search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் படுகாயம்"

    • தொழிலாளர்கள் அங்கு இருந்த ஹீட்டர் மிஷினை சுவிட்ச் ஆப் செய்யாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
    • தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது47). இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சந்தன மகாலிங்கம் என்பவர் பட்டாசு தயாரிக்க தேவையான அட்டைக் குழாய்களுக்கு யூ.வி. கோட்டிங் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இங்கு வழக்கம் போல் நேற்று இரவில் வேலை நடைபெற்றது.

    அப்போது தொழிலாளர்கள் அங்கு இருந்த ஹீட்டர் மிஷினை சுவிட்ச் ஆப் செய்யாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் அந்த தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடர்பாடுகளில் வேறு யாரும் சிக்கி இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தனர்.

    இந்த சம்பவத்தின்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராணி (35) என்கிற பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    • ஆடுகளுக்கு கொடுப்பதற்காக வீட்டின் பின்புறம் வனபகுதியை ஒட்டியுள்ள மரத்தில் கிளைகளை தனபாக்கியம் ஒடித்துக் கொண்டிருந்தார்.
    • தனபாக்கியத்தை காட்டெருமை தாக்குவதை கண்ட அவரது வளர்ப்பு நாய் குறைத்ததால் காட்டெருமை அங்கிருந்து ஓடி விட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொலகூர் கிராமம். இங்கு ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள பெரும்பாலான வீடுகள் வனப்பகுதியை ஒட்டியே உள்ளன. இதனால் அவ்வப்போது காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் கிராம பகுதிக்கு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாலை கொலகூர் மிதுவகாடு பகுதியில் வசிக்கும் ஜெயமணி என்பவரது மனைவி தனபாக்கியம் (48) வீட்டிற்கு அருகில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆடுகளுக்கு கொடுப்பதற்காக வீட்டின் பின்புறம் வனபகுதியை ஒட்டியுள்ள மரத்தில் கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தார்.

    அந்த மரத்திற்கு அருகே காட்டெருமை படுத்திருந்தது. இதை கவனிக்காமல் தனபாக்கியம் தொடர்ந்து மரக்கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென காட்டெருமை அவரை முட்டி தாக்கியது.

    இந்த நிலையில் தனபாக்கியத்தை காட்டெருமை தாக்குவதை கண்ட அவரது வளர்ப்பு நாய் குறைத்ததால் காட்டெருமை அங்கிருந்து ஓடி விட்டது. இதனிடையே தனபாக்கியத்தின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.

    பலத்த காயமடைந்து இருந்த அவரை மீட்டு ஏற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினர்கள் 3 பேர் மீது வழக்கு
    • சுமதியின் மருமகளின் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடினர்

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே அம்சி நெசவாளர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பசுமதி (வயது 59). இவரது கணவர் மணிகண்டனின் அண்ணன் மகன்களான நாகர்கோவில் வாத்தியார்விளையை சேர்ந்த பிரசாத், திருநெல்வேலி பேட்டை பகுதியை சேர்ந்த ரதிஷ், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதி ராஜேஷ் ஆகிய 3 பேரும் ஆட்டோ டிரைவர்களாக பணி செய்கின்றனர். இவர்களுக்கிடையே சொத்து பிரச்சனை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சொந்த ஊரான அம்சிக்கு சென்ற பிரசாத், ரதிஷ், ரமேஷ் ஆகிய 3 பேரும் பசுமதி வீட்டில் சென்று தகராறில் ஈடுபட்டு, அவரை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பசுமதியின் மருமகளின் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்று, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த பசுமதி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுரை அருகே உள்ள கடைக்குள் பைக் புகுந்தது.
    • பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்த பெண் படுகாயமடைந்தார்.

    மதுரை

    மதுரை தபால்தந்தி நகர், பேங்க் காலனியைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாமுவேல் தாய் மஞ்சுளா (49) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது திருமங்கலம், முல்லைநகர் பகுதியில், அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள், அங்குள்ள கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்தது. இதில் சாமுவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    மஞ்சுளாவுக்கு தலை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாமுவேல், மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாழைத்தார்களை ஒற்றை காட்டு யானை தின்று கொண்டிருந்தது.
    • 2 பேர் இறந்த நிலையில் இன்று ஒரு பெண்மணியை யானை தாக்கியுள்ளது

    கவுண்டம்பாளையம்,

    கோவை கணுவாய் அடுத்துள்ள சோமையனூரில் இருந்து மடத்தூர் செல்லும் சாலையில் நல்லதம்பி கவுண்டர் தோட்டம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் பாலாமணி(வயது40). இவர் இன்று காலை 4 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்களை ஒற்றை காட்டு யானை தின்று கொண்டிருந்தது.

    யானையை பார்த்ததும் பாலாமணி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் யானை தனது தும்பிக்கையால் பாலாமணியை தாக்கியது.

    இதில் பாலாமணியின் முதுகு எலும்பு உடைந்து அவர் பலத்த காயத்துடன் அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அந்த யானையை வனப்ப குதிக்குள் விரட்டினர். இது தொடர்பாக விசாரித்தும் வருகிறார்கள்.

    கடந்த வாரத்தில் யானை தாக்கி 2 பேர் இறந்த நிலையில் இன்று ஒரு பெண்மணியை யானை தாக்கியுள்ளது இந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பரிமளா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தனர்.
    • காயமடைந்த முத்தமிழ் செல்வி திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருவள்ளூர்:

    திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை, சித்தூர் சாலையை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி முத்தமிழ் செல்வி. இருவரும் மோட்டார்சைக்கிளில் திருத்தணி சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். திருத்தணி மாதா கோயில் அருகே சென்றபோது பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென பரிமளா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர்.

    இதில் நிலைதடுமாறிய முத்தமிழ்செல்வி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் அங்கு திரண்டனர். உடனே கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். காயமடைந்த முத்தமிழ் செல்வி திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×