பூதப்பாண்டி அருகே சிறுமி தூக்கு போட்டு தற்கொலை

பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

நாகர்கோவில்:

கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ஷோபா (வயது 16). இவர் தற்போது பூதப்பாண்டி அருகே துவரங்காட்டில் உள்ள பாட்டி கமலி வீட்டில் வசித்து வந்தார். நேற்று கமலி வீட்டிலிருந்து தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் ஷோபா மட்டும் இருந்தார்.

மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கமலி, ஷோபாவை அழைத்தார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஷோபா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கமலி கதறி அழுதார். பின்னர் இது குறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.தூக்கில் பிணமாக தொங்கிய ஷோபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஷோபா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com