search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ விபத்தில் டிவி, பிரிட்ஜ், பணம் கருகி சேதம் அ.தி.மு.க.நிர்வாகிகள் நிதியுதவி வழங்கி ஆறுதல்
    X

    தீவிபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் நிதியுதவி வழங்கிய காட்சி.

    தீ விபத்தில் டிவி, பிரிட்ஜ், பணம் கருகி சேதம் அ.தி.மு.க.நிர்வாகிகள் நிதியுதவி வழங்கி ஆறுதல்

    • எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு, வீட்டில் உள்ள பொருட்கள் தீ பிடித்தன.
    • ஏராளமான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி, 41-வது வார்டுப்பட்ட ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு எல். ஐ.ஜி குடியிருப்பு பகுதியில், மேல் தளத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் தனியார் கம்பெனி ஊழியர் கதிரேசன் (50) இவரது மனைவி சம்சாத். வழக்கம் போல கதிரேசன் வேலைக்கு சென்று விட அவரது மனைவி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு, வீட்டில் உள்ள பொருட்கள் தீ பிடித்தன. இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். மேலும், இது குறித்து கதிரேசனுக்கும், ஓசூர் தீயணைப்புத் துறையி னருக்கும் தகவல் அளித்து உள்ளனர்.

    தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த டிவி, பிரிட்ஜ், சுய உதவிக் குழுவில் வாங்கி வைத்திருந்த ரூ. 68,000/- ரொக்கப்பணம், துணிமணிகள் மற்றும் வீட்டிலிருந்த ஏராளமான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

    வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் சேதமானதால் வாழ்வாதாரம் இன்றி தவித்த அந்த குடும்பத்தினருக்கு, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் பி.ஆர்.வாசுதேவன், அசோகா, ராஜி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்கிற சங்கர், வட்ட செயலாளர் கும்மி என்ற ஹேமகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர்.

    இந்த தீ விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×