search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலகிருஷ்ணன்புதூர்"

    • ரவுடி உள்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
    • காயம் அடைந்த சிவசந்திரேஸ்வரனை மீட்டு ஈத்தாமொழி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    மேலகிருஷ்ணன்புதூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவசந்திரேஸ்வரன் (வயது 64), ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவர் ஊர் துணைத்தலைவராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் சிவசந்தி ரேஸ்வரன் நேற்று மாலை மேலகிருஷ்ணன்புதூர் பத்திரகாளி அம்மன் கோவில் பின்புறம் அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பூட்டி சாவியை வண்டியின் டேங்கவரில் வைத்துவிட்டு ஊர் தலைவர் சுகுமாரனிடம் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள செம்பொன்க ரையை சேர்ந்த சுபாஷ் (21), அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் ஒருவர் சேர்ந்து சிவசந்திரேஸ்வரன் மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளனர்.இதனை அறிந்த அவர் என்னுடைய மோட்டார் சைக்கிளை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்டார்.

    இதனால் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சிவசந்தி ரேஸ்வரனை அவதூறாக பேசி, கையில் வைத்திருந்த கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சிவசந்திரேஸ்வரன் வலியால் அலறி துடித்தார்.

    இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். காயம் அடைந்த சிவசந்திரேஸ்வரனை மீட்டு ஈத்தாமொழி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட்செல்வசிங் தாக்குதலில் ஈடுபட்ட சுபாஷ், ரஞ்சித் மற்றும் ஒருவர் என 3 பேர் மீதும் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்கைள தேடி வருகின்றனர்.

    இதில் சுபாஷ் மீது ஏற்கனவே கொலை உள்பட பல்வேறு வழக்கு கள் சுசீந்திரம் போலீஸ் நிலை யத்தில் உள்ளது. மேலும் இவர் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை
    • சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள பள்ளம் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாண் (வயது 44). கடலில் மீன் பிடி தொழில் செய்து வந்தார்.

    இவருக்கு விஜி என்ற மனைவியும், 2 மகனும், 2 மகள்களும் உள்ளனர். ஜாணுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஜாணை மது குடிக்க கூடாது என விஜி கூறியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த ஜாண் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது காவலர்கள் ஒழுங்கான முறையில் சீருடை அணிந்து வருகிறார்களா? மேலும் வட்ட ஆய்வாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து அறைகளையும் பார்த்து சேதம் ஏதும் அடைந்துள்ளதா? என்ப தையும் ஆய்வு செய்தார். மேலும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஒழுங்கான முறையில் பராமரித்து பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

    மேலும் வருகை பதிவேடு உள்பட காவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவ ணங்களையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மேலும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களை அழைத்து பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று ஆலோசனை வழங்கினார். மேலும் காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் காவலர்கள் பொதுமக்களிடம் கணிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். மேலும் பணியின்போது காவலர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளையும் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது கன்னி யாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் லெட்சுமி மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களும் கலந்து கொண்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுற்றுலாத்தலமான சொத்தவிளை கடற்கரை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வந்து செல்கின்ற னர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளது. சுசீந்திரம் கோவில் திரு விழா நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே அந்த பகுதிகளில் போக்கு வரத்து நெருக்கடியும் ஏற்படும். இதை சமாளிக்கும் வகையில் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். சுசீந்திரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதி களில் திருட்டு, கொலை சம்ப வங்கள் நடைபெ றாமல் தடுக்கும் வகையில் போலீசார் இரவு நேரத் தில் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் நடந்த கட்டிட தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக முக்கிய தடையம் சிக்கி உள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தொடங்கி வைத்தார்
    • நரையன்விளை குளம் அருகில் இருந்து காளியாயன்விளை இரட்டைக் குளம் வரை புதிய சாலை

    கன்னியாகுமரி:

    மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட நரையன்விளை குளம் அருகில் இருந்து காளியாயன்விளை இரட்டைக் குளம் வரை செல்வதற்கு பாதை வசதி சரியாக இல்லாமல் இருந்தது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் மேல கிருஷ்ணன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜனிடம் ஒரு புதிய சாலை உருவாக்கி தரும்படி கோரிக்கை வைத்தனர்.

    அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் துரித நடவடிக்கை எடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மகாதேவி ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் ராஜகுமாரி கலைக்கண்ணன், மகேஷ் பாபு, சிவக்குமார், சுபாசெல்வராம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×