என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தென்தாமரைகுளம் அருகே தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செய்து கொண்டார்
- தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
தென்தாமரைக்குளம் அருகே கீழமணக்குடி கீழத் தெருவை சேர்ந்தவர் அமலதாஸ் (வயது 63). இவரது மகள் மேரி ஸ்டெல்லா (39). இவருக்கு அதே பகுதியில் உள்ள சேவியர் காலனியை சேர்ந்த சகாயதாமஸ் பெர்லின் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
சகாயதாமஸ் பெர்லின் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் சொந்த ஊரில் தற்போது வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் சகாயதாமஸ் பெர்லினுக்கு வெளிநாட்டில் சரியாக தொழில் நடைபெறாததால் வீட்டிற்கு பணம் அனுப்பாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை யடைந்த மேரி ஸ்டெல்லா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






