தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

சிவகாசி அருகே தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது தாயார் இறந்து விட்டார்.
தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
Published on

விருதுநகர்,

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் முனீஸ்வரி(வயது26) திருத்தங்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது தாயார் இறந்து விட்டார். இந்தநிலையில் முனீஸ்வரிக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முனீஸ்வரி தாய் இறந்து 3 மாதமே ஆகியிருப்பதால் தற்போது திருமணம் வேண்டாம் என மறுத்துள்ளார். ஆனால் குடும்பத்தினர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். இதனால் அவர் விரக்தி யுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று அருகில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த முனீஸ்வரி வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com