என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாடுகளின் உரிமையாளர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
மின்சாரம் தாக்கி மாடுகளை இழந்தவர்களுக்கு அமைச்சர் சார்பில் நிதியுதவி
- மின்சாரம் தாக்கி மாடுகளை இழந்தவர்களுக்கு அமைச்சர் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
- செயலாளர் முத்துப் பாண்டி, அலுவலக உதவி யாளர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பறையங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் கருமலையான், வெள்ளைச்சாமி, முனியசாமி ஆகியோரின் 5 பசு மாடுகள் கடந்த 27-ந் தேதி மேய்ச்சலுக்கு போகும்போது மின்சாரம் தாக்கி இறந்தன. இதனை அறிந்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் உயிரிழந்த மாடுகளின் உரிமையா ளர்களுக்கு நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து அமைச்சர் சார்பில் கமுதி தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மாடுகளின் உரிமையா ளர்களிடம் நிதியுதவி வழங்கினார். அப்போது மாவட்ட கவுன்சிலர் சசிகுமார் போஸ், ஒன்றிய கவுன்சிலர் முருகன்,கிளைச் செயலாளர் வீரபத்திரன், செயலாளர் முத்துப் பாண்டி, அலுவலக உதவி யாளர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story






