மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி

மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த கோபி என்பவரின் மனைவி வித்யா மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி
Published on

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில்கடந்த சில தினங்களுக்கு முன்பு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த கோபி என்பவரின் மனைவி வித்யா மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைதொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இறந்த வித்யாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசின் நிவாரண உதவித் தொகையான ரூ. 4.லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com