search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிக்கு தானமாக கொடுத்த நிலத்தை மோசடியாக பதிவு செய்த 4 பத்திரங்கள் ரத்து
    X

    அரசு பள்ளிக்கு தானமாக கொடுத்த நிலத்தை மோசடியாக பதிவு செய்த 4 பத்திரங்கள் ரத்து

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் 2 ஏக்கர் நிலத்தை பரமத்தி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க தானமாக வழங்கினர்.
    • போலி பத்திரம் பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், மேலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டி மனு அளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் கடந்த 1998 இல் அசோகன், சண்முகம், தியாகராஜன், நவக்குமார், ரத்தினகுமார், துரைசாமி, மூர்த்தி, பாலசுப்பிரமணி, பழனியாண்டி கோபால், நரசிம்மன், பாப்பாயி ஆகிய 12 பேர் தங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை பரமத்தி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க தானமாக வழங்கினர்.

    அப்போது பரமத்தியை சேர்ந்த 4 நபர்கள் தனக்கு இந்த இடத்தில் உரிமை உள்ளது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 24 ஆண்டு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

    கடந்த ஜூலை 24 -ந்தேதி பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் தாமாக கொடுத்த நிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான என தீர்ப்பளித்தார்.

    இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட பதிவாளரிடம் பரமத்தி சேர்ந்த கார்த்தி கேயன் என்பவர் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் அரசு பள்ளிக்கு தானமாக கொடுத்த இடத்தில் தனக்கு சொந்தமென போலி பத்திரம் பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், மேலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டி மனு அளித்தார்.

    இந்த மனுவை நாமக்கல் மாவட்ட பதிவாளர் சந்தானம் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதில் தவறான சந்ததிகளை தெரிவித்து பதிவு செய்யப்பட்ட மேற்படி நான்கு பத்திர பதிவுகள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் ரத்து செய்யப்பட்ட மேற்கண்ட ஆவணங்களை கொண்டு ஆவணங்கள் ஏதேனும் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டால் பதிவுக்கு அனுமதிக்காமல் ஆவணத்தை மறுத்தலிப்பு செய்ய சார் பதிவாளருக்கு ஆணை இடப்படுகிறது.

    மேலும் புகாருக்கு உண்டான ஆவணத்தில் சம்பந்தப்பட்ட நபர்களில் மீது பதிவுச் சட்டம் 63 கீழ் நடவடிக்கை எடுத்து காவல்துறையினிடம் புகார் செய்து குற்ற வழக்கு தொடர பரமத்தி சார்பதிவாளருக்கு ஆணை இடப்படுகிறது இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×