search icon
என் மலர்tooltip icon

    பைக்

    750சிசி ரெட்ரோ-பைக் உருவாக்கும் ஹோண்டா
    X

    750சிசி ரெட்ரோ-பைக் உருவாக்கும் ஹோண்டா

    • ஹோண்டா நிறுவனத்தின் புதிய 750சிசி மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • டிரான்சால்ப் 750 மாடலில் உள்ள என்ஜின் புதிய 750சிசி மாடலிலும் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஹோண்டா நிறுவனம் ரெட்ரோ-ஸ்டைலிங் கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் GB750 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. ஜப்பானில் GB350, சர்வதேச சந்தையில் ஹைனெஸ் CB350 வடிவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதை போன்றே புது மாடலிலும் பழைய மோட்டார்சைக்கிள்களை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    அந்த வகையில் புது மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், குறைவான பாடிவொர்க், ஹை-ரைஸ் ஹேண்டில்பார்கள், ஃபோர்க் கெய்ட்டர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் GB750 மாடலில் ரெட்ரோ-ஸ்டைல் பெயிண்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. என்ஜினை பொருத்தவரை இந்த மாடலில் டிரான்சால்ப் 750 மற்றும் CB750 ஹார்னெட் மாடல்களில் உள்ள யூனிட் வழங்கப்படலாம்.

    எனினும், இந்த மாடலில் பழைய பைக் போன்ற தோற்றத்தை கொடுக்கும் பாகங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள், பின்புறம் கன்வென்ஷனல் ஃபோர்க்குகள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், டிஎஃப்டி டேஷ், ரைடு மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

    புதிய ஹோண்டா GB750 மாடல் பற்றி இதுவரை ஹோண்டா தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் இந்த மோட்டார்சைக்கிள் டிரையம்ப் போன்வில் T100 மற்றும் கவாசகி Z650RS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    Next Story
    ×