search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Objection"

    • கோவையில் உள்ள அரசு வங்கியில் இவரது நில பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
    • 50 சதவீதம் வரை திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சின்னிய கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தனபால்(வயது 48) .இவர் கோவையில் உள்ள அரசு வங்கியில் இவரது நில பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

    இதில் சுமார் 50 சதவீதம் வரை திருப்பி செலுத்தியதாகவும், கொரோனா காலகட்டத்தில் சரியாக வியாபாரம் நடக்காததால் பணத்தை திருப்பி கட்ட முடியாததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், வங்கி நிர்வாகத்தினர் நிலத்தை கையகப்படுத்த வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி நிர்வாகத்தை முற்றுகையிட்டு தனபால் மற்றும் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த, திருப்பூர் மாவட்ட போலீஸ் இணை சூப்பிரண்டு முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் இருதரப்பினிடையே பேச்சுவார்த்தை நடத்தி முறையான ஆவணங்களுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியதை அடுத்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.

    • 5 செட் இடம் வாங்கி அதில் பிரத்தியங்கராதேவி கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
    • படுகாயம் அடைந்த திருநங்கை வாசுகி புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவன கிரி அருகே பு.மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் வாசுகி, திருநங்கையான இவர் அந்த பகுதியில் 5 செட் இடம் வாங்கி அதில் பிரத்தியங்கராதேவி கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு பூஜை நடத்தி னார். இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த கருணாகரன், சிவகுரு நாதன், கங்கா, சீராலன், முரளி, குமார் உள்ளிட்ட 7 பேர் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் திரு நங்கையிடம் இந்த பகுதி யில் கோவில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த னர். இதனால் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் திருநங்கை வாசுகி தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த திருநங்கை வாசுகி புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனை அறிந்த ஏராளமான திருநங்கைகள் திரண்டனர். அவர்கள் புவனகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். திருநங்கை வாசுகியை தாக்கியவர்கள் மீது நட  வடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசம் அடைந்த னர். இது தொடர்பாக போலீ சார் திருநங்கைகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக கருணா கரன், சிவகுருநாதன், கங்கா உள்பட 7 பேர் மீது போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது.

    ×