search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலகிருஷ்ணன்புதூரில் நடந்த கட்டிட தொழிலாளி கொலை வழக்கு
    X

    சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு செய்த காட்சி.

    மேலகிருஷ்ணன்புதூரில் நடந்த கட்டிட தொழிலாளி கொலை வழக்கு

    • குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது காவலர்கள் ஒழுங்கான முறையில் சீருடை அணிந்து வருகிறார்களா? மேலும் வட்ட ஆய்வாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து அறைகளையும் பார்த்து சேதம் ஏதும் அடைந்துள்ளதா? என்ப தையும் ஆய்வு செய்தார். மேலும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஒழுங்கான முறையில் பராமரித்து பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

    மேலும் வருகை பதிவேடு உள்பட காவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவ ணங்களையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மேலும் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்களை அழைத்து பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று ஆலோசனை வழங்கினார். மேலும் காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் காவலர்கள் பொதுமக்களிடம் கணிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். மேலும் பணியின்போது காவலர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளையும் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது கன்னி யாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் லெட்சுமி மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களும் கலந்து கொண்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுற்றுலாத்தலமான சொத்தவிளை கடற்கரை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வந்து செல்கின்ற னர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளது. சுசீந்திரம் கோவில் திரு விழா நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே அந்த பகுதிகளில் போக்கு வரத்து நெருக்கடியும் ஏற்படும். இதை சமாளிக்கும் வகையில் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். சுசீந்திரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதி களில் திருட்டு, கொலை சம்ப வங்கள் நடைபெ றாமல் தடுக்கும் வகையில் போலீசார் இரவு நேரத் தில் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் நடந்த கட்டிட தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக முக்கிய தடையம் சிக்கி உள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×