search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதியுதவி"

    • மின்சாரம் தாக்கி மாடுகளை இழந்தவர்களுக்கு அமைச்சர் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
    • செயலாளர் முத்துப் பாண்டி, அலுவலக உதவி யாளர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பறையங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் கருமலையான், வெள்ளைச்சாமி, முனியசாமி ஆகியோரின் 5 பசு மாடுகள் கடந்த 27-ந் தேதி மேய்ச்சலுக்கு போகும்போது மின்சாரம் தாக்கி இறந்தன. இதனை அறிந்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் உயிரிழந்த மாடுகளின் உரிமையா ளர்களுக்கு நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார்.

    இதனையடுத்து அமைச்சர் சார்பில் கமுதி தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மாடுகளின் உரிமையா ளர்களிடம் நிதியுதவி வழங்கினார். அப்போது மாவட்ட கவுன்சிலர் சசிகுமார் போஸ், ஒன்றிய கவுன்சிலர் முருகன்,கிளைச் செயலாளர் வீரபத்திரன், செயலாளர் முத்துப் பாண்டி, அலுவலக உதவி யாளர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மாநிலத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக பங்களிக்க வேண்டும்.

    இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. இதனை சமாளிக்க ராஜஸ்தான் ரூ.15 கோடி வழங்கியுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

    சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.11 கோடி நிதியுதவி அறிவித்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "நிதி உதவி வழங்கியதற்காக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், இமாச்சல் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.

    மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான உதவிகளை வழங்குவதற்கு பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக பங்களிக்க வேண்டும் என்றும் சுகு கேட்டுக் கொண்டார்.

    இமாச்சல் பேரிழப்பில், மாநிலத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மாதம் 31-ந் தேதி நள்ளிரவில் பாலம் கட்டுமான பணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்ததில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 20 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர்.
    • நேற்று மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர் சட்டமன்ற மதியழகன் ஆகியோர், விபத்தில் பலியான சந்தோஷ் வீட்டிற்கு சென்று, அவரது மனைவி ரூபியை சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    கிருஷ்ணகிரி,  

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - நாக்பூர் இடையே 701 கி.மீ தூரத்திற்கு சம்ருதி மகா மார்க் எக்ஸ்பிரஸ் சாலை 3 கட்டங்களாக அமைக்கப்பட்டு வருகிறது.

    மூன்றாம் கட்டமாக தற்போது பர்வீர் கிராமத்தில் இருந்து தானேயில் உள்ள வால்பே வரை 100 கி.மீட்டர் தூரத்திற்கு சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இதில் 9 இன்ஜினியர்கள் உள்பட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த பணியின் ஒரு பகுதியாக சகாபூர் தாலுகாவில் உள்ள குதாடி சர்லாம்பே கிராமத்தில் பாலம் கட்டப்பட்டு வந்தது. கடந்த மாதம் 31-ந் தேதி நள்ளிரவில் பாலம் கட்டுமான பணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்ததில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 20 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர்.

    அவ்வாறு பலியானவர்களில், கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட

    வி.ஐ.பி நகரில் வசிக்கும் இளங்கோவன் மகன் இன்ஜினியர் சந்தோஷ்(வயது 36) ஒருவராவார். இவரது உடல் கடந்த 2ம் தேதி விடியற்காலை விமானம் மூலம் பெங்களூர் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி கொண்டுவரபட்டு, இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி பழையபேட்டை இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதையடுத்து நேற்று மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர், விபத்தில் பலியான சந்தோஷ் வீட்டிற்கு சென்று, அவரது மனைவி ரூபியை சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    அப்போது கலெக்டர், சந்தோசின் மனைவியிடம், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். உங்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தரும் என ரூபிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

    இந்நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

    • எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு, வீட்டில் உள்ள பொருட்கள் தீ பிடித்தன.
    • ஏராளமான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி, 41-வது வார்டுப்பட்ட ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு எல். ஐ.ஜி குடியிருப்பு பகுதியில், மேல் தளத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் தனியார் கம்பெனி ஊழியர் கதிரேசன் (50) இவரது மனைவி சம்சாத். வழக்கம் போல கதிரேசன் வேலைக்கு சென்று விட அவரது மனைவி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு, வீட்டில் உள்ள பொருட்கள் தீ பிடித்தன. இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். மேலும், இது குறித்து கதிரேசனுக்கும், ஓசூர் தீயணைப்புத் துறையி னருக்கும் தகவல் அளித்து உள்ளனர்.

    தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த டிவி, பிரிட்ஜ், சுய உதவிக் குழுவில் வாங்கி வைத்திருந்த ரூ. 68,000/- ரொக்கப்பணம், துணிமணிகள் மற்றும் வீட்டிலிருந்த ஏராளமான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

    வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் சேதமானதால் வாழ்வாதாரம் இன்றி தவித்த அந்த குடும்பத்தினருக்கு, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் பி.ஆர்.வாசுதேவன், அசோகா, ராஜி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்கிற சங்கர், வட்ட செயலாளர் கும்மி என்ற ஹேமகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர்.

