search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளப் பெருக்கு"

    • ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால், தாமிரபரணியில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கனமழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு சுமார் 15000 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    மேலும், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால், தாமிரபரணியில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    தாமிரபரணி கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள், ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்போது 87.8 அடியாக உள்ளது.

    • உடை, புத்தகங்களை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.
    • வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆவணங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும்.

    டெல்லியில் யமுனை நதிக்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    யமுனை நதிக்கரையில் வசிக்கும் பல ஏழை குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

    சில கும்பங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டன.

    வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆவணங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும்.

    மேலும், உடை, புத்தகங்களை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.

    யமுனை நதிக்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • மேட்டூா் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • எனவே, காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூா் அணையின் நீா்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால், அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அணையில் இருந்து கூடுதலாக காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே, காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.

    பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீா்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல் மற்றும் சுயபடம் எடுத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் நீராடுதல் உள்ளிட்ட எந்தவித செயல்களிலும் ஈடுபடக் கூடாது. அதனை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொது–மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

    அவசர உதவிக்கு 1077, காவல் துறை 100, தீயணைப்புத் துறை 101, மருத்துவ உதவி 104, ஆம்புலன்ஸ் 108 என்ற எண்களிலும், குமார–பாளையம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், மோகனூா் வட்டாட்சியா்களையும் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
    • தமிழ்நாடு, டெல்லி, உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தின் சத்ருவில் பெய்த கனமழையால் லாஹவுல்- ஸ்பிடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கூட்டு நடத்திய மீட்பு நடவடிக்கையில் சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 105 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    கடந்த வாரம் லாஹவுல் துணை மண்டலத்தில் உள்ள தண்டி- உதைபூர் வழித்தடத்தில் டோசிங் நுல்லா பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில், மீட்கப்பட்டவர்களில் 80 பேர் மணாலிக்கு புறப்பட்டுச் சென்றனர். மற்றவர்கள் கோக்சர் மற்றும் சிசுவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் 30 நபர்கள் (பெரும்பாலும் ஓட்டுநர்கள்) தங்கள் வாகனங்களுடன் சத்ருவில் தங்கியுள்ளனர். இதற்கிடையில், தேசிய நெடுஞ்சாலை 505 தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதேபோல், தமிழ்நாடு, டெல்லி, உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம், கேரளா, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குலு, ஷிமா, சோலன், பிலாஸ்பூர், காங்க்ரா, சம்பா மற்றும் மண்டி ஆகிய இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    ×