வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம்- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

உடை, புத்தகங்களை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆவணங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம்- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

டெல்லியில் யமுனை நதிக்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

யமுனை நதிக்கரையில் வசிக்கும் பல ஏழை குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

சில கும்பங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆவணங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும்.

மேலும், உடை, புத்தகங்களை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.

யமுனை நதிக்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com