    இந்த தீ விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • உடை, புத்தகங்களை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.
    • வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆவணங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும்.

    டெல்லியில் யமுனை நதிக்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    யமுனை நதிக்கரையில் வசிக்கும் பல ஏழை குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

    சில கும்பங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டன.

    வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆவணங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும்.

    மேலும், உடை, புத்தகங்களை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.

    யமுனை நதிக்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பணியின்போது மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு 9.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது
    • காவலர் நவநீதகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக மாடு முட்டி உயிரிழந்தார்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்என்புரம் பகுதியைச் சேர்ந்தவர் காவலர் நவநீதகிருஷ்ணன், இவர் கடந்த மே மாதம் கல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக மாடு முட்டி உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த நவநீதகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில், 2013-ம் ஆண்டு அவரது பேட்ஜை சேர்ந்த தமிழ்நாடு முழுவதுமுள்ள சகக் காவலர்கள் வாட்ஸ்ஆப் குழு மூலம் 9 லட்சத்து 75 ஆயிரம் நிதி திரட்டியுள்ளனர். திரட்டிய நிதியை நவநீதகிருஷ்ணனின் மகன்கள் மிதுன்சக்கரவர்த்தி,கீர்த்திவாசன் ஆகிய இருவர் பெயரிலும் தலா நான்கு லட்சத்து 75 ஆயிரம் தொகையை தபால் நிலையத்தில் செலுத்தி அதற்கான வங்கி புத்தகத்தையும், மீதமுள்ள ரொக்கப் பணத்தையும் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சகக்காவலர்கள் 9 லட்சத்து 75 ஆயிரம் நிதியளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




    • மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது
    • வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த கோபி என்பவரின் மனைவி வித்யா மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில்கடந்த சில தினங்களுக்கு முன்பு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த கோபி என்பவரின் மனைவி வித்யா மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைதொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இறந்த வித்யாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசின் நிவாரண உதவித் தொகையான ரூ. 4.லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோர்களுக்கு ரூ.16½ லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
    • இந்த நிதியின் மூலம் தொழிலை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடைந்து மேம்பாடு அடைய வேண்டும் என்றார்

    அரியலூர் :

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வா்ணா தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பிரதம மந்திரியின் சிறு மற்றும் குறு உணவு உற்பத்தியாளர்களுக்கான திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தியில் ஈடுபடும் 44 பெண் சுய உதவிக்குழு தொழில் முனைவோர்களுக்கு ரூ.16 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் விதை மூலதன நிதியுதவி தொகைக்கான காசோலையினை வழங்கினார்.

    மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சியில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற 51 பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மூலதன நிதியுதவி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோர் இந்த நிதியின் மூலம் தொழிலை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடைந்து மேம்பாடு அடைய வேண்டும். திறன் வளர்ப்பு பயிற்சியில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இப்பயிற்சியினை முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.

    • காசோலையை மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்கள்.
    • நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே குமரானந்தபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்காக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன் (22-வது வார்டு), பத்மாவதி (21-வது வார்டு), பள்ளி மேலாண்மை குழு, கிராம கல்விக்குழு, பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக நிர்வாகிகளின் பங்களிப்பு தொகையாக ரூ.20 லட்சத்து 7 ஆயிரத்துக்கான காசோலையை மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்கள்.

    இதில் 1-வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    • மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு முருகேசன் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினார்.
    • மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    பரமக்குடி அ ருகே உள்ள குறிஞ்சான்குளம் கிராமத்தைச் சேர்ந்த வர் ஆறுமுகம். இவர் சில தினத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி இறந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், ஆறுமுகத்தின் குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

    இதில் பரமக்குடி வட்டாட்சியர் ரவி, பரமக்குடி தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சுழி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி வாங்கப்பட்டது.
    • அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தில் புதிதாக அரசு கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கட்டிட பணிக்கு சென்ற புளியங்குளம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ஹரிஷ்குமார், 12 வகுப்பு மாணவர் ரவிச்செல்வம் ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மாணவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர்கள் முனியாண்டி, நாலூர் பூமிநாதன், தோப்பூர் முருகன்,யோக வாசுதேவன், சண்முகக்கனி மற்றும் பனைக்குடி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    • சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.
    • உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம் சிவலார்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பரின் மகன்கள் மகேஸ்வரன், அருண்குமார் மற்றும் கார்த்திகேயன் மகன் சுதன் ஆகியோர் கடந்த 12ம் தேதி அன்று மாலை சிவலார்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    ×