search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதிஷ்டை"

    • ராமலிங்க பிரதிஷ்டை விழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
    • நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழா 3 நாட்கள் நடைபெறும்.

    27-ந் தேதி திட்டக்குடி சாலை சந்திப்பு அருகில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவில் பகுதியில் ராமனுக்கு முக்தி அளித்த நிகழ்ச்சி நடைபெறும். 28-ந் தேதி தனுஷ்கோடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோவிலில் விபிச னருக்கு முடி சூட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    29-ந் தேதி ராமநாதசுவாமி கோவிலில் ராமர் புறப்பாடாகி வீதி உலா வந்து ராமநாதசாமி கோவிலில் ஆஞ்சநேயர் வேடமணிந்து ஆக்ரோ சத்துடன் ராமநாதன் சன்னதியை சுற்றி வலம் வந்து ராமநாதசுவாமியை வணங்கி காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் மூலவர் சன்னதி யில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வழிபாடுகள் நடைபெறும். இரவு 8 மணிக்கு ராமர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து புறப்பாடாகி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    • வடரெங்கம் ரெங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
    • இக்கோயிலை 2-வது முறையாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பழமை வாய்ந்த வடரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

    இந்த கோயில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டு வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும்.

    இந்த கோயில் பஞ்சரங்கத்தில் ஒரு ரங்கமாக விளங்கி வருகிறது. கடந்த 1924ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கோயில் முழுவதும் மூழ்கியது

    இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் வடரங்கம் பகுதியிலேயே புதிய கோயிலை கட்டி அதில் வடரங்கநாதரை வைத்து தரிசனம் செய்து வந்தனர்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு இருகரைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    இதனால் கரையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த வடரங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இதுவரை 5 முறை ‌‌‌‌ தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் இக்கோயிலை 2வது முறையாக தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    • பல்வேறு கோவில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டன.
    • குதிரை விநாயகர், எலி விநாயகர், வீர விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 3 முதல் 7 அடி வரை உள்ள பலவண்ண நிறத்தில் பக்தர்களை கவரும் வகையில் இருந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.

    மயிலாடுதுறையில் 41 இடங்களில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் கரைக்கப்பட்டன.

    விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவ ட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பல்வேறு கோயில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபா ட்டிற்காக வைக்கப்பட்டன.

    மயிலாடுதுறையில் செம்மங்குளம் முனீஸ்வரர் ஆலயத்தில் எழுச்சி விநாயகர், மாயூரநாதர் கீழவீதி;

    பரிவார விநாயகர் மற்றும் காமதேனு விநாயகர், குதிரை விநாயகர், எலி விநாயகர், வீர விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 7 அடிவரை உள்ள பலவண்ண நிறத்தில் பக்தர்களை கவரும் வகையில்;

    விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் சரன்ராஜ் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைக்க ப்பட்டு வருகின்றன.

    மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் 3-ஆம் நாளான நேற்று ஊர்வமாக முக்கிய நகர சாலை வழியாக துலா கட்டம் வந்தடைந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளர் பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், இந்து முன்னணி பொதுச் செயலாளர் சுவாமிநாதன், முத்துக்குமார், பாஜக ஒருங்கிணைப்பாளர் நாஞ்சில் பாலு, நகர தலைவர் வினோத் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • பொன்காளியம்மன் கோவில், அஞ்சலக வீதி, வடுக பாளையம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • பல்லடம் நகர் முழுவதும் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டும் வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பொன்காளியம்மன் கோவில், அஞ்சலக வீதி, வடுக பாளையம், உள்ளிட்ட இடங்களில் சுமார் 100க்கும்மேற்பட்ட விநாயகர் சிலைகள், பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதற்கிடையே பல்லடம் போலீசார்,விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு அளித்தும், பல்லடம் நகர் முழுவதும் ரோந்து பணிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

