A Journey to happiness - நண்பன் ஒருவன் வந்த பிறகு டிரைலர் வெளியானது

ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு "நண்பன் ஒருவன் வந்தப் பிறகு" என தலைப்பிடப்பட்டுள்ளது.முழுக்கமுழுக்க இப்படம் இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ளது.
A Journey to happiness - நண்பன் ஒருவன் வந்த பிறகு டிரைலர் வெளியானது
Published on

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளியான மீசைய முறுக்கு படத்தில் நடித்து பலருக்கும் பரீட்சையமான முகமானார் ஆனந்த். இந்நிலையில் ஆனந்த் தற்பொழுது இயக்குனர் அவதாரத்தை எடுத்துள்ளார்.

ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு "நண்பன் ஒருவன் வந்தப் பிறகு" என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தில் ஆனந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருடன் பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், மோனிகா, யூடியூபர் இர்ஃபான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முழுக்கமுழுக்க இப்படம் இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் முக்கியமான இரண்டு பாடலை தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ்குமார் பாடியுள்ளனர்.

திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் ஒரு ஃபீல் குட் படத்துக்கான அனைத்து விஷயங்களும் அதில் அமைந்து இருக்கிறது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆனந்த இயக்குனராக அறிமுகமாகும் இப்படம் நல்ல வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com