில் குமார், தேனி மாவட்ட ஆக்கி செயலாளர் சங்கிலி காளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

4 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 27 அணிகள் பங்கேற்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com