    • ஒன்றியத்தில் 24 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
    • முக்கிய வீதிகளில் சென்று ரெயில்வே கேட் அருகில் உள்ள முள்ளி ஆற்றங்கரையில் விஜர்சனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் இந்து முன்னணி நடத்தும் சிம்ம விநாயகர் ஊர்வலம் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாளை விநாயகர் சதுர்த்தி அன்று காலை 6 மணிக்கு நகரில் மற்றும் ஒன்றியத்தில் 24 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும். பின்னர் 3-ந் தேதி மாலை 6 மணிக்கு அனைத்து விநாயகர்களும் திருத்துறைப்பூண்டி பிரவி மருந்தீஸ்வரர் கோவிலின் சன்னி தெருவில் இருந்து புறப்பட்டு நகரின் வழக்கமான பாதையில் முக்கிய வீதிகளில் சென்று ரெயில்வே கேட் அருகில் உள்ள முள்ளி ஆற்றங்கரையில் விஜர்சனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் விழா கமிட்டியான தமிழ் பால் சிவகுமார் பா.ஜ.க மாவட்ட துணை தலைவர் வினோத் மாவட்ட செயலாளர் இளசு மணி முன்னாள் மாவட்ட செயலாளர் மாதவன் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் பூபதி பா.ஜ.க ஒன்றிய தலைவர் பாலாஜி பா.ஜ.க முன்னாள் நகர தலைவர் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விக்னேஷ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், திருவாரூர் மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    • சிலைகளை நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
    • சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் உடுமலை ஆர்டிஓ. தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்நடந்தது. கூட்டத்திற்கு ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். டிஎஸ்பி .,தேன்மொழிவேல், ஆர்டிஓ. வின் நேர்முக உதவியாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பி. ஏ. பி. பொறியாளர், மின்வாரிய பொறியாளர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர், இந்து முன்னணி, இந்து சாம்ராஜ்யம் உள்ளிட்ட என்று அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆர்டிஓ. ஜஸ்வந்த்கண்ணன் பேசியதாவது:-

    விநாயகர் சிலை அமைப்பாளர்கள் சிலைகளை அமைப்பதற்கு அந்தந்த காவல் நிலையங்கள் மற்றும் ஆர்டிஓ. விடம் உரிய அனுமதி பெற வேண்டும். சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகளுக்கு நீர் நிலைகளை மாசு படுத்தாத இயற்கை வர்ணங்கள் மட்டுமே பூசப்பட்டு இருக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகளை பயன்படுத்தக் கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேலாக இருக்கக் கூடாது. விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்க கூடாது. இதர மத வழிபாட்டுத்தலங்கள் ,கல்வி நிலையங்கள் ,மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் சிலைகளை நிறுவுதல் கூடாது .சிலைகளை வைக்கும் அமைப்பினர் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் சிலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும். ஊர்வலத்தில் பங்கு ஏற்கும் சிலைகள் போலீசார் அனுமதி அளிக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட இடங்கள் வழியாக எந்த காரணத்தை கொண்டும் ஊர்வலம் செல்லக்கூடாது. தவறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊர்வலத்தில் பட்டாசு வெடிகள் போன்றவற்றை உபயோகிக்க கூடாது.

    ஊர்வலத்தின் போது பிற மதத்தினரை குறிப்பிட்டு அல்லது மற்றவர்களது மனம் புண்படியோ கோஷம் இடக்கூடாது. கரைப்பதற்காக விநாயகர் சிலைகளை நான்கு சக்கர வாகனங்களான மினி வேன், டிராக்டர் போன்றவற்றில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். மாட்டு வண்டி மற்றும் 3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்து செல்லக்கூடாது என ஆர்டிஓ. கூறினார்.

