search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல்மி வாட்ச் 2"

    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனா, தன்னுடைய மருமகள் சமந்தாவுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.
    சமந்தாவும் சின்மயியும் இணைபிரியாத தோழிகள். சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தரன் தமிழில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தார். 

    தெலுங்கில் இயக்குனரான இவர் தற்போது நாகார்ஜுனா, ரகுல் பிரீத் சிங் ஆகியோரை வைத்து ‘மன்மதுடு 2’ படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் சமந்தா. 



    ‘மருமகள் சமந்தாவுடன் நடித்தது மகிழ்ச்சி’ என்று நாகார்ஜுனா உற்சாகமாக கூறியிருக்கிறார். 
    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டதாக கூறிய செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
    தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே திரைப்படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களின் இரண்டாம் பாகங்கள் எப்போது என்று ரசிகர்கள் அடிக்கடி கேள்வி எழுப்பி வருகின்றனர். செல்வராகவனும் விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்று கூறி வந்தார். இந்த நிலையில், அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,



    புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எடுக்க யோசித்தேன். ஆனால் தனுஷ் 2-ம் பாகம் எடுத்து சொதப்பி விடக்கூடாது என்று தயங்கியதால் முயற்சி கைவிடப்பட்டது. கார்த்தியை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளேன். இதற்கான கதை தயாராகிவிட்டது. சோழ மன்னர்களின் வரலாற்று நிகழ்வுகள் இந்த படத்தில் பதிவு செய்யப்படும்.

    அரசியல் தலைவர்களில் எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்கும். அவரது வாழ்க்கையை படமாக்க வாய்ப்பு கிடைத்தால் செய்வேன்.” என்றார்.

    பிளாக் ஷார்க் நிறுவனம் இந்தியாவில் தனது பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.



    பிளாக் ஷார்க் நிறுவனம் இந்தியாவில் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாதத்தில் சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி வழங்கப்பட்டுள்ளது. கேமிங் ஸ்மார்ட்போன் என்பதால் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சிறப்பான கேமிங் அனுபவம் வழங்க லுட்ரிகஸ் மோட் சேர்க்கப்பட்டுள்ளது.

    இத்துடன் லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் சி.பி.யு.-வில் ஏற்படும் வெப்பத்தை அதிகபட்சம் 14 சதவிகிதம் வரை குறைக்கும். 

    இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், சிக்னல் சீராக கிடைக்க X-வடிவத்தில் பிரத்யேக ஆண்டெனா வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் ஆர்.ஜி.பி. லோகோ, டிஸ்ப்ளேவில் பிரெஸ் சென்சிட்டிவ் கண்ட்ரோல்கள், ஏ.ஐ. கேமிங் அனுபவம் வழங்கப்பட்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 2x ஆப்டிக்கல் சூம், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    பிளாக் ஷார்க் 2 சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சாம்சங் GM1 சென்சார், 0.8μm பிக்சல், f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 1/3.6″ சாம்சங் S5K3M5, f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ், 2x சூம்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 0.9μm பிக்சல், f/2.0
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ.39,999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் ஷேடோ பிளாக் நிறத்திலும் 12 ஜி.பி. ரேம் மாடல் ஃபுரோஸன் சில்வர் நிறத்திலும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஜூன் 4 ஆம் தேதி துவங்குகிறது.
    பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 500 ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    சென்னை:

    உயர்கல்வியை நிர்ணயிப்பதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    ஒரு மதிப்பெண்ணால் சிறந்த கல்லூரியையும், படிப்பையும் கூட கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாணவர்களின் தலைவிதியை ஒவ்வொரு மதிப்பெண்களும் நிர்ணயிப்பதால் எதிர்பார்த்த மார்க் கிடைக்காத மாணவர்கள் மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாக ஆசிரியர்கள் செயல்படுவதால் மாணவர்களின் வாழ்க்கை திசை திரும்பி போய் விடுகிறது. விடைத்தாள் திருத்தி மதிப்பெண் அளித்ததை ஒவ்வொரு பக்கம் வாரியாக கூட்டல் செய்யும்போது தவறு ஏற்படுகிறது.

