search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலம்"

    • திருமணத்திற்கு முன்பு சஞ்சய் தனது காதலியிடம் உனக்கு நிலாவில் நிலம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தாராம்.
    • காதல் மனைவிக்கு நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி மனைவிக்கு பிறந்தநாள் பரிசளித்துள்ளார்.

    மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மகாட்டோ. இவர் காதல் திருமணம் செய்தவர். திருமணத்திற்கு முன்பு சஞ்சய் தனது காதலியிடம் உனக்கு நிலாவில் நிலம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தாராம். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் காதலியை கரம் பிடித்தார்.

    இந்நிலையில் தனது வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் சஞ்சய் தனது காதல் மனைவிக்கு நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி மனைவிக்கு பிறந்தநாள் பரிசளித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் கூறுகையில், திருமணத்துக்கு முன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக தனது மனைவிக்கு நிலாவில் இடம் வாங்கி பரிசளிக்க திட்டமிட்டேன். இதுதொடர்பாக எனது நண்பர்களிடம் ஆலோசித்தேன். அவரது உதவியுடன் லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் நிலாவில் நிலம் வாங்கினேன். பின்னர் நிலம் வாங்கியதற்கான பதிவு சான்றை எனது மனைவியிடம் கொடுத்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாக கூறினார்.

    • ரமேஷ் பால்துரைக்கு சொந்தமான நிலம் ஆலங்குளம்-நெல்லை சாலையில் உள்ளது.
    • சாலை அமைக்க வந்த ஊழியர்களை ரமேஷ் பால்துரை தடுத்து நிறுத்தினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பால்துரை(வயது 41). இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் ஆலங்குளம்-நெல்லை சாலையில் உள்ளது.

    இதில் முகப்பு பகுதியில் உள்ள குறைந்த அளவு நிலத்தை நான்கு வழச்சாலை விரிவாக்க பணிக்கு கையகப்படுத்தப்பட்டதாகவும், இதுவரை நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் அந்த இடத்தில் சாலை அமைக்க வந்த ஊழியர்களை ரமேஷ் பால்துரை தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து அவர் தனது குடும்பத்தினருடன் கருப்புக் கொடியுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    உடனே ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல், சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் நான்கு வழிச்சாலை திட்ட அலுவலர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய ஆவணங்கள் சமர்பிக்குமாறும், மறுநாளே இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தர்ணாவைக் கைவிட்டார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் 2 ஏக்கர் நிலத்தை பரமத்தி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க தானமாக வழங்கினர்.
    • போலி பத்திரம் பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், மேலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டி மனு அளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் கடந்த 1998 இல் அசோகன், சண்முகம், தியாகராஜன், நவக்குமார், ரத்தினகுமார், துரைசாமி, மூர்த்தி, பாலசுப்பிரமணி, பழனியாண்டி கோபால், நரசிம்மன், பாப்பாயி ஆகிய 12 பேர் தங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை பரமத்தி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க தானமாக வழங்கினர்.

    அப்போது பரமத்தியை சேர்ந்த 4 நபர்கள் தனக்கு இந்த இடத்தில் உரிமை உள்ளது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 24 ஆண்டு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

    கடந்த ஜூலை 24 -ந்தேதி பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் தாமாக கொடுத்த நிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான என தீர்ப்பளித்தார்.

    இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட பதிவாளரிடம் பரமத்தி சேர்ந்த கார்த்தி கேயன் என்பவர் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் அரசு பள்ளிக்கு தானமாக கொடுத்த இடத்தில் தனக்கு சொந்தமென போலி பத்திரம் பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், மேலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டி மனு அளித்தார்.

    இந்த மனுவை நாமக்கல் மாவட்ட பதிவாளர் சந்தானம் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதில் தவறான சந்ததிகளை தெரிவித்து பதிவு செய்யப்பட்ட மேற்படி நான்கு பத்திர பதிவுகள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் ரத்து செய்யப்பட்ட மேற்கண்ட ஆவணங்களை கொண்டு ஆவணங்கள் ஏதேனும் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டால் பதிவுக்கு அனுமதிக்காமல் ஆவணத்தை மறுத்தலிப்பு செய்ய சார் பதிவாளருக்கு ஆணை இடப்படுகிறது.