    • மணவாளக்குறிச்சி சிலைகள் சின்னவிளை கடலில் கரைக்கப்படுகிறது.
    • நாகர்கோவில் மாநகர் சிலைகள் சங்குத்துறை கடலில் கரைக்கப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட இந்து முன்னணி பொதுச்செய லாளர் ஆர்.கே.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவானது வருகிற 31-ந்தேதி அன்று மாவட்டம் முழுவதும் 5004 விநாயகர் சிலைகள் கோவில்கள். பொது இடங்கள், வீடுகளில் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர், பூஜையில் வைக்கப்பட்ட சிலைகள் கடல், ஆறு, அருவி உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    அதன்படி மணவாளக்கு றிச்சி பேரூராட்சிக்குட்பட்ட சிலைகள் வருகிற 3-ந்தேதி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து காலை 8.30 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 5.30 மணிக்கு சின்னவிளை கடலில் கரைக் கப்படுகிறது.

    நாகர்கோவில் மாநகர், ராஜாக்கமங்கலம் ஒன்றி யத்தில் வைக்கப்படும் சிலைகள் வருகிற 4-ந்தேதி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து மதியம் 2.30 மணிக்கு ஊர்வலமாக எடுத் துச் செல்லப்பட்டு சங்குத் துறை கடலில் கரைப்படுகிறது.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றியத் தில் வைக்கப்படும் சிலை கள் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் முன்பு இருந்து பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடலில் கரைக்கப்படும்.

    தோவாளை ஒன்றியத்தில் தோவாளை முருகன் கோவில் அடிவாரத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு ஞாலம் பள்ளி கொண்டான் அணையில் கரைக்கப்படுகிறது.

    குருந்தன்கோடு ஒன்றி யம், குளச்சல்நகர் பகுதி யில் வைக்கப்படும் சிலை கள் திங்கள்நகர் ராதா கிருஷ்ணன் கோவில் முன்பு இருந்தும், தக்கலை ஒன்றியம், பத்மநாபபுரம் நகர் பகுதிகளில் உள்ள சிலைகள் மதியம் 12 மணிக்குவைகுண்ட புரம் ராமர் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துசென்று மண்டைக்காடு கடலில் கரைக்கப்படுகிறது.

    திருவட்டார் ஒன்றி யத்தில் செருப்பாலூர் முத்தாரம்மன் கோவிலில் இருந்து காலை 10 மணிக்கு சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று திற்பரப்பு அருவியிலும், கிள்ளியூர் ஒன்றியத்தில் வைக்கப்படும் சிலைகள் கருங்கல் கூனாலு மூடுதர்ம சாஸ்தா கோவிலில் இருந்து காலை 10 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல் லப்பட்டு மிடாலம் கடலில் கரைக்கப்படுகிறது

    மேல்புறம் ஒன்றியத்தில் அளப்பன்கோடு ஈஸ்வரன் கால பூதத்தான் கோவிலில் இருந்து காலை 10 மணிக்கு ஊர்வலமாக சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும், முன்சிறை ஒன்றியம், கொல்லங்கோடு நகர் பகுதி சிலைகள் மதியம் 2 மணிக்கு அஞ் சுகண்ணுகலுங்கு மாடன் தம்புரான் இசக்கி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வல மாகஎடுத்துச் செல்லப்பட்டு தேங்காப்பட்டணம் கடலி லும், குழித்துறை நகர் பகுதி யில் வைக்கப்படும் சிலைகள் காலை 10 மணிக்கு பம்மம் பகுதியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • இந்து அமைப்புகளுடன் அதிகாரிகள் ஆலோசனை
    • வழிபாட்டு ஸ்தலங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அமைதியாக செல்ல வேண்டும்.

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும்.

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண் டாடப்படும். வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படு வதையடுத்து இந்து அமைப் புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு தயாராகி வருகிறார்கள். இந்து முன்னணி, பாரதிய ஜனதா இந்து மகா சபா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்படுகிறது.

    பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 2, 3, 4-ந் தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படு கிறது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் சிலை களை கரைப்பது தொடர் பாக இந்த அமைப்புகளு டன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    விநாயகர் சிலைகளை ஏற்கனவே பிரதிஷ்டை செய்த இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்யவேண்டும். புதிய இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. 10 அடி உயரத்திற்கு மேல் சிலைகள் பிரதிஷ்டை செய்யக்கூடாது. சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் ஒரு குழு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    போலீசாரின் அனுமதி பெற்ற பின்னரே சிலை களை பிரதிஷ்டை செய்ய வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி கிடையாது.மக்கும் பொருட்களால் ஆன சிலைகளை மட்டுமே பூஜைக்கு வைக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன.

    வழிபாட்டு ஸ்தலங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அமைதியாக செல்ல வேண்டும். சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அதற்கென்று ஒதுக்கப்பட்ட பாதையின் வழியாக மட்டுமே செல்ல வேண்டும். கூம்பு வடிவ ஒளிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.மக்காத பொருட்களால் செய்த விநாயகர் சிலைகளை கடலில் நீர் நிலைகளிலும் வீசக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் இடங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அந்தந்த பேரூராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வாங்கி செல்கிறார்கள்.

    • தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
    • திருப்பூா் மாநகரில் செப்டம்பா் 3ந் தேதி விநாயகா் விசா்ஜனம் நடைபெறும்.

    திருப்பூர் :

    இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியதாவது: தமிழகத்தில் விநாயா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் நிகழாண்டு 1.25 லட்சம் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இதில் திருப்பூா் மாநகரில் 1,200 மற்றும் மாவட்டத்தில் 3,800 என மொத்தம் 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

    திருப்பூா் மாநகரில் வரும் செப்டம்பா் 3ந் தேதி நடைபெறும் விநாயகா் விசா்ஜன பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.மாநிலத் தலைவா் அண்ணாமலை பிரிவினைவாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளா்ப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

    காங்கயம் பகுதியில் காங்கயம் நகர், நத்தக்காடையூர், படியூர், காங்கயம்பாளையம், காடையூர் உள்ளிட்ட 60 இடங்களில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் (செப்டம்பர்) 1-ந்தேதி அனைத்து சிலைகளும் உடையார் காலனிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊர்வலம் தொடங்குகிறது. முக்கிய வீதிகள் வழியாக செல்லும் ஊர்வலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நிறைவடைகிறது. பின்னர் அனைத்து சிலைகளும் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் வடக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில், வடக்கு பகுதி விசர்ஜன ஊர்வலம் துவக்கும் விழா குறித்த ஆலோசனை கூட்டம் மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் பெரியார் காலனியில் நடந்தது. மாநில செயலாளர்கள் செந்தில்குமார், சேவுகன், கோட்ட செயலாளர் மோகனசுந்தரம் உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வரும் 25ந் தேதி, ஒவ்வொரு விநாயகர் கமிட்டிக்கும், 5 பேர் வீதம், புதிய பஸ் நிலையம், கோட்டை ஈஸ்வரன் கோவிலில் மாலை போட்டு, காப்பு கட்டி விரதம் துவக்கம், செப்டம்பர் 3-ந் தேதி விசர்ஜன ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், பிரம்மாண்டமான ரதங்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு குழு அமைப்பது ஆகியன குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மேலூரில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்து மகா சபா அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் நடந்தது.

    மேலூர்

    மேலூர் கூத்தப்பன்பட்டி ரோட்டில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் நடந்தது. மாநில துணைத்தலைவர் பெரி செல்லத்துரை கலந்து கொண்டார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள சிதிலமடைந்த கோவில்களை புனரமைக்க வேண்டும், அதற்குண்டான நிதியை உடனடியாக அரசு வழங்க வேண்டும், கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

