search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்பிக்கையில்லா தீர்மானம்"

    • மணிப்பூரில் பாஜக அரசு தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என காங். எம்.பி. கௌரவ் கோகாய் தெரிவித்தார்.
    • மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தபோது பிரதமர் மோடி ஏன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் என சுகதா ராய் கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால் கடந்த 2 வாரமாக மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாமல் அமளி செய்து எதிர்க்கட்சிகள் முடக்கின.

    இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

    பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். அதன்மீது ஆகஸ்டு 8, 9-ந்தேதிகளில் விவாதம் நடைபெறும் என்றும், 10-ந்தேதி பதில் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி பாராளுமன்றத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.

    தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினர். பிரதமரின் இரட்டை என்ஜின் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது. மணிப்பூரில் அவரது அரசு தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் தெரிவித்தார்.

    திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசும்போது, "மணிப்பூரில் சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையில் 143 பேர் பலியாகியுள்ளனர். 65,000 பேர் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளனர். மணிப்பூரின் தெருக்களில் இரண்டு பெண்கள் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? பிரதமர் பாராளுமன்றத்துக்கு வரவில்லை, அந்த மாநிலத்துக்கும் செல்லவில்லை. அதேசமயம், ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணி கட்சியினர் அங்கு சென்று என்ன நடந்தது என்று புரிந்துகொண்டனர்" என்றார்.

    மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தபோது பிரதமர் மோடி ஏன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் என திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகதா ராய் கேள்வி எழுப்பினார்.

    மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே வலியுறுத்தினார். 

    • மணிப்பூர் பற்றி எரிகிறது என்றால் ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிதாகவே அர்த்தம்.
    • மணிப்பூர் மாநில பெண்கள், இளைஞர்கள், குழந்தைகளுக்கு நீதி வேண்டும்.

    பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்கியது. காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கினார்.

    அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் பிரதமர் பெயரை குறிப்பிட்டு பேசுவதற்கு அமித்ஷா கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய கௌரவ் கோகாய்,

    * பிரதமரும், அவை தலைவரும் தங்களது அலுவலகத்தில் என்ன பேசுகின்றனர் என்பதை கூற தயார்.

    * பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார்? ஏன் பிரதமர் மணிப்பூருக்கு செல்லவில்லை.

    * மணிப்பூர் விவகாரத்திற்காக இந்தியா கூட்டணி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

    * மணிப்பூர் பற்றி எரிகிறது என்றால் ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிதாகவே அர்த்தம்.

    * மணிப்பூர் மாநில பெண்கள், இளைஞர்கள், குழந்தைகளுக்கு நீதி வேண்டும்.

    * பிரதமர் மோடி அவைக்கு வந்து தன்னுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும்.

    * ஒட்டுமொத்த அவையும் மணிப்பூர் பக்கம் உள்ளது என்பதை காட்ட வேண்டும்.

    இவ்வாறு காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் தொடர்ந்து பேசி வருகிறார்.

    • காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்கினார்.
    • பிரதமர் மோடியை பாராளுமன்றத்தில் பேச வைக்க வேண்டும் என்ற இலக்குடன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    அதை மத்திய அரசு ஏற்காததால் கடந்த 2 வாரமாக மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாமல் அமளி செய்து எதிர்க்கட்சிகள் முடக்கின.

    இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் 'இந்தியா' கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. பிரதமர் மோடியை பாராளுமன்றத் தில் பேச வைக்க வேண்டும் என்ற இலக்குடன் அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். அதன்மீது ஆகஸ்டு 8, 9-ந்தேதிகளில் விவாதம் நடைபெறும் என்றும், 10-ந்தேதி பதில் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    அதன்படி பாராளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சார்பில் முதலில் ராகுல் காந்தி தனது வாதத்தை எடுத்து வைப்பார் என்று முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால் அவருக்கு பதில் காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் எழுந்து பேசினார்.

    உடனே மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி எழுந்து, "உங்கள் சார்பில் முதலில் ராகுல் ஏன் பேசவில்லை" என்றார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதையடுத்து பா.ஜ.க. எம்.பி.க்களுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அதன் பிறகு கௌரவ் கோகாய் தொடர்ந்து பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

    மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி. அங்கு நடப்பது பற்றி இங்கு அவசியம் விவாதிக்க வேண்டும். அந்த மாநிலத்தில் கடுமையான வன்முறைகள் ஏற்பட்டு லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட பிறகும் பிரதமர் ஏன் அங்கு செல்லவில்லை?

    மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார். மணிப்பூர் விவகாரம் பற்றி இதுவரை அவர் 30 நிமிடங்கள் மட்டுமே பேசி உள்ளார். ஏன் அவர் பேச மறுத்து மவுன விரதம் கடைபிடிக்கிறார்?

    மணிப்பூரில் இவ்வளவு கலவரம் நடந்த பிறகும் அந்த மாநில முதல்வர் பதவி விலகாதது ஏன்? அவரை ஏன் மத்திய அரசு இவ்வளவு நாளும் காப்பாற்றுகிறது. மோடியின் மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தால்தான் தீர்வு ஏற்படும்.

    இதை கருத்தில் கொண்டுதான் நாங்கள் இந்த சபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கிறோம். எங்களுக்கு எவ்வளவு எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை பற்றி முக்கியம் இல்லை. மணிப்பூர் விவகாரம்தான் முக்கியம்.

    மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது பற்றி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். நீங்கள் ஒரு தடவை மணிப்பூருக்கு நேரில் சென்று பார்த்து விட்டு வந்து இங்கு பேசுங்கள்.

    இன்று வரை மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. அந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

    பிரதமரின் இரட்டை என்ஜின் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது. மணிப்பூரில் அவரது அரசு தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால்தான் மணிப்பூரில் 150 பேர் இறந்தனர். சுமார் 5 ஆயிரம் வீடுகள் எரிக்கப்பட்டன. 60 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். சுமார் 6,500 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான சூழ்நிலை உருவாக்க வேண்டிய மாநில முதல்-மந்திரி கடந்த 2 ,3 தினங்களில் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளார்.

    மணிப்பூரில் இன்று வரை வன்முறை ஓய்ந்த பாடில்லை. அங்கு போதை மருந்து அச்சுறுத்தலும் அதிகரித்து வருகின்றன. மணிப்பூர் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களது நீதிக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்.

    சீன எல்லை விவகாரத்திலும் பிரதமர் பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

    இவ்வாறு கௌரவ் கோகாய் பேசினார்.

    மதியம் 12.45 மணி அளவில் காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் தனது பேச்சின் போது பிரதமர் மோடியை மவுன பிரதமர் என்று விமர்சித்தார். இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி.க்களை நோக்கி கோஷமிட்டனர்.

    பதிலுக்கு காங்கிரஸ் எம்.பி.க்களும் எதிர்கோஷம் எழுப்பினார்கள். இதனால் பாராளுமன்றத்தில் கடுமையான அமளி நிலவியது. சபாநாயகர் ஓம்பிர்லா சுமார் 5 நிமிடம் சபையில் நிலவிய அமளியை பார்த்துக் கொண்டே இருந்தார்.

    பா.ஜ.க. சார்பில் நிஷிகாந்த் துபே எம்.பி. முதலில் பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். வெட்கம் வெட்கம் என்று கூறி கூச்சலிட்டனர். இதனால் சபையில் மீண்டும் கடும் அமளி ஏற்பட்டது.

    என்றாலும் விவாதம் தொடர்ந்து நடத்தப்பட்டது. இன்று பிற்பகல் ராகுல் காந்தி பேசுவார் என்று தெரிகிறது. காங்கிரஸ் சார்பில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சசிதரூர், கவு ரவ்கோகாய், மணீஸ்திவாரி ஆகியோரும் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பா.ஜ.க. சார்பில் 5 மத்திய மந்திரிகள் பேசுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதிஇராணி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ ஆகியோர் எதிர்க்கட்சிகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் பிரதமர் மோடி பதில் அளிப்பார் என்பது இன்று மதியம் வரை உறுதி செய்யப்படவில்லை.

    எதிர்க்கட்சிகளின் பரபரப்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (புதன்கிழமை) விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் பிரதமர் மோடி பதில் அளிப்பார் என்று தெரிகிறது.

    தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படும். தற்போது எம்.பி.க்களின் எண்ணிக்கை 570 ஆக உள்ளது. எனவே ஓட்டெடுப்பில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வேண்டுமானால் 270 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அந்த அளவுக்கு பலம் இல்லை. 142 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது.

    பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு 332 எம்.பி.க்கள் பலம் உள்ளது. மேலும் பிஜு தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. கட்சிகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக உள்ளன. எனவே பா.ஜ.க.வுக்கு ஆதரவாக 366 எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகையால் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பே இல்லை.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்தின்போது பிரதமர் மோடி பதில் அளிக்க இருக்கிறார்
    • இன்று காலை பாராளுமன்ற பா.ஜனதா எம்.பி.க்களை சந்தித்து பேசினார்

    மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மீது இன்று விவாதம் தொடங்க இருக்கிறது.

    விவாதத்தை எப்படி எதிர்கொள்வது, எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்து பிரதமர் மோடி, பாரளுமன்ற பா.ஜனதா எம்.பி.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது பிரதமர் அவர்களிடம் பேசும்போது ''எதிர்க்கட்சிகள் சமூகநீதி பற்றி பேசுகிறார்கள். ஊழல் அரசியல், வாரிசு அரசியல் போன்றவற்றால் சமூக நீதிக்கு தீங்கு விளைவித்தவர்கள். எதிர்க்கட்சிகள் பரஸ்பர அவநம்பிக்கையால் நிறைந்துள்ளன. அதன் வெளிப்பாடு காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

    சிலர் மாநிலங்களவையில் நடைபெறும் வாக்கெடுப்பு 2024-ம் தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக இருக்கும் என்றார்கள். அரையிறுதியில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்கூறிய  எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் தொடக்கம்
    • பெரும்பான்மை கிடைக்காது என தெரிந்தும், எதிர்க்கட்சிகள் இதை கொண்டு வந்துள்ளது

    பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கே. சுரேஷ் கூறுகையில் ''இன்று மக்களவையில் நம்பிக்கையில்லாத தீர்மானம் மீது விவாதம் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி முதலில் பேசுவார்.

    எங்களுடைய பிரச்சனை மணிப்பூர் விவகாரம் குறித்தது மட்டுமே. பிரதமர் மோடி மக்களவைக்கு வர வேண்டும், விளக்கம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். ஆனால், பிரதமர் மோடி அதற்கு தயாராக இல்லை.

    அதனால்தான் நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம். உண்மையிலேயே, மக்களவையில் எங்களுக்கு பெரும்பான்மை கிடையாது, ஆனால், மோடி என்ன சொல்லப் போகிறார்? என்பதை தெரிய விரும்கிறோம்.'' என்றார்.

    • பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க மறுப்பு
    • நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதுதான் ஒரே தீர்வு என எதிர்க்கட்சிகள் முடிவு

    மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் விளக்கமான அறிக்கையை பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடி பதில் அளிக்கமாட்டார் என மத்திய அரசு தெரிவித்தது.

    இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, இன்று முதல் விவாதம் நடைபெறும் என அறிவித்தார்.

    அதன்படி இன்று மக்களவையில் விவாதம் தொடங்க இருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர், வயநாடு எம்.பி. ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கவுரவ் கோகாய், மணிஷ் திவாரி, தீபக் பாய்ஜ் ஆகியோர் நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து பேசுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    உச்சநீதிமன்றம் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால், எம்.பி. பதவி பறிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் நேற்று மக்களவை அலுவலில் ராகுல் காந்தி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விவாதத்தின்போது மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
    • நாளையும், நாளை மறுநாளும் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.

    ஆனால் மணிப்பூர் கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதற்கு பிரதமர் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

    இதையடுத்து பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. என்றாலும், எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே பாராளுமன்றத்தில் இதுவரை 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    குறிப்பாக டெல்லி அரசு உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் பணி இடமாற்றத்துக்கான அதிகாரம் தொடர்பான அவசர சட்டத்துக்கு மாற்றாக டெல்லி நிர்வாக திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த வாரம் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இன்று அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது.

    அமளி செய்து பாராளுமன்றத்தை முடக்கினாலும் திட்டமிட்டபடி மத்திய அரசு சில மசோதாக்களை நிறைவேற்றுவதால் பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் 'இந்தியா' எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. பிரதமர் மோடியை பாராளுமன்றத்தில் பேச வைக்க வேண்டும் என்ற இலக்குடன் அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். அதன்மீது ஆகஸ்டு 8, 9-ந் தேதிகளில் விவாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.