    மேலும் புகாருக்கு உண்டான ஆவணத்தில் சம்பந்தப்பட்ட நபர்களில் மீது பதிவுச் சட்டம் 63 கீழ் நடவடிக்கை எடுத்து காவல்துறையினிடம் புகார் செய்து குற்ற வழக்கு தொடர பரமத்தி சார்பதிவாளருக்கு ஆணை இடப்படுகிறது இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சர்வேயர் மற்றும் சர்தார் பணியிட ங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை 2022-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி வெளியிட்டது.
    • வேலைவாய்ப்பை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தியதற்காக என்.எல்.சி. நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

    கடலூர்:

    என்.எல்.சி. இந்தியா நிறுவனம், 192 காலியிட ங்களுக்கான ஓவர்மேன், சர்வேயர் மற்றும் சர்தார் பணியிட ங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை2022-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி வெளியிட்டது. முதன்முறையாக, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, ஆட்சேர்ப்பு தேர்வில் 20 சலுகை மதிப்பெண்களை என்.எல்.சி. அறிவித்தது. இந்த வகையில் ஆட்சேர்ப்புச் சலுகை மதிப்பெண் காரணமாக, நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள, நெய்வேலி சுரங்கங்களுக்காக நிலம் கொடுத்து பாதிக்க ப்பட்ட 39 பேர், ஓவர்மேன், சர்வேயர் மற்றும் சர்தார் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட 39 பேர்களும் என்.எல்.சி . நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்த, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட 39 பேர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படு த்தியதோடு, திட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தியதற்காக என்.எல்.சி. நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். இத் தகவலை என்.எல்.சி. மக்கள் மேம்பாட்டு துறை தலைமை மேலாளர் தெரிவித்துள்ளார்.

    • உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த ஜனகராஜ் உள்பட 15 பேர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • எங்கள் 15 பேருக்கு சொந்தமான அந்த நிலத்தை நெத்திமேடு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அபகரித்துக் கொண்டு வேலி போட்டு உள்ளார்.

    சேலம்:

    சேலம் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த ஜனகராஜ் உள்பட 15 பேர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவல கத்தில் மனு கொடுத்துவிட்டு அவர்கள் கூறியதாவது,

    சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் 56 சென்ட் நிலம் உள்ளது. எங்கள் 15 பேருக்கு சொந்தமான அந்த நிலத்தை நெத்திமேடு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அபகரித்துக் கொண்டு வேலி போட்டு உள்ளார்.

    இது குறித்து கேட்டபோது 100-க்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்து எங்களை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். தி.மு.க. பிரமுகர் என்பதால் எங்கு சென்று புகார் தெரிவித்தாலும் நட வடிக்கை எடுக்க மாட்டார்கள் என மிரட்டுகிறார்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத் தந்து கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பெரியவடகரை கிராமத்தில் ஆக்கிரமிப்பு கோயில் நிலம் மீட்கப்பட்டது
    • கோவில் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரியவடகரை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த அய்யனார் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோவில் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில் உதவி ஆணையர் லெட்சுமணன் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் (கோவில் நிலம்) பிரகாசம் தலைமையில் சர்வேயர் கண்ணதாசன், வக்கீல், விஏஒ மற்றும் கோயில் பணியாளர்கள் கொண்ட குழுவினர் சென்று கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளந்து மீட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • கோவையில் உள்ள அரசு வங்கியில் இவரது நில பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
    • 50 சதவீதம் வரை திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சின்னிய கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தனபால்(வயது 48) .இவர் கோவையில் உள்ள அரசு வங்கியில் இவரது நில பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

    இதில் சுமார் 50 சதவீதம் வரை திருப்பி செலுத்தியதாகவும், கொரோனா காலகட்டத்தில் சரியாக வியாபாரம் நடக்காததால் பணத்தை திருப்பி கட்ட முடியாததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், வங்கி நிர்வாகத்தினர் நிலத்தை கையகப்படுத்த வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி நிர்வாகத்தை முற்றுகையிட்டு தனபால் மற்றும் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த, திருப்பூர் மாவட்ட போலீஸ் இணை சூப்பிரண்டு முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் இருதரப்பினிடையே பேச்சுவார்த்தை நடத்தி முறையான ஆவணங்களுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியதை அடுத்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.

