என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடையம் பெரும்பத்து ஊராட்சியில் நிலமற்ற 7 பேருக்கு இலவச பட்டா
- நிகழ்ச்சியில் 7 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டது.
- பயனாளிகளுக்கு கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது.
கடையம்:
கடையம் பெரும்பத்து ஊராட்சியில் இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தலைமை தாங்கி சபரி நகர், மேட்டூர், ஸ்டாலின் நகர், கானாவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 பேருக்கு இலவச பட்டாக்களை வழங்கினார். கிராம நிர்வாக அதிகாரி அரிகரன் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகியும், தொழிலதிபருமான பரமசிவன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






