search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக்"

    • குளித்தலை அருகே பைக் மாயமானதாக போலீசில் புகார் கொடுக்கபட்டது
    • இதுகுறித்து புகாரின்படி தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    குளித்தலை அடுத்த,கொசூர் பஞ்., குப்பமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 33). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பின்னர் இதுகுறித்து புகாரின்படி தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    • டுகாட்டி நிறுவனத்தின் புதிய சூப்பர் பைக் மாடல் கணிசமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.
    • புதிய டுகாட்டி மாடலில் நான்கு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது 2023 பனிகேல் V4 R சூப்பர் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 டுகாட்டி பனிகேல் V4 R விலை ரூ. 69 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மாடலில் 998சிசி, நான்கு சிலின்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 215 ஹெச்பி பவர், 111.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இத்துடன் அக்ரபோவிக், ஃபுல் சோர்ஸ் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த பைக்கின் எடை 5 கிலோ வரை குறைந்துள்ளது. மேலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டைரெக்ஷனல் குயிக்ஷஃப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 43mm ஆலின்ஸ் NPX 25/30 ஃபோர்க்குகள், பின்புறம் ஆலின்ஸ் TTX 36 மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு டுவின் 330mm முன்புற டிஸ்க், பிரெம்போ ஸ்டைல்மா M4.30 கேலிப்பர்கள், பின்புறம் 245mm சிங்கில் ரோட்டார், 2 பிஸ்டன் கேலிப்பர்கள் உள்ளன.

     

    இந்த மாடலில் உள்ள காம்ப்ரிஹென்சிவ் எலெக்டிரானிக்ஸ் பேக்கேஜ் நான்கு ரைடிங் மோட்கள், கார்னெரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஸ்லைடு கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ டயர் கலிபரேஷன் போன்ற வசதிகளை வழங்குகிறது.

    இத்துடன் மெஷின்டு மிரர் பிளாக் ஆஃப் பிளேட்கள், டுகாட்டி டேட்டா அனலைசர் மற்றும் ஜிபிஎஸ் மாட்யுல் வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய மாடலிலும் டுவிட் பாட் ஹெட்லைட், ஃபுல் ஃபேரிங், ஏரோடைனமிக் விங்லெட்கள், ரைடர் இருக்கை, சிங்கில் சைடு ஸ்விங்ஆர்ம் வழங்கப்படுகிறது.

    • புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.
    • தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் அதிகாலையில் வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் பைக்கில் நெருங்கியவாறு உட்கார்ந்து சென்றனர். பைக்கில் சென்ற அவர்கள் மற்ற வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றனர்.

    பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தபடியும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறும் வாலிபர் பைக் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது மணவெளி ரோடு சந்திப்பில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பைக்கில் வாலிபரும், இளம்பெண்ணும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறு ஜாலியாக வருவதை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாலிபர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவர் அவரது தோழி என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.

    அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தார். போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அவர் அவ்வழியே வந்த வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.

    இதையடுத்து போலீசார் வாலிபரையும், அவரது தோழியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.

    இதில் காயமடைந்த வாலிபரை போலீசார் அழைத்து சென்று அரியாங்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானை சேர்ந்த வோல்கர் அப்ராகாசன் என்பவர் இந்தியாவை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
    • பல வருடங்களாக விசா பெற முயற்சி செய்த பிறகு இந்தியாவுக்கு வருகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

    பாகிஸ்தானை சேர்ந்த வோல்கர் அப்ராகாசன் என்பவர் இந்தியாவை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். 30 நாட்களில் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுற்றுப்பயணம் சென்றார்.

    அவர் டெல்லி, அரியானா, ராஜஸ்தான், மும்பை, கேரளா மற்றும் பல நகரங்களில் நடந்த பல்வேறு சந்திப்புகளின் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில், அவருக்கு பலரும் உணவு வழங்குவதையும் காண முடிகிறது.

    தொடர்ந்து கேரளா, ராஜஸ்தானில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ள அவரது வீடியோக்களை பார்த்த சமூக வலைதள பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • சுசுகி V-Strom 800DE மாடலில் 776சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்திய சந்தையில் இந்த பிரிவின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக இது இருக்கும்.

    சுசுகி நிறுவன இந்திய விற்பனையாளர்கள் V-Strom 650XT மாடலுக்கான முன்பதிவை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுசுகி நிறுவனம் V-Strom 800DE மாடல் அறிமுகம் பற்றி விற்பனையாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், புதிய சுசுகி V-Strom 800DE மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கவில்லை.

    சுசுகி V-Strom 800DE மாடலில் 776சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 83 ஹெச்பி பவர், 78 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சுசுகி V-Strom 800DE மாடலில் பல்வேறு ரைடிங் மோட்கள் உள்ளன.

