கடைக்குள் புகுந்த பைக்

மதுரை அருகே உள்ள கடைக்குள் பைக் புகுந்தது. பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்த பெண் படுகாயமடைந்தார்.
கடைக்குள் புகுந்த பைக்
Published on

மதுரை

மதுரை தபால்தந்தி நகர், பேங்க் காலனியைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாமுவேல் தாய் மஞ்சுளா (49) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது திருமங்கலம், முல்லைநகர் பகுதியில், அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள், அங்குள்ள கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்தது. இதில் சாமுவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மஞ்சுளாவுக்கு தலை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாமுவேல், மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com