search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Anand"

  • இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
  • இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் தற்போது இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தில் சுஷ்மிதா அன்புசெழியன், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனீஷ்காந்த், மனோபாலா, பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.


  இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் சந்தானம் தொடங்கியுள்ளார். இதனை சந்தானம் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


  • நடிகர் விஜய் மாணவ- மாணவிகளுக்கு இன்று சான்றிதழ் வழங்கினார்.
  • இந்த நிகழ்வானது இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.

  தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.  விழாவில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சமுதாயத்தை தட்டி எழுப்பும் வகையில் விஜய்யின் சீரிய சிந்தனையில், உதிர்த்த கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட் டத்தை விஜய் நேரடியாக தொடங்கி வைப்பது நமக்கு பெருமை அளிக்கும் விஷயமாகும்.

  விஜய் எங்களுக்கு சொல்வது முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். அடுத்த படியாக தொழிலை பார்க்க வேண்டும். தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சதவீதமோ, 2 சதவீதமோ முடிந்தால் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும், கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்று சொல்லக்கூடிய ஒரே தலைவர் விஜய். இவ்வாறு அவர் பேசினார்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • அம்பேத்கர் பிறந்தாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  நாளை (ஏப்ரல் 14ம் தேதி) அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.  மாவட்ட செயலாளர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் இந்த செய்தியை குறுஞ்செய்தி மூலம் அவர் தெரிவித்துள்ளதாகவும், தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


  கோப்பு படம்
  கோப்பு படம்

  வருகிற 15ம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்டம் வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளது என்றும் இதன் மூலம் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நேரடி பயணம் மேற்கொள்கிறார் என்றும் பேசப்படுகிறது. இது விஜய்யின் அரசியல் நகர்வாக இருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

  ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் சைபர் கிரைம் கலந்த திரில்லர் படத்தில் விஷால் ஜோடியாக சமந்தாவுக்கு பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருக்கிறார்.
  விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `இரும்புத்திரை'. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர். தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

  இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. திரைக்கதையும் தயாராகி வந்தது. தற்போது இரும்புத்திரை இரண்டாம் பாகத்துக்கான பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகை தேர்வு நடந்து வந்த நிலையில், விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதுகுறித்து ஷ்ரத்தாவிடம் கேட்ட போது, அவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் எழிலிடம் பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்குகிறார். 

  விஷால் நடிப்பில் அயோக்யா படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் இரும்புத்திரை 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

  தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்திலும் விஷால் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் சைபர் கிரைம் கலந்த திரில்லர் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Irumbuthirai2 #Vishal
  விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர்.

  தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. திரைக்கதையும் தயாராகி வந்தது. தற்போது இரும்புத்திரை இரண்டாம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன. இந்த படத்தை இயக்குநர் எழிலிடம் பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்குகிறார்.  விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த நிலையில், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  விஷால் நடிப்பில் அயோக்யா படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிப்படாத படத்தில் நடித்து வருகிறார். #Irumbuthirai2 #Vishal #YuvanShankarRaja

  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் - சமந்தா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. #Irumbuthirai2 #Vishal
  விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர்.

  தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்துக்கு ஆந்திராவிலும் அமோக வரவேற்பு கிடைத்து வசூலை அள்ளியது. இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. திரைக்கதையும் தயாராகி வந்தது.  தற்போது இரும்புத்திரை இரண்டாம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன. இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்குகிறார். விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. 

  இதன் படப்பிடிப்பில் அடுத்த மாதத்தில் இருந்து விஷால் கலந்துகொள்கிறார். விஷால் நடிப்பில் அயோக்யா படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிப்படாத படத்தில் நடித்து வருகிறார். #Irumbuthirai2 #Vishal

  நார்வே நாட்டின் ஸ்டாவாங்கரில் நடைபெற்று வரும் அல்டிபாக்ஸ் நார்வே செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த்த டிரா செய்துள்ளார்.
  நார்வே நாட்டின் ஸ்டாவாங்கரில் அல்டிபாக்ஸ் நார்வே செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந்தேதி தொடங்கிய இந்த தொடர் ஜூன் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.

  பல சாம்பியன் பட்டங்களை வென்ற இந்தியாவின் விஸ்வநாத் ஆனந்த் தனது முதல் ஆட்டத்தில் திங்கட்கிழமை (28-ந்தேதி) அர்மெனியாவின் லெவோன் அரோனியனை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.  இந்நிலையில் 2-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டார். கருப்பு காய்களுடன் விளையாடிய ஆனந்த் 39 நகர்த்தலுக்குப் பின் டிரா செய்தார். இதனால் முதல் இரண்டு போட்டிகளையும் ஆனந்த் டிரா செய்துள்ளார்.

  தொடக்க சுற்றில் மேக்னஸ் கார்ல்சென் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். மற்ற அனைவரும் டிரா மட்டுமே செய்தனர். ஆனால் 2-வது சுற்றில் செர்ஜெய் கர்ஜாகின் எதிராக டிரா செய்தார்.
  ×