    சுசுகி V-Strom 800DE

    சுசுகி V-Strom 800DE

    இத்துடன் டு-வே குயிக்ஷிப்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், 5 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிளில் 21/17-இன்ச் ஸ்போக் வீல், டன்லப் டிரெயில்மேக்ஸ் மிக்ஸ்டூர் ரக டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன. சஸ்பென்ஷனுக்கு ஷோவா முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் கிரவுண்ட் கிளியரன்ஸ் 855 மில்லிமீட்டர்கள் ஆகும். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இது இந்த பிரிவில் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக இருக்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் சுசுகி V-Strom 800DE மாடல் பிஎம்டபிள்யூ F850GS, டிரையம்ப் டைகர் 900 ரேலி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    • மதுரை அருகே உள்ள கடைக்குள் பைக் புகுந்தது.
    • பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்த பெண் படுகாயமடைந்தார்.

    மதுரை

    மதுரை தபால்தந்தி நகர், பேங்க் காலனியைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாமுவேல் தாய் மஞ்சுளா (49) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது திருமங்கலம், முல்லைநகர் பகுதியில், அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள், அங்குள்ள கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்தது. இதில் சாமுவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    மஞ்சுளாவுக்கு தலை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாமுவேல், மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீச்சரிவாளுடன் வந்து பைக் திருடிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • தலைமறைவான அவர்களை தேடி வருகிறார்கள்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தினையத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் ரமேஷ்.

    இவர் வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுவிட்டார். காலை எழுத்து பார்த்தபோது பைக் காணவில்லை.

    பக்கத்து வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு காமிராவை ரமேஷ் ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் வீச்சரிவாளு டன் நள்ளிரவில் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து தொண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த வாலிபர்கள் திருட்டை தடுக்கச் சென்றால் வீச்சரி வாளால் கொலை செய்ய வும் தயங்க மாட்டார்கள் என்ற நிலை உள்ளதாக இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த திருடர்கள் யார்? வேறு திருட்டு அல்லது கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்களா? என தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறை வான அவர்களை தேடி வருகிறார்கள்.

    • ஹோண்டா நிறுவனத்தின் புதிய 750சிசி மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • டிரான்சால்ப் 750 மாடலில் உள்ள என்ஜின் புதிய 750சிசி மாடலிலும் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஹோண்டா நிறுவனம் ரெட்ரோ-ஸ்டைலிங் கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் GB750 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. ஜப்பானில் GB350, சர்வதேச சந்தையில் ஹைனெஸ் CB350 வடிவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதை போன்றே புது மாடலிலும் பழைய மோட்டார்சைக்கிள்களை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    அந்த வகையில் புது மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், குறைவான பாடிவொர்க், ஹை-ரைஸ் ஹேண்டில்பார்கள், ஃபோர்க் கெய்ட்டர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் GB750 மாடலில் ரெட்ரோ-ஸ்டைல் பெயிண்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. என்ஜினை பொருத்தவரை இந்த மாடலில் டிரான்சால்ப் 750 மற்றும் CB750 ஹார்னெட் மாடல்களில் உள்ள யூனிட் வழங்கப்படலாம்.

    எனினும், இந்த மாடலில் பழைய பைக் போன்ற தோற்றத்தை கொடுக்கும் பாகங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள், பின்புறம் கன்வென்ஷனல் ஃபோர்க்குகள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், டிஎஃப்டி டேஷ், ரைடு மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

    புதிய ஹோண்டா GB750 மாடல் பற்றி இதுவரை ஹோண்டா தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் இந்த மோட்டார்சைக்கிள் டிரையம்ப் போன்வில் T100 மற்றும் கவாசகி Z650RS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • ஹோண்டா நிறுவனம் உருவாக்கி இருக்கும் புது தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புது தொழில்நுட்பம் ஹோண்டா ஸ்கூட்டர் மற்றும் பைக் என இருசக்கர வாகனங்களில் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது புது எலெக்ட்ரிக் அம்சம் பற்றிய தகவலை வெளியிட்டு உள்ளது. புது தொழில்நுட்பம் H ஸ்மார்ட் என அழைக்கப்படுகிறது. ஹோண்டாவின் புதிய H-ஸ்மார்ட் தொழில்நுட்பம் ஜனவரி 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புது தொழில்நுட்பம் எதுபோன்ற வசதியை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. எனினும், இதற்கான டீசரில் இந்த தொழில்நுட்பம் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    ஹீரோ நிறுவனத்தின் iஸ்மார்ட் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம், யமஹா நிறுவனத்தின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் என பல்வேறு நிறுவனங்கள் அதிக மைலேஜ் வழங்கும் தொழில்நுட்பங்களை வழங்க துவங்கிவிட்டன. அந்த வகையில் ஹோண்டா ஏற்கனவே தனது வாகனங்களில் சைலண்ட் ஸ்டார்ட் அம்சத்தை வழங்கி இருக்கிறது. எனினும்,ஸ ஸ்டார்ட்/ஸ்டாப் அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை.

    அந்த வகையில் புது தொழில்நுட்பம் ஹோண்டாவின் ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் ஆக இருக்கும் என தெரிகிறது. இந்த அம்சம் ஹோண்டா CB300F மற்றும் ஹைனெஸ் CB350 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ப்ளூடூத் மூலம் கனெக்டிவிட்டி வசதியை வழங்கும். இது ஹோண்டா வாகனங்களின் டிஜிட்டல் டேஷ்-இல் நோட்டிஃபிகேஷன் அலெர்ட் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியை வழங்குகிறது.