    • கோண மடுவு பகுதியில் 1.70 ஏக்கர் நிலத்தில் கடந்த 40 வருடமாக விவசாயம் செய்து வருகிறேன்.
    • இந்த நிலையில் திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் போலியான ஆவணங்களை தயாரித்து எனது நிலத்தை அபகரித்துக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே கோணமடுவு, குரால்நத்தம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    காவல்துறை அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்துவிட்டு குப்புசாமி கூறியதாவது:-

    கோண மடுவு பகுதியில் 1.70 ஏக்கர் நிலத்தில் கடந்த 40 வருடமாக விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலையில் திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் போலியான ஆவணங்களை தயாரித்து எனது நிலத்தை அபகரித்துக் கொண்டார்.

    இது குறித்து நாகராஜிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும், அடித்தும், கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் எங்களால் விவசாயம் செய்ய முடியாமல், வாழ முடியாமல் தவித்து வருகிறோம். நாகராஜ் என்பவரால் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல் உள்ளது.

    இது குறித்து பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    • நிகழ்ச்சியில் 7 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டது.
    • பயனாளிகளுக்கு கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சியில் இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தலைமை தாங்கி சபரி நகர், மேட்டூர், ஸ்டாலின் நகர், கானாவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 பேருக்கு இலவச பட்டாக்களை வழங்கினார். கிராம நிர்வாக அதிகாரி அரிகரன் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகியும், தொழிலதிபருமான பரமசிவன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நிலத்தை சமன் செய்யும் போது டிராக்டர் பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது.
    • தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகின்றார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி ஜாலி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). விவசாயி.

    அதே பகுதியில் உள்ள பாண்டியன் நகர் கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). இவர் டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சரவணனுக்கு சொந்தமான ஜாலிகொட்டாய் பகுதியில் உள்ள விவசாய நிலத்தை டிராக்டர் கொண்டு நேற்று மாலை சமன் செய்து கொண்டு இருந்தார். 1/2 ஏக்கர் நிலம் சமன் செய்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள நிலத்தை சமன் செய்யும் போது டிராக்டர் பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது.

    அப்பொழுது முருகன் டிராக்டரை நிறுத்திவிட்டு பின்னால் வந்து கலப்பையை சரி செய்யும் பொழுது கலப்பைக்குள் மாட்டி வெளியே வரமுடியாமல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • பெரியம்மாபாளையத்தில் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது
    • இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெரியம்மாபாளையம கிராமத்தில் அமைந்துள்ள 0.88 சென்ட் நிலம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் செல்வராஜூக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் தேவி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெரியம்மாபாளையம் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ரூ.25 லட்சம் மதிப்பிலான மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    நிலத்தை விற்பதாக கூறி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை

    மதுரை அலங்காநல்லூர், சேட்டு கடையைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது 31). வாடிப்பட்டி தாமோதரன் மனைவி பவித்ரா என்பவருக்கு சொந்தமாக தாத்தாம்பட்டியில் 1.8 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை வாங்குவதற்காக மீனாட்சிசுந்தரம், பவித்ரா உள்பட சிலருடன் ஒப்பந்தம் செய்து இருந்தார். 

    இதற்காக அவர் முன்பணமாக ரூ.9.90 லட்சம் கொடுத்து உள்ளார். இதனை பெற்றுக் கொண்ட அவர்கள் நிலத்தை பதிவு செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக மீனாட்சிசுந்தரம், மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மீனாட்சி சுந்தரத்திடம் ரூ.9.90 லட்சம் வாங்கிக் கொண்டு நிலத்தை பதிவு செய்து கொடுக்காத விவரம் தெரியவந்தது. 


    இதனை தொடர்ந்து கொழிஞ்சிப்பட்டி பிரபு (25) என்பவரை கைது போலீசார் செய்தனர்.  மேலும் அவரிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தவிர குமாரம் பாஸ்கர், அவரது மகன் செந்தில், தெத்தூர் தினேஷ்பாபு, பவித்ரா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ×