search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய கட்டுப்பாடு
    X

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய கட்டுப்பாடு

    • இந்து அமைப்புகளுடன் அதிகாரிகள் ஆலோசனை
    • வழிபாட்டு ஸ்தலங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அமைதியாக செல்ல வேண்டும்.

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும்.

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண் டாடப்படும். வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படு வதையடுத்து இந்து அமைப் புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு தயாராகி வருகிறார்கள். இந்து முன்னணி, பாரதிய ஜனதா இந்து மகா சபா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய் யப்படுகிறது.

    பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 2, 3, 4-ந் தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படு கிறது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் சிலை களை கரைப்பது தொடர் பாக இந்த அமைப்புகளு டன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    விநாயகர் சிலைகளை ஏற்கனவே பிரதிஷ்டை செய்த இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்யவேண்டும். புதிய இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. 10 அடி உயரத்திற்கு மேல் சிலைகள் பிரதிஷ்டை செய்யக்கூடாது. சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் ஒரு குழு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    போலீசாரின் அனுமதி பெற்ற பின்னரே சிலை களை பிரதிஷ்டை செய்ய வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி கிடையாது.மக்கும் பொருட்களால் ஆன சிலைகளை மட்டுமே பூஜைக்கு வைக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன.

    வழிபாட்டு ஸ்தலங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அமைதியாக செல்ல வேண்டும். சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அதற்கென்று ஒதுக்கப்பட்ட பாதையின் வழியாக மட்டுமே செல்ல வேண்டும். கூம்பு வடிவ ஒளிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.மக்காத பொருட்களால் செய்த விநாயகர் சிலைகளை கடலில் நீர் நிலைகளிலும் வீசக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் இடங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அந்தந்த பேரூராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வாங்கி செல்கிறார்கள்.

    Next Story
    ×