    • டுகாட்டி நிறுவனத்தின் புதிய டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் வினியோகம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
    • புதிய டெசர்ட் எக்ஸ் மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் வினியோகம் இந்திய சந்தையில் ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் துவங்கும் என அறிவித்து இருக்கிறது. புதிய அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்திய சந்தையில் புதிய டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் டைகர் 900 ரேலி, ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மற்றும் பிஎம்டபிள்யூ F850 GS மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புது மாடலில் 937சிசி, L-ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் புதிய டுகாட்டி மான்ஸ்டர் மற்றும் மல்டிஸ்டிராடா வி2 மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 110 ஹெச்பி பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய டெசர்ட் எக்ஸ் மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், புளூடூத் வசதி கொண்ட ஐந்து இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இந்த மாடலில்- ஸ்போர்ட், டூரிங், அர்பன், வெட், ரேலி மற்றும் எண்டியுரோ என ஆறு வித ரைடிங் மோட்கள் உள்ளது.

    இத்துடன் ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என நான்கு பவர் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றுடன் குரூயிஸ் கண்ட்ரோல், போஷ் IMU, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பை-டைரெஷனல் குயிக்ஷிஃப்டர் மற்றும் கார்னெரிங் ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டெசர்ட் எக்ஸ் மாடலில் கூடுதலாக ஆப்ஷனல் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் 2023 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் புது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விவரங்களை வெளியிட்டு உள்ளது. இதில் பனிகேல் வி4 ஆர், மான்ஸ்டர் எஸ்பி, டயவெல் வி4, ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 எஸ்பி2, மல்டிஸ்டிராடா வி4 ரேசி, ஸ்கிராம்ப்ளர் ஐகான் 2ஜி, ஸ்கிராம்ப்ளர் ஃபுல் திராட்டில் 2ஜி, ஸ்கிராம்ப்ளர் நைட்ஷிஃப்ட் 2ஜி மற்றும் ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 லம்போர்கினி உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

    • கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிளாக 2023 டியூக் 390 இருக்கிறது.
    • சர்வதேச சந்தையில் இந்த மாடல் தொடர் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    கே.டி.எம். நிறுவனத்தின் 2023 டியூக் 390 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் சமீபத்தில் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இந்த நிலையில், வெளிநாடுகளிலும் 2023 கே.டி.எம். டியூக் 390 மாடல் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    புதிய மாடல் தற்போதைய டியூக் 390-ஐ விட டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லைட் கௌல் கூர்மையாக காட்சியளிக்கிறது. ஃபியூவல் டேன்க் மீது பொருத்தப்பட்டு இருக்கும் ஷிரவுட்கள் சற்றே நீண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் பின்புறம் உள்ள சப் ஃபிரேம் முற்றிலும் புதிய யூனிட் ஆகும். இதே போன்ற சப் ஃபிரேம் 790/890 டியூக் மாடல்களில் காணப்படுகிறது.


    இவை தவிர வீல்கள், பிரேக் டிஸ்க், WP சஸ்பென்ஷன் மற்றும் ஸ்விங் ஆம் உள்ளிட்டவை 2022 கே.டி.எம். RC 390 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் 373சிசி, லிக்விட் கூல்டு சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இது 42.9 பி.ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்திய சந்தையில் புதிய 2023 கே.டி.எம். RC 390 மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரத்தில் இருந்து துவங்கும் நிலையில், புதிய டியூக் 390 மாடலின் விலையும் சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    Photo Courtesy: Bikewale

    • ராயல் என்பீல்டு நிறுவனம் நீண்ட காலமாக ஹண்டர் மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருகிறது.
    • இந்த மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகி இருக்கின்றன.

    ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிள் ராயல் என்பீல்டு மீடியோர் 350 பிளாட்பார்மை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    எனினும், இம்முறை வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் புதிய ஹண்டர் மாடல் பற்றி ஏராளமான விவரங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிள் ஸ்கிராம்ப்ளர் ரக மாடல் என்றும் இதன் ஃபியூவல் டேன்க் டியர்-டிராப் வடிவம் கொண்டிருக்கிறது. இத்துடன் நீண்ட ஒற்றை இருக்கை, வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், டர்ன் இண்டிகேட்டர்கள், ரியர் வியூ மிரர்கள் மற்றும் சற்றே உயர்ந்த பின்புறம் கொண்டிருக்கிறது.


    மேலும் இந்த மாடலில் அகலமான ஹேண்டில் பார்கள், மிட்-செட் ஃபூட் பெக், மற்ற ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை விட ஸ்போர்ட் தர அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருப்பது, ஸ்கிராம்ப்ளர் போன்ற ஸ்டைலிங் உள்ளிட்ட அம்சங்களை வைத்து பார்க்கும் போது இது மற்ற ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை விட குறைந்த எடையில் உருவாகி இருக்கும் என தெரிகிறது.

    புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளிலும் 349சிசி என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    Photo Courtesy: Bikewale

    ×