மின்சாரம் தாக்கி இறந்த மாணவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி

திருச்சுழி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி வாங்கப்பட்டது.அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
மின்சாரம் தாக்கி இறந்த மாணவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி
Published on

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தில் புதிதாக அரசு கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கட்டிட பணிக்கு சென்ற புளியங்குளம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ஹரிஷ்குமார், 12 வகுப்பு மாணவர் ரவிச்செல்வம் ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மாணவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர்கள் முனியாண்டி, நாலூர் பூமிநாதன், தோப்பூர் முருகன்,யோக வாசுதேவன், சண்முகக்கனி மற்றும் பனைக்குடி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com