search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    X

    இந்து மகா சபா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

    1008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

    • மேலூரில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்து மகா சபா அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் நடந்தது.

    மேலூர்

    மேலூர் கூத்தப்பன்பட்டி ரோட்டில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் நடந்தது. மாநில துணைத்தலைவர் பெரி செல்லத்துரை கலந்து கொண்டார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள சிதிலமடைந்த கோவில்களை புனரமைக்க வேண்டும், அதற்குண்டான நிதியை உடனடியாக அரசு வழங்க வேண்டும், கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

    இந்துக்களின் ஆலய சொத்து, ஆலய வருமானம் முழுவதும் இந்துக்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமே பயன்பட வேண்டும், வருகிற 31-ந்ேததி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு முதல் நாள் 30-ந்தேதி தேதி மேலூர் நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு அடி முதல் 9 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் 1008 இடங்களில் பிரதிஷ்டை செய்து 3 நாள் பூஜை விழா நடத்தி 1-ந்தேதி மாலை வழக்கம்போல் ஊர்வலமாக சென்று மண் கட்டி தெப்பக்குளத்தில் சிலைகளை கரைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இதில் மாவட்ட அர்ச்சகர் பேரவை தலைவர் தெய்வேந்திரன், நிர்வாகிகள் வெள்ளைத்தம்பி, கார்த்திகேயன், ரவிச்சந்திரன், ராஜா, ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×