    இந்த வருடமும் நிறைய மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் கூட்டலில் தவறு ஏற்பட்டுள்ளதை விடைத்தாள் நகல் வாங்கிய மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 100-க்கு 72 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு 27 மதிப்பெண் பெற்றதாக கூட்டலில் தவறு இழைத்து தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.



    அதே போல ஒரு பாடத்தில் 81 மார்க் எடுத்த மாணவனுக்கு 57 பெற்றதாக கொடுத்துள்ளனர். இந்த தவறுகள் எல்லாம் மதிப்பெண்களை கூட்டும்போது ஏற்பட்ட பிழையாகும். இதுபோல பல மாணவர்களுக்கு கூட்டல் பிழையுடன் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 72 மையங்களில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. 50 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் நகலை பார்த்தபோதுதான் கூட்டலில் பிழை ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் ஒரு சில விடைத்தாள்கள் முறையாக திருத்தப்படாமல் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. 4,500 பேர் மறு மதிப்பீடு செய்யுமாறு விண்ணப்பித்து இருந்த நிலையில் ஆசிரியர்களின் தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

    ஒரு விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு 4 பேர் ஆசிரியர்கள் பொறுப்பாகிறார்கள். தவறு ஏற்படும்போது அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.

    விடைத்தாள் திருத்தம் செய்வதில் ஆசிரியர்கள் எவ்வாறு தவறு செய்திருக்கிறார்கள் என்பதை இணை இயக்குனர்கள் கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    500 ஆசிரியர்களுக்கும் மேலாக தவறு குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி கூறியதாவது:-

    மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யும்போது ஆசிரியர்களின் தவறு தெரிய வருகிறது. கடந்த காலங்களை விட படிப்படியாக தவறுகள் குறைந்துள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை இயக்குனர் தான் நடவடிக்கை எடுப்பார். நாங்கள் அவர்களின் பட்டியலை கொடுத்து விடுவோம்.

    தலைமை கண்காணிப்பாளர், எஸ்.ஒ, வி.ஒ உள்பட 4 பேர் விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு பொறுப்பாளர்கள். அவர்களை மீறி தவறு நடந்திருக்காது என்றால் அதற்கு அவர்களும் பொறுப்பாவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவர்கள் மதிப்பெண் தவறுக்கு காரணமாக உள்ள ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கின்றது.
    எல்.கே.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நீயா 2’ படத்தின் விமர்சனம்.
    நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். ஜெய்யை பார்க்கும் கேத்தரின் தெரசாவுக்கு ஜெய் மீது காதல் வந்து, அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறார். கேத்தரின் தனது காதலை ஜெய்யிடம் தெரிவிக்க, ஜெய் கேத்தரினை திருமணம் செய்ய மறுக்கிறார். கேத்தரின் விடாப்பிடியாக இருக்க, தனக்கு நாக தோஷம் இருப்பதால், நாக தோஷம் இருக்கும் பெண்ணை தான் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று ஜெய் கூறுகிறார்.

    பின்னர் தனக்கும் நாக தோஷம் இருப்பதாக கேத்தரின் கூற, இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு கேத்தரினுக்கு நாக தோஷம் இல்லை என்பது தெரிய வர, பரிகாரம் செய்வதற்காக இருவரும் கொடைக்கானல் செல்கின்றனர்.



    அங்கு கடந்த ஜென்மத்தில் கிடைத்த சாபத்தால், பிரிந்த தனது காதலனான ஜெய்யுடன் சேருவதற்காக காத்திருக்கிறார் பாம்பு பெண்ணாகிய ராய் லட்சுமி.

    கடைசியில், ஜெய்யின் நாக தோஷம் நீங்கியதா? கேத்தரினுடன் இணைந்தாரா? ராய் லெட்சுமியுடன் இணைந்தாரா? ராய் லட்சுமியின் முன் வாழ்க்கைக் கதை என்ன? அவருக்கு சாபம் வழங்கியது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நடிகர் ஜெய் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். காதல், ஆக்‌ஷன் என தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

    ஜெய்யை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரத்தில் கேத்தரின் தெரசா ரசிகர்களை கவர்கிறார். காதல், கவர்ச்சி என கிறங்கடிக்கிறார். பாம்பு பெண்ணாக ராய் லட்சுமி ராயலான பாம்பாக வலம் வருகிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் வரலட்சுமி தனது கதாபாத்திரத்திற்கு மெருகேற்றிவிட்டு சென்றிருக்கிறார். பால சரவணன் காமெடியில் ஓரளவு சிரிக்க வைக்கிறார்.



    நாக தோஷத்தை மையமாக வைத்து படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் எல்.கே.சுரேஷ். முதல்பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். பாம்பு வரும் கிராபிக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பை தூண்டுகின்றன. படத்தில் எந்த அளவுக்கு விறுவிறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு கவர்ச்சியும் இருக்கிறது.

    ஷபீரின் பின்னணி இசையும், ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளன.

    மொத்தத்தில் ‘நீயா 2’ கவர்ச்சி.

    சியோமி நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.



    சியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் மே 27 ஆம் தேதி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனை சியோமி அறிமுகம் செய்கிறது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

    இன்ஸ்டாகிராமில் ப்ளிப்கார்ட் தளத்தின் புதிய விளம்பரத்தில் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இடம்பெற்று இருக்கிறது. இது புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருப்பதை உறுதி செய்திருக்கிறது. இதே விளம்பரத்தில் கூகுள் மற்றும் போகோ உள்ளிட்ட பிராண்டுகளும் இடம்பிடித்து இருக்கிறது. இந்தியாவில் சியோமி நிறுவனம் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. 



    பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனில் லிக்விட் கூல் 3.0 தொழில்நுட்பம் மற்றும் ஹீட்-கண்டக்டிங் காப்பர் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் அதிக சுடாகாமல் பார்த்துக் கொள்ளும். இதுதவிர புதிய ஸ்மார்ட்போனில் ட்ரூவியூ டிஸ்ப்ளே சப்போர்ட் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் எலைட் கேமிங் வழங்கப்பட்டுள்ளது.

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அட்ரினோ 640 GPU மற்றும் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது. புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் முன்னோட்டம்.
    ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் `தேவி 2'.

    பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - அயனங்கா போஸ், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - லெவ்லின் அந்தோணி கான்சால்வ்ஸ், சங்கீத் சத்யநாதன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா, மனோகர் வர்மா, பாடல்கள் - பிரபுதேவா & கார்கி, வசனம் - கிரேஸி மோகன், விஜய், தயாரிப்பு - டாக்டர் ஐசரி கே.கணேஷ் & ரவீந்திரன், எழுத்து, இயக்கம் - விஜய்.



    படம் குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது,

    "நல்ல விஷயங்கள் எப்போதும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது இப்போது தேவி 2 படத்தில் நடக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேவி 2 படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய கூறுகள் படத்தில் உள்ளன. இந்த கோடையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

    படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    தேவி 2 படத்தின் டிரைலர்:

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படம் சம்பந்தமாக தயாரிப்பு நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு ஜூனில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
    கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவி வரும் நிலையில், படம் மீண்டும் துவங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கிய நிலையில் படத்தில் இடம்பெறும் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். கமல்ஹாசன் தோற்றத்தில் மாற்றம் செய்த பிறகும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. 

    கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டதால் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு படத்தின் பட்ஜெட் விவகாரத்தில் இயக்குநர் ‌ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டு படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது. இந்தியன் 2 படத்தை தயாரிக்க ‌ஷங்கர் வேறு 2 பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அணுகி இருப்பதாகவும் கூறப்பட்டது.



    தற்போது ‌ஷங்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு லைகா நிறுவனதே ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும், படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படம் பாதியில் நிற்கும் நிலையில், வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படம் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
    கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் கமல் - ‌ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது.

    இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியானதால் நிறுத்தப்பட்டதாகவும் மேக்கப் சரியில்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.



    தேர்தல் முடிந்த பிறகும் படப்பிடிப்பு இன்னமும் துவங்கப்படவில்லை. படத்தை தயாரிக்க ஒப்பந்தமான லைகா புரொடக்‌ஷன்ஸ் பின்வாங்கியதால், படத்தை வேறு நிறுவனத்தை வைத்து தயாரிக்க பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    ரிலையன்ஸ நிறுவனம் அல்லது சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க வாயப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலோ அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் பணிகள் முழுவீச்சில் நடப்பதாக மோகன் ராஜா கூறியிருக்கிறார்.
    கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகிய தனி ஒருவன் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு தனி ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் அறிவித்தனர்.

    இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார்.

    தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மோகன் ராஜா உள்ளார்.



    தனி ஒருவன் 2 படத்திற்கான வேலைகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் தனி ஒருவன் படத்தை பார்த்த இயக்குநர் ராம், ராஜா மீண்டும் தனி ஒருவன் படத்தை பார்தேன், மிகப் பெரிய உழைப்பு, அடுத்த பாகத்தை ரொம்ப கவனத்துடன் எடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

    அதற்கு மோகன் ராஜா அளித்த பதிலில், தனி ஒருவன் 2 படத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தனது உதவி இயக்குநர்களிடம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடலாமல்லவா? என்று கேட்டேன், 200% கண்டிப்பாக என்று கூறினார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.


    ஜெயம் ரவி தற்போது கல்யாண் இயக்கத்தில் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
    சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘களவாணி 2’. இப்படத்திற்கான காப்பிரைட் உரிமை தன்னிடம் இருப்பதாகவும், இதற்காக நடிகர் விமலிடம் பணம் கொடுத்ததாகவும் கூறி சிங்காரவேலன் தரப்பினர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தனர். 

    பின்னர் இயக்குனர் சற்குணம் தரப்பினர் இந்த தடையை உடைத்தனர். இருப்பினும் வழக்கு நிலுவையில் இருந்ததால் படத்தை வெளியிடுவதில் முட்டுக்கட்டை நீடித்தது. இந்நிலையில் இன்று நேரில் சந்தித்து கொண்ட விமல் மற்றும் சிங்காரவேலன் பிரச்சனையை பேசி தீர்த்து கொண்டனர்.



    சிங்காரவேலன் கொடுத்த பணத்திற்கு ஈடாக 2019 ஆம் ஆண்டிற்குள் இரண்டு படங்களில் நடித்து கொடுத்து விடுவதாக விமல் உத்தரவாத கடிதம் கொடுத்ததையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சிங்காரவேலன் தெரிவித்துள்ளார். இதனால் களவாணி - 2 படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கியிருக்கிறது.
    ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் சைபர் கிரைம் கலந்த திரில்லர் படத்தில் விஷால் ஜோடியாக சமந்தாவுக்கு பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருக்கிறார்.
    விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `இரும்புத்திரை'. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர். தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. திரைக்கதையும் தயாராகி வந்தது. தற்போது இரும்புத்திரை இரண்டாம் பாகத்துக்கான பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகை தேர்வு நடந்து வந்த நிலையில், விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    இதுகுறித்து ஷ்ரத்தாவிடம் கேட்ட போது, அவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் எழிலிடம் பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்குகிறார். 

    விஷால் நடிப்பில் அயோக்யா படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் இரும்புத்திரை 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்திலும் விஷால் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×