    அதன்படி பாராளுமன்றத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்குகிறது. விவாதத்துக்கு மொத்தம் 12 மணி நேரத்தை ஒதுக்கி அலுவல் ஆய்வுக்குழு அறிவித்துள்ளது. எனவே 9-ந்தேதி (புதன்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதம் தொடர்ந்து நடைபெறும்.

    விவாதத்தின்போது மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக மே 4-ந்தேதி 2 பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தை எழுப்பி சர்ச்சையை உருவாக்க உள்ளன.

    எனவே நாளையும், நாளை மறுநாளும் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்க்கட்சிகளின் விவாதத்துக்கு மத்திய அரசு சார்பில் 10-ந்தேதி (வியாழக்கிழமை) பதில் அளிக்கப்பட உள்ளது. பொதுவாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் பதில் அளிப்பது மரபாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி 10-ந்தேதி பதில் அளித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து அவரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்று எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதான வாதத்தை எடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அத்தகைய சூழலில் பாராளுமன்ற விவாதம் கடுமையாக சூடுபிடிப்பதாக இருக்கும். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவுபெற இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்த 4 நாட்களும் பாராளுமன்றத்தில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது.

    • மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கை
    • நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் வரை மற்ற அலுவல் பணிக்கு எதிர்ப்பு

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற அலுவல் பணியை முடக்கி வருகின்றன. பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த மக்களவை சபாநாயகர், சம்மதம் தெரிவித்த நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து நேரம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    ஆனால் விவாதம் நடைபெறுவதற்கு முன் எந்தவொரு அலுவல் பணியும் நடைபெறக்கூடாது என எதிர்க்கட்சிகள் அமளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சி தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்.

    • ஊராட்சி துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என, வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருந்தனர்.
    • உறுப்பினர்களிடம் கருத்து கேட்டு பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செம்பட்டி அருகே பாளையங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அழகுமலை. துணைத் தலைவராக இருப்பவர் தெய்வலட்சுமி. இந்நிலையில், மொத்தமுள்ள 9 வார்டு உறுப்பினர்களில், கடந்த மாதம் 27-ஆம் தேதி, 6 உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தெய்வலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என, வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருந்தனர்.

    அந்த மனுவில், துணைத் தலைவராக இருக்கும் தெய்வலட்சுமி. அலுவலகத்திற்கு வருவது இல்லை. அலுவலக பணிகளை கவனிப்பதில்லை. வார்டு உறுப்பினர்களை மதிப்பதில்லை. அனைத்து பணிகளிலும் அவரது கணவர் முனியாண்டி தலையீடு செய்கிறார்.

    பாளையங்கோட்டையில் ஊராட்சி துணைத்தலைவர் பதவியில் ஆள் மாறாட்டம் நடைபெற்று வருகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வார்டு உறுப்பினர்கள் காயத்ரி, சீனியம்மாள், முனிசெல்வம், அழகுமலை, கலைராணி அனுசியா ஆகிய 6 உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மற்றும் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையான் ஆகியோரிடம் மனு கொடுத்திருந்தனர்.

    அதன்படி துணைத்தலைவர் தெய்வலட்சுமி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான, உறுப்பினர்களின் கருத்து கேட்கும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமலை தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், துணைத்தலைவர் தெய்வலட்சுமி உட்பட 8 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் மீது புகார் கொடுத்த, வார்டு உறுப்பினர்கள் 6 பேரும், துணைத்தலைவர் தெய்வலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். வார்டு உறுப்பினர்கள் 6 பேரின் கருத்துகளை கேட்டறிந்த, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையான், உங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறினார்.

    • அலுவலக பணிகளை கவனிப்பதில்லை. வார்டு உறுப்பினர்களை மதிப்பதில்லை. துணைத்தலைவர் பதவி ஆள் மாறாட்டம் செய்ய–ப்பட்டு வருகிறது என புகார்
    • துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செம்பட்டி அருகே பாளையங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அழகுமலை. இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தெய்வலட்சுமி உள்ளார்.

    மொத்தமுள்ள 9-வார்டு உறுப்பினர்களில், 6 உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தெய்வலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர்.

