search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 அடி உயர விநாயகர் சிலைகளை மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும் - உடுமலை ஆர்.டி.ஓ., விளக்கம்
    X

    ஆர்டிஓ. தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்ற காட்சி.

    10 அடி உயர விநாயகர் சிலைகளை மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும் - உடுமலை ஆர்.டி.ஓ., விளக்கம்

    • சிலைகளை நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
    • சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் உடுமலை ஆர்டிஓ. தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்நடந்தது. கூட்டத்திற்கு ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். டிஎஸ்பி .,தேன்மொழிவேல், ஆர்டிஓ. வின் நேர்முக உதவியாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பி. ஏ. பி. பொறியாளர், மின்வாரிய பொறியாளர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர், இந்து முன்னணி, இந்து சாம்ராஜ்யம் உள்ளிட்ட என்று அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆர்டிஓ. ஜஸ்வந்த்கண்ணன் பேசியதாவது:-

    விநாயகர் சிலை அமைப்பாளர்கள் சிலைகளை அமைப்பதற்கு அந்தந்த காவல் நிலையங்கள் மற்றும் ஆர்டிஓ. விடம் உரிய அனுமதி பெற வேண்டும். சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகளுக்கு நீர் நிலைகளை மாசு படுத்தாத இயற்கை வர்ணங்கள் மட்டுமே பூசப்பட்டு இருக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகளை பயன்படுத்தக் கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேலாக இருக்கக் கூடாது. விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்க கூடாது. இதர மத வழிபாட்டுத்தலங்கள் ,கல்வி நிலையங்கள் ,மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் சிலைகளை நிறுவுதல் கூடாது .சிலைகளை வைக்கும் அமைப்பினர் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் சிலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும். ஊர்வலத்தில் பங்கு ஏற்கும் சிலைகள் போலீசார் அனுமதி அளிக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட இடங்கள் வழியாக எந்த காரணத்தை கொண்டும் ஊர்வலம் செல்லக்கூடாது. தவறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊர்வலத்தில் பட்டாசு வெடிகள் போன்றவற்றை உபயோகிக்க கூடாது.

    ஊர்வலத்தின் போது பிற மதத்தினரை குறிப்பிட்டு அல்லது மற்றவர்களது மனம் புண்படியோ கோஷம் இடக்கூடாது. கரைப்பதற்காக விநாயகர் சிலைகளை நான்கு சக்கர வாகனங்களான மினி வேன், டிராக்டர் போன்றவற்றில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். மாட்டு வண்டி மற்றும் 3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்து செல்லக்கூடாது என ஆர்டிஓ. கூறினார்.

    Next Story
    ×