search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 5000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    X

    கோப்புபடம்.

    இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 5000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

    • தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
    • திருப்பூா் மாநகரில் செப்டம்பா் 3ந் தேதி விநாயகா் விசா்ஜனம் நடைபெறும்.

    திருப்பூர் :

    இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியதாவது: தமிழகத்தில் விநாயா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் நிகழாண்டு 1.25 லட்சம் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. இதில் திருப்பூா் மாநகரில் 1,200 மற்றும் மாவட்டத்தில் 3,800 என மொத்தம் 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

    திருப்பூா் மாநகரில் வரும் செப்டம்பா் 3ந் தேதி நடைபெறும் விநாயகா் விசா்ஜன பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.மாநிலத் தலைவா் அண்ணாமலை பிரிவினைவாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளா்ப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

    காங்கயம் பகுதியில் காங்கயம் நகர், நத்தக்காடையூர், படியூர், காங்கயம்பாளையம், காடையூர் உள்ளிட்ட 60 இடங்களில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் (செப்டம்பர்) 1-ந்தேதி அனைத்து சிலைகளும் உடையார் காலனிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊர்வலம் தொடங்குகிறது. முக்கிய வீதிகள் வழியாக செல்லும் ஊர்வலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நிறைவடைகிறது. பின்னர் அனைத்து சிலைகளும் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் வடக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில், வடக்கு பகுதி விசர்ஜன ஊர்வலம் துவக்கும் விழா குறித்த ஆலோசனை கூட்டம் மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் பெரியார் காலனியில் நடந்தது. மாநில செயலாளர்கள் செந்தில்குமார், சேவுகன், கோட்ட செயலாளர் மோகனசுந்தரம் உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வரும் 25ந் தேதி, ஒவ்வொரு விநாயகர் கமிட்டிக்கும், 5 பேர் வீதம், புதிய பஸ் நிலையம், கோட்டை ஈஸ்வரன் கோவிலில் மாலை போட்டு, காப்பு கட்டி விரதம் துவக்கம், செப்டம்பர் 3-ந் தேதி விசர்ஜன ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள், பிரம்மாண்டமான ரதங்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு குழு அமைப்பது ஆகியன குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×