search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை"

    • கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
    • நேற்று வீட்டில் தனியாக இருந்த இவர் திடீரென உடலில் மண் எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

    சேலம்:

    சேலம் சங்கர் நகர் வெங்கடேசபுரத்ைத சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 36),

    தனியார் நிறுவன ஊழியர்

    பி.காம் பட்டதாரியான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த இவர் திடீரென உடலில் மண் எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

    உடல் முழுவதும் பற்றி எரிந்த தீயால் உடல் கருகி சம்பவ இடத்திலயே இறந்தார். தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    உருக்கமான தகவல்கள்

    அப்போது வெளியான உருக்கமான தகவல்கள் வருமாறு-

    மோகன சுந்தரம் 10 மாத குழந்தையாக இருந்த போது அவரது பெற்றோர் இறந்து விட்டனர். மாமா ரகுநாதன் என்பவரது பராமரிப்பில் வளர்ந்தார். பட்டப்படிப்பு முடித்த இவர் கடந்த 4 ஆண்டுகளாக கோவையில் உளள ஒருதனியார் கண்ணாடி நிறுவனத்தில் ஊர், ஊராக சென்று பணம் வசூலிக்கும் பணி செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகத்திற்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த அவர் பெற்றோர் இறந்து விட்டதால் 36 வயதாகியும் தனக்கு திருமணமாகவில்லையே என்று மன வேதனையில் தவித்தார்.

    தொடர் விசாரணை

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
    • இதனால் மனமுடைந்த யுவராஜ் வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 29). எலக்ட்ரீசியன்.

    இவருக்கும், பிரியா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மனமுடைந்த யுவராஜ் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று யுவராஜ் வெகுநேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் அவரது தாய் பேபி வீட்டிற்கு சென்று பார்த்தபோது யுவராஜ் வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து கீரைத்துறை, எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரையை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவருக்கு தீராத உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதற்காக இவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் கார்த்திக் மேல் சிகிச்சைக்காக, மதுரை தெப்பக்குளம் மகாகணபதி நகரில் வசிக்கும் சகோதரர் வீட்டுக்கு வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திக் சம்பவத்தன்று மதியம் சகோதரர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சிந்தாமணி கிழக்கு தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி விஜயா (54). இவருக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை நோய்கள் இருந்தன. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணம் ஆகவில்லை.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஜயா, நேற்று மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    எஸ்.எஸ்.காலனி நண்பர்கள் தெருவை சேர்ந்தவர் வினோத் குமார் (27). இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் வினோத்குமார் அந்த பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்தப் பெண், செல்போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த வினோத்குமார் நேற்று மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • கோவையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர்.
    • ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் டி.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது45). இவர் ஓட்டல் நடத்தி வருகின்றார்.இவரது மகள் சந்தியா (21). இவருக்கும் கோவை கணபதி பகுதியை சேர்ந்த வினோத்குமார் (27) என்பவருக்கும் திருமண தகவல் மையம் மூலமாக கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    அதன் பிறகு சந்தியா, வினோத்குமார் ஆகிய இருவரும் கோவையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் சந்தியாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 8-ந் தேதி கோவையில் இருந்து கரூர் அழைத்து சென்று அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சந்தியா சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் அவர் வெள்ளகோவிலில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்தார்‌.

    இந்த நிலையில் நேற்று காலை சந்தியாவின் பெற்றோர் ஓட்டலுக்குசென்று விட்டனர். இதனால் சந்தியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு மதியம் பெற்றோர் வந்து பார்க்கும் போது ஜன்னல் கம்பியில் சேலையால் சந்தியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சந்தியாவை மீட்டு உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தியாவுக்கு திருமணமாகி 5 மாதம் மட்டுமே ஆவதால் தாராபுரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  

    • செல்வகுமார் கார் ஷோரூம் மில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • செல்வகுமார் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார் