search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அருகே போலி ஆவணம் தயாரித்து 1.7 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு
    X

    சேலம் அருகே போலி ஆவணம் தயாரித்து 1.7 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

    • கோண மடுவு பகுதியில் 1.70 ஏக்கர் நிலத்தில் கடந்த 40 வருடமாக விவசாயம் செய்து வருகிறேன்.
    • இந்த நிலையில் திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் போலியான ஆவணங்களை தயாரித்து எனது நிலத்தை அபகரித்துக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே கோணமடுவு, குரால்நத்தம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    காவல்துறை அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்துவிட்டு குப்புசாமி கூறியதாவது:-

    கோண மடுவு பகுதியில் 1.70 ஏக்கர் நிலத்தில் கடந்த 40 வருடமாக விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலையில் திப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் போலியான ஆவணங்களை தயாரித்து எனது நிலத்தை அபகரித்துக் கொண்டார்.

    இது குறித்து நாகராஜிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும், அடித்தும், கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் எங்களால் விவசாயம் செய்ய முடியாமல், வாழ முடியாமல் தவித்து வருகிறோம். நாகராஜ் என்பவரால் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல் உள்ளது.

    இது குறித்து பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×