புதுக்கடை அருகே வீடு புகுந்து தாக்குதல்; பெண் படுகாயம்

உறவினர்கள் 3 பேர் மீது வழக்குசுமதியின் மருமகளின் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடினர்
புதுக்கடை அருகே வீடு புகுந்து தாக்குதல்; பெண் படுகாயம்
Published on

கன்னியாகுமரி :

புதுக்கடை அருகே அம்சி நெசவாளர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பசுமதி (வயது 59). இவரது கணவர் மணிகண்டனின் அண்ணன் மகன்களான நாகர்கோவில் வாத்தியார்விளையை சேர்ந்த பிரசாத், திருநெல்வேலி பேட்டை பகுதியை சேர்ந்த ரதிஷ், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதி ராஜேஷ் ஆகிய 3 பேரும் ஆட்டோ டிரைவர்களாக பணி செய்கின்றனர். இவர்களுக்கிடையே சொத்து பிரச்சனை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சொந்த ஊரான அம்சிக்கு சென்ற பிரசாத், ரதிஷ், ரமேஷ் ஆகிய 3 பேரும் பசுமதி வீட்டில் சென்று தகராறில் ஈடுபட்டு, அவரை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பசுமதியின் மருமகளின் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்று, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த பசுமதி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com