search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலா"

    • சந்திரனின் சுற்றுச்சூழல் கிட்டத்தட்ட 200 டிகிரி உறைபனி தட்பநிலையால் சூழப்பட்டு இருக்கும்.
    • லேண்டர் மற்றும் ரோவர் நாளை உறக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டு விழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்த சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் கடந்த 15 நாட்களாக உறக்க நிலையில் உள்ளன.

    சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும் போது, அவற்றின் செயல்பாட்டு நிலைமைகள் மேம்படும். 14 நாட்கள் நீடித்த சந்திர இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் கிட்டத்தட்ட 200 டிகிரி உறைபனி தட்பநிலையால் சூழப்பட்டு இருக்கும்.

    இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் அவற்றை உறக்க நிலைக்கு இஸ்ரோ கொண்டு சென்றது. இந்நிலையில், நிலவின் அடுத்த சூரிய உதயம் நாளை(வெள்ளிக்கிழமை) நிகழ்கிறது. இதையொட்டி லேண்டர் மற்றும் ரோவர் நாளை உறக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டு விழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி, செயல்பாட்டிற்கு வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதற்கான பணிகளை விஞ்ஞானிகள் தொடங்கி உள்ளனர். லேண்டர், ரோவர் மீண்டும் விழித்து ஆய்வில் ஈடுபடும் பட்சத்தில் நிலவின் தென் துருவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் உலகுக்கு இஸ்ரோ மூலமாக கிடைக்கும்.

    • திருமணத்திற்கு முன்பு சஞ்சய் தனது காதலியிடம் உனக்கு நிலாவில் நிலம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தாராம்.
    • காதல் மனைவிக்கு நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி மனைவிக்கு பிறந்தநாள் பரிசளித்துள்ளார்.

    மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மகாட்டோ. இவர் காதல் திருமணம் செய்தவர். திருமணத்திற்கு முன்பு சஞ்சய் தனது காதலியிடம் உனக்கு நிலாவில் நிலம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தாராம். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் காதலியை கரம் பிடித்தார்.

    இந்நிலையில் தனது வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் சஞ்சய் தனது காதல் மனைவிக்கு நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி மனைவிக்கு பிறந்தநாள் பரிசளித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் கூறுகையில், திருமணத்துக்கு முன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக தனது மனைவிக்கு நிலாவில் இடம் வாங்கி பரிசளிக்க திட்டமிட்டேன். இதுதொடர்பாக எனது நண்பர்களிடம் ஆலோசித்தேன். அவரது உதவியுடன் லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் நிலாவில் நிலம் வாங்கினேன். பின்னர் நிலம் வாங்கியதற்கான பதிவு சான்றை எனது மனைவியிடம் கொடுத்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாக கூறினார்.

    • திருமணத்திற்கு முன்பு நிலவை பரிசளிப்பதாக மனைவிக்கு வாக்குறுதி.
    • லூனா சொசைட்டி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் நிலவில் நிலம் வாங்கியுள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மஹாட்டோ. இவர் தனது மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை ரூ. 10 ஆயிரத்திற்கு வாங்கியதாக அவர் தெரிவித்து உள்ளார். மேலும் திருமணத்திற்கு முன்பு நிலவை பரிசளிப்பதாக சஞ்சய் தனது மனைவியிடம் வாக்குறுதி அளித்து இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.

    இதுபோன்ற பரிசை வாங்க வேண்டும் என்ற ஆசை, இந்தியா நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் தான் வந்தது என்று சஞ்சய் மேலும் தெரிவித்தார். சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற பிறகு, தன்னால் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியை செய்துகாட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

     

    நானும், எனது மனைவியும் நீண்ட காலம் காதலித்து, கடந்த ஏப்ரல் மாதம் தான் திருமணம் செய்து கொண்டோம். நான் அவரிடம் நிலவை கொண்டுவருவதாக தெரிவித்து இருந்தேன். ஆனால், என்னால் அப்படி செய்ய முடியவில்லை. தற்போது எங்களது திருமணத்திற்கு பிறகு வந்த அவளின் முதல் பிறந்தநாளில், நான் அவருக்கு நிலவில் இடம் வாங்கி பரிசளிக்க வேண்டும் என நினைத்தேன்," என்று சஞ்சய் மஹாட்டோ தெரிவித்து உள்ளார்.

    தனது நண்பர் உதவியுடன், லூனா சொசைட்டி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் நிலவில் நிலம் வாங்கியதாக சஞ்சய் தெரிவித்தார். இதற்கான வழிமுறைகள் நடைபெற்று முடிய ஒரு ஆண்டுகாலம் ஆனதாக அவர் மேலும் தெரிவித்தார். நிலம் வாங்கியதற்கான பதிவு சான்றையும் சஞ்சய் மஹோட்டா தன்னிடம் வைத்திருக்கிறார்.

    முன்னதாக 2020 ஆண்டு வாக்கில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரை சேர்ந்த நபர் தர்மேந்திர அனிஜா, தனது மனைவிக்கு நிலவில் மூன்று ஏக்கர் நிலத்தை பரிசாக கொடுத்தார். தனது எட்டாது திருமண நாளை கொண்டாடும் வகையில், மனைவிக்கு நிலவில் நிலத்தை பரிசளித்ததாக அவர் தெரிவித்து இருந்தார்.

    • பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும்
    • சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது

    உலகின் முன்னணி நாடுகள், நிலவில் உள்ள வளங்களை கண்டறிவது உட்பட பல காரணங்களுக்காக நிலவிற்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சிகளை செய்கின்றன.