    இந்துக்களின் ஆலய சொத்து, ஆலய வருமானம் முழுவதும் இந்துக்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமே பயன்பட வேண்டும், வருகிற 31-ந்ேததி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு முதல் நாள் 30-ந்தேதி தேதி மேலூர் நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு அடி முதல் 9 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் 1008 இடங்களில் பிரதிஷ்டை செய்து 3 நாள் பூஜை விழா நடத்தி 1-ந்தேதி மாலை வழக்கம்போல் ஊர்வலமாக சென்று மண் கட்டி தெப்பக்குளத்தில் சிலைகளை கரைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இதில் மாவட்ட அர்ச்சகர் பேரவை தலைவர் தெய்வேந்திரன், நிர்வாகிகள் வெள்ளைத்தம்பி, கார்த்திகேயன், ரவிச்சந்திரன், ராஜா, ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாளவாடி, புளியம் பட்டி,–சத்திய–மங்கலம், நம்பியூர்,–கோபி,அத்தாணி, அந்தியூர், அம்மாபேட்டை,பவானி மற்றும் கவுந்தப்பாடி உட்பட 14 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விஷர்சன ஊர்வலம் நடைபெறும்.
    • பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொறுப்பாளர் எச். ராஜாவும் கலந்து கலந்து–கொண்டு சிறப்புரையாற்று–கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் குருசாமி தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீதர் முன்னி லையில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர் செந்தில்குமார் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியானது பிரிவினை வாதத்தை முறி–யடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம். என்ற நோக்கத்தில் விழா கொண்டாடப்படும். இதில் கடந்த ஆண்டுகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை வழிபாடுகள் தொடரும். மேலும் பல்வேறு புதிய இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விழா நடைபெறும்.

    இந்த ஆண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் காகித கூழ், கிழங்கு மாவால் செய்ய ப்பட்டு வாட்டர் கலர் மூலம் வர்ணம் பூசப்பட்ட 3 அடி முதல் 11 அடி உயரம் வரை விநாயகர் திருமேனி தயாரிப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஈரோடு மேற்கு மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் விநாயகர் திருமேனி பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி விழா–வானது வருகிற 31-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 6 -ந் தேதி வரை நடைபெறும்.

    குறிப்பாக தாளவாடி, புளியம் பட்டி,–சத்திய–மங்கலம், நம்பியூர்,–கோபி,அத்தாணி, அந்தியூர், அம்மாபேட்டை,பவானி மற்றும் கவுந்தப்பாடி உட்பட 14 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விஷர்சன ஊர்வலம் நடைபெறும். குறிப்பாக தாளவாடியில் நடைபெறும் விழாவிற்கு தென் பாரத அமைப்பாளர் ஜெகதீஷ் கரனும், புளியம் பட்டியில் நடைபெறும் விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொறுப்பாளர் எச். ராஜாவும் கலந்து கலந்து–கொண்டு சிறப்புரையாற்று–கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    • 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாட்டுக்கு வைக்கப்பட உள்ளது.
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் தாயுமானவர் சுவாமி கோவில் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி பொது செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை- பூஜைகள் செய்து வழிபாட்டுக்கு வைக்கப்பட உள்ளது.

    இந்த சிலைகளுடன் செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, பரமக்குடி, உச்சிப்புளி, ஏர்வாடி, தேவிபட்டினம், சாயல்குடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளது.

    இந்த வருடம் விநாயகர் சிலைகள் அரசின் சுற்றுச்சூழல்துறை விதி–களுக்கு உட்பட்டு எளிதில் கரையக்கூடிய சிலைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் பிரிவினை வாதத்தை முறியடிப்போம்.

    தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற பொருளுடன் விழா நடை–பெறுகிறது. இந்துக்களின் ஒற்றுமை திருவிழாவாகவும், இந்துக்களின் எழுச்சி விழாவாகவும் விநாயாகர் சதுர்த்தியை கொண்டாட உள்ளோம். இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நிர்வாகத்திடம் ஒத்துழைப்பு அளித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் தாயுமானவர் சுவாமி கோவில் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    ×