கருப்பூர் அருகே தூக்கு போட்டு பெண் தற்கொலை

சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி சீனிவாசா நகர் பகுதியில் நள்ளிரவில் மின்விசிறியில் தூக்கிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். உடல் கூறு ஆய்வுக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கருப்பூர் அருகே தூக்கு போட்டு பெண் தற்கொலை
Published on

கருப்பூர்:

சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவர் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா( வயது 34). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்தில் விருந்து சென்று உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன கீர்த்தனாவிற்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com