    1959லிருந்து 1976 வரை ரஷியா நிலவிற்கு ரோபோ விண்கலங்களை தொடர்ச்சியாக அனுப்பி வந்தது. இவற்றில் 15 வெற்றிகரமாக நடந்தது. ரஷியாவின் லூனா எனும் இத்திட்டம், மேற்கத்திய நாடுகளால் லுனிக் என அழைக்கப்படுகிறது.

    சுமார் அரை நூற்றாண்டு கழித்து மீண்டும் நிலவிற்கு ரஷியா ஒரு விண்கலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக, தனது நாட்டின் கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தை ரஷியா ஆகஸ்ட் 11 அன்று காலி செய்ய இருக்கிறது.

    1976க்கு பிறகு ரஷியா நிலவிற்கு அனுப்பவிருக்கும் இந்த லூனா-25 எனப்படும் லேண்டர் விண்கலம், மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் எனும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் என்று அந்நாட்டின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    லூனா-25 லேண்டர் விண்கலத்தை சோயுஸ்-2 ஃப்ரிகாட் எனும் ராக்கெட் பூஸ்டர் சுமந்து செல்லும். விண்கலத்தை தாங்கி செல்லும் ராக்கெட்டிலிருந்து பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், ஏவுதளத்திற்கு தென்கிழக்கே ரஷியாவின் கபரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஷக்டின்ஸ்கி எனப்படும் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் ஆகஸ்ட் 11 அன்று அதிகாலை வெளியேற்றப்படுவார்கள்.

    நிலவின் தென் துருவம் நோக்கி செல்லும் ரஷியாவின் முதல் விண்கலம் இது.

    ஒரு வருட காலம் நிலவில் தங்கி, நிலவில் நீர்நிலைகளின் சாத்தியக்கூறுகள் குறித்தும், வளங்கள் மற்றும் கட்டமைப்பு குறித்தும் தகவல்களை வழங்கும்.

    இந்தியாவிலிருந்து இஸ்ரோவால், ஜூலை 14 அன்று வானில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலமும் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவ மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இம்முயற்சி வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு எனும் புகழை இந்தியா பெறும்.

    • நிலாவில் நீர் வினியோகத்தின் பரந்த பகுதிக்கான வரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • மேற்பரப்பில் நீர் எவ்வாறு நகர்கிறது என்பது பற்றியும், தெளிவான, அடையாளம் காணக்கூடிய நிலாவின் அம்சங்களும் உள்ளது.

    நிலாவில் தண்ணீர் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. நிலாவில் தண்ணீர் இருந்தது என்பதை உறுதி செய்யும் விதமாக நிலாவிலேயே தண்ணீர் உருவானதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து இருந்தனர்.

    இந்நிலையில் அமெரிக்காவும், ஜெர்மனியும் இணைந்து இயக்கும் அகச்சிவப்பு வானியல் (சோபியா) விண் கலத்திற்கான ஸ்ட்ராடோஸ்பெரிக் அப்சர்வெட்டரியின் தரவு மூலம் நிலாவில் நீர் வினியோகத்தின் பரந்த பகுதிக்கான வரைப்படம் உருவாக் கப்பட்டுள்ளது. அதில் நிலாவின் மேற்பரப்பில் நீர் எவ்வாறு நகர்கிறது என்பது பற்றியும், தெளிவான, அடையாளம் காணக்கூடிய நிலாவின் அம்சங்களும் உள்ளது. குறிப்பாக ஆர்ட்டெமிஸ் பயணங்கள் சந்திரனில் தென் துருவத்தை இலக்காக கொண்டு நீண்ட இருப்பை உருவாக்குவதற்கும், நீண்ட கால பணிகளுக்கான ஆயத்த தலங்களை உருவாக்கு வதற்கும் இருக்கும்.

    மகேந்திரசிங் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத், நிலவின் பின்புறத்தில் மாரே மஸ்கோவியென்ஸ் என்று அழைக்கப்படும் பகுதியில் இடம் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பெயரும், புகழும் பெற்றார். தற்போது, வின்வெளி சம்பந்தப்பட்ட கதையில் தான் நடித்து வரும் ‘சந்தா மாமா தூர் கே’ என்ற படத்தை பிரபலப்படுத்துவதற்கா அல்லது தனது கனவை நிறைவேற்றுவதற்கா என தெரியவில்லை, நிலவில் அவர் இடம் வாங்கியுள்ளார்.

    பூமியில் இருந்து கண்ணுக்கு தெரியாத நிலவின் பின்பகுதி மாரே மஸ்கோவியென்ஸ் (Mare Muscoviense) என்று அழைக்கப்படும். இந்த பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தான் வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மேடே 14 என்ற நவீன தொலைநோக்கியை அவர் சொந்தமாக வைத்துள்ளார்.

    ‘பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கின்ற வெவ்வேறு வழிகளே கேள்விகளுக்கான பதில்கள் என்று நம்ப விரும்புகிறேன். எனவே நாம் விளக்கங்களை வரிசைப்படுத்துகின்ற விதத்தில் உள்ள மாறுபாடுகள், நுணுக்கம் ஆகியவை எதிர்காலத்தில் வேறுபட்ட பதிப்புகளை உருவாக்கும். நான் இப்போது ஒரு நுணுக்கத்தை நிறுத்துகிறேன் மற்றும் ஏற்கனவே, நான் நிலவையும் தாண்டிவிட்டேன்’ என அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

    சர்வதேச லூனார் நில பதிவகம் என்ற அமைப்பிடம் இருந்து அவர் நிலத்தை பதிவு செய்துள்ள முதல் பாலிவுட் நடிகர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். எனினும், அவர் சட்டரீதியாக அந்த நிலத்தை சொந்தம் கொண்டாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×