    ஊராட்சிமன்றத் துணைத் தலைவரான தெய்வலட்சுமி அலுவலகத்திற்கு வரு–வது இல்லை. அலுவ–லக பணிகளை கவனிப்ப–தில்லை. வார்டு உறுப்பின–ர்களை மதிப்பதில்லை.

    அனைத்து பணிகளிலும் அவரது கணவர் முனியாண்டி தலையீடு செய்கிறார். இந்த ஊராட்சி துணைத்தலைவர் பதவி ஆள் மாறாட்டம் செய்ய–ப்பட்டு வருகிறது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் காயத்ரி, சீனியம்மாள், முனிசெல்வம், அழகுமலை, கலைராணி, அனுசியா ஆகிய 6 உறுப்பினர்கள் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    பின்னர் திண்டுக்கல் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகம் மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையான் ஆகியோரிடம் துணைத்தலைவர் தெய்வலட்சுமி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்ற கோரி–க்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

    பிரதமர் நாற்காலியில் யார் அமர வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார் #NoConfidenceMotion #PMModi
    புதுடெல்லி:

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடந்தது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்தது. எனினும், மசோதா மீதான விவாதம் நடந்தது. மத்திய அரசு மற்றும் பிரதமர் மீது பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ராகுல் காந்தி பேசினார்.

    அதிமுக, சமாஜ்வாதி, திரினாமுல், டிஆர்எஸ் ஆகிய கட்சிகளும் மத்திய அரசு மீது கலவையான விமர்சனத்தை முன்வைத்து பேசின. இதனை அடுத்து பேசிய ராஜ்நாத் சிங், “நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது” என கூறினார். 

    இதனை அடுத்து, தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சிகளும் பேசி வந்ததால் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்துவது தாமதமாகியது. இரவு 9.30 மணியளவில் பிரதமர் தனது உரையை தொடங்கினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

    இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்ப்பு அரசியல் செய்பவர்களின் முகங்கள் வெளிப்பட்டு விட்டது. எதிர்க்கட்சிகளே பெரும்பான்மை மிக்க இந்த அரசின் மீது நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரியுங்கள்.

    அதிகாரப் பசியின் காரணமாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இது நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை, எதிர்க்கட்சிகளின் ஆணவத்தின் வெளிப்பாடு.

    பிரதமர் நாற்காலிக்கு என்ன அவசரம்? ஜனநாயகத்தில் எந்த அவசரமும் இல்லை. பிரதமர் நாற்காலியில் இருந்து நான் எழ வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். இந்த நாற்காலிக்கு யார் தகுதியானவர்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நாங்கள் மெஜாரிட்டி கொண்டிருப்பதால் இந்த பக்கம் இருக்கிறோம். மக்களை தவறாக வழி நடத்தாதீர்கள்.

    இவ்வாறு மோடி பேசி வருகிறார். மோடியின் பேச்சுக்கு எதிராக தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
    ரபேல் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு அம்சம் இல்லை என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. #NoConfidenceMotion #RafaleDeal
    புதுடெல்லி:

    மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, “ரபேல் விமான ஒப்பந்தம் குறித்தான தகவல்களை வெளியிட இருநாடுகளுக்கு இடையில் ரகசிய காப்பு ஒப்பந்தம் இருப்பதாக மோடி அரசு கூறுகிறது. பிரான்ஸ் அதிபர் மாக்ரானுடன் நான் உரையாடிய போது இரு நாடுகளுக்கு இடையில் எந்த ரகசிய காப்பு ஒப்பந்தமும் இல்லை என்றார். மோடியின் நெருக்கடியினால் நிர்மலா சீதாராமன் பொய் கூறியுள்ளார்" என்றார்.

    ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பிரான்ஸ் மறுப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் அறிக்கையை கவனித்தோம். இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் 2008-ஆம் ஆண்டு ரகசிய காப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி பங்குதாரர் கூறும் உரிய தகவலை இரு நாடுகளும் சட்டப்பூர்வமாக ரகசியம் காக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    பிரான்ஸ் அறிக்கையை அடுத்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “அவர்கள் (பிரான்ஸ்) விரும்பினால் அதை மறுக்கட்டும். பிரான்ஸ் அதிபர் (இம்மானுவேல் மாக்ரான்) என் முன்னால் தான் அதை கூறினார். அந்த சமயத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மா ஆகியோரும் உடனிருந்தனர்” என கூறினார்.
    ×