search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்கு"

    • சிவகாசி அருகே தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது தாயார் இறந்து விட்டார்.

    விருதுநகர்,

    சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் முனீஸ்வரி(வயது26) திருத்தங்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது தாயார் இறந்து விட்டார். இந்தநிலையில் முனீஸ்வரிக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு முனீஸ்வரி தாய் இறந்து 3 மாதமே ஆகியிருப்பதால் தற்போது திருமணம் வேண்டாம் என மறுத்துள்ளார். ஆனால் குடும்பத்தினர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். இதனால் அவர் விரக்தி யுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அருகில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த முனீஸ்வரி வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.

    • திருமணமான 2½ ஆண்டுகளில் பரிதாபம்
    • நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே ஒற்றையால்விளை அம்பலபதி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்.

    இவரது மனைவி மேரி சுருதி (வயது 26). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.பிரகாஷ் வெளிநாட்டில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வந்தார். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பிரகாஷ் கடந்த 5-ந்தேதி ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று கணவன்-மனைவிகளிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த மேரி சுருதி அறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த பிரகாஷ் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கன்னியா குமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய மேரி சுருதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இவர்களுக்கு திருமண மாகி 2½ ஆண்டுகளே ஆவதால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார். தற்கொலை செய்து கொண்ட மேரி சுருதியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    திருமணமான 2½ ஆண்டு களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விடுதியின் மேல்மாடியில் இருந்து வெளியே நோக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
    • மாணவர் சுமித்திரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் களியக்கா விளை அருகே படந்தாலுமூடு பகுதியில் கிரேஷ் நர்சிங் கல்லூரி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பல விதத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர் ஒருவரை ஆசிரியர் அடித்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    அந்த மாணவரது புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரித்த நிலையில், கல்லாரி நிர்வாகம் மாண வரிடம் இது போல் நடக்காது என்று மன்னிப்பு கேட்டு சிகிச்சைக்கு பணம் கொடுத்து வழக்கை திரும்ப பெற வைத்ததாக கூறப்படுகிறது. அதுவும் இல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாகத்தின் துன்புறுத்தல் காரணமாக தொழிலாளி ஒருவர் கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறிப்பிடதக்கது.

    இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் சுமித்திரன் (வயது 19) கல்லூரியில் 2 ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் மாணவர்க ளுக்கு தங்குவதற்காக விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சுமித்திரன் தங்கியுள்ளார்.

    இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் 4 மாணவர்கள் தங்கியுள்ளனர். நேற்று சுமித்திரன் படிப்பு முடிந்து விடுதி அறைக்கு வந்து உள்ளார். ஆனால் சக மணவர்களிடம் பேச வில்லை என்று கூறப்படுகிறது. எப்போதும் குதூகலமாக இருக்கும் சுமித்திரன் சக மாணவர்களிடம் பேசாத தால் சந்தேகமடைந்த வர்கள் சுமித்திரனிடம் கேட்ட போது ஒன்றும் கூறாமல் இருந்துள்ளான்.

    மேலும் இரவு 1 மணியளவில் சுமித்திரன் கழிவறை போவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். காலையில் மற்ற மாணவர்கள் எழுந்து பார்த்த போது சுமித்திரன் விடுதியின் மேல்மாடியில் இருந்து வெளியே நோக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் சுசீந்திரன் தானாக தூக்கிட்டு தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மாணவர்க ளிடையை கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவர் சுமித்திரன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. அதனை படித்துப் பார்த்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

    • சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி சீனிவாசா நகர் பகுதியில் நள்ளிரவில் மின்விசிறியில் தூக்கிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • உடல் கூறு ஆய்வுக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவர் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா( வயது 34). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்தில் விருந்து சென்று உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன கீர்த்தனாவிற்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    • குலசேகரம் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ் (வயது 50). தொழிலாளி. இவருக்கு உஷா (42) என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் சுமார் 5 ஆண்டுகளக பிரிந்து தனியாக வசித்து வந்தனர்.

    உஷா மணலிகரை பகுதியில் தனியாக வசித்து வருகிறார். ரெதீஷ் தன் தாயாருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று மதியம் சாப்பிடுவதற்காக இவரது தாய் ரெதீஷின் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு கதவு உள்பக்கம்மாக பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும்போது வீட்டு உத்திரத்தில் ரெதீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி அக்கம் பக்கத்தினர் குலசேகரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செய்து கொண்டார்
    • தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தென்தாமரைக்குளம் அருகே கீழமணக்குடி கீழத் தெருவை சேர்ந்தவர் அமலதாஸ் (வயது 63). இவரது மகள் மேரி ஸ்டெல்லா (39). இவருக்கு அதே பகுதியில் உள்ள சேவியர் காலனியை சேர்ந்த சகாயதாமஸ் பெர்லின் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

    சகாயதாமஸ் பெர்லின் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் சொந்த ஊரில் தற்போது வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் சகாயதாமஸ் பெர்லினுக்கு வெளிநாட்டில் சரியாக தொழில் நடைபெறாததால் வீட்டிற்கு பணம் அனுப்பாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை யடைந்த மேரி ஸ்டெல்லா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ஷோபா (வயது 16). இவர் தற்போது பூதப்பாண்டி அருகே துவரங்காட்டில் உள்ள பாட்டி கமலி வீட்டில் வசித்து வந்தார். நேற்று கமலி வீட்டிலிருந்து தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் ஷோபா மட்டும் இருந்தார்.

    மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கமலி, ஷோபாவை அழைத்தார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஷோபா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கமலி கதறி அழுதார். பின்னர் இது குறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.தூக்கில் பிணமாக தொங்கிய ஷோபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஷோபா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமணம் ஆகாததால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள நுள்ளிவிளை அடுத்த மூலச்சன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 36). கூலி தொழிலாளி.

    இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்ற ராஜேஷ்குமார் நேற்று காலை விடிந்தும் படுக்கை அறையை விட்டு வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்குப் போட்டு ராஜேஷ்குமார் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் பாக்கியலட்சுமி (65) இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராஜேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • கருங்கல் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
    • ஆசைப்பட்ட மருத்துவ படிப்பு கிடைக்காததால் மனம் உடைந்து காணப்பட்டார்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே தேங்காய்பட்டினம் அம்சி நெசவாளர் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் ஷெர்லின் (வயது 17).

    இவர், கருங்கல் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பிளஸ்-2 படிக்கும்போது மருத்துவ படிப்புக்கு ஷெர்லின் ஆசைப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மதிப் பெண் குறைவாக இருந்ததால் மருத்துவ படிப்பு கிடைக்க வில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்ப தால் ஷெர்லின் வீட்டில் இருந்தார். மாலையில் அவரது தாயார் அந்த பகுதியில் நடந்த மகளிர் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்த போது மகளை காண வில்லை. இந்த நிலையில் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது ஷெர்லின் தூக்கில் பிணமாக தொங்கு வது தெரிய வந்தது. இதை பார்த்து அதி்ச்சி அடைந்த தாயார் கூச்சலிட்டார்.

    பின்னர் இதுகுறித்து புதுக்கடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங் கிய ஷெர்லின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காரணம் என்ன? என போலீசார் விசாரணை
    • கணவன்-மனைவிக்கு இடையில் 2 வாரம் காலமாக தகராறு ஏற்பட்டிருந்ததால் விரக்தி அடைந்த சிவலட்சுமி தற்கொலை செய்து கொண்டார்

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே திக்கணங்கோடு கொல்லாய் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 35). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். ராஜன் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலிருந்து சிவலட்சுமி (33) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று 2 குழந்தை களும் பள்ளிக்கு சென்று விட்டனர். மாலையில் சிவலட்சுமியின் மகன் அஜயன் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த போது அவனது தாயார் சிவலட்சுமி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அஜயன் தாத்தாவிடம் சென்று கூறினார். மருமகளின் தற்கொலை குறித்து அவர் விசாரித்தபோது கணவன்-மனைவிக்கு இடையில் 2 வாரம் காலமாக தகராறு ஏற்பட்டிருந்ததால் விரக்தி அடைந்த சிவலட்சுமி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அய்யப்பன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை நடத்தி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிய அனில்குமாரின் காலை பிடித்து தாயார் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.
    • களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குழித்துறை அருகே கொல்லக்குடிவிளை பகுதி யை சேர்ந்தவர் அனில் குமார். இவர் வெளி நாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கொரோனா தொற்றுக்கு முன் ஊருக்கு வந்தவர். பின்னர் வெளி நாட்டுக்கு செல்லாமல் இப்போது ஊரில் உள்ளார். இவருக்கு திருமணம் ஆக வில்லை. இவர் தாயாருடன் குழித்துறை பகுதியில் வசித்து வருகிறார். இவ ருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் நடக்கவே இல்லை. இத னால் அனில்குமார் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

    நேற்று இரவு அனில் குமார் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். இன்று காலை அவரது அறை கதவு திறக்கப்பட வில்லை. இதனால் அவரது தாயார் அனில்குமாரை கதவை திறக்குமாறு அழைத்தார்.நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறை கதவை உடைத்து பார்த்தபோது அனில்குமார் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி னார். அனில்குமாரின் காலை பிடித்து தாயார் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. அனில்குமார் தற்கொலை செய்து கொண் டது குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    களியக்காவிளை போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை
    • சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள பள்ளம் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாண் (வயது 44). கடலில் மீன் பிடி தொழில் செய்து வந்தார்.

    இவருக்கு விஜி என்ற மனைவியும், 2 மகனும், 2 மகள்களும் உள்ளனர். ஜாணுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஜாணை மது குடிக்க கூடாது என விஜி கூறியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த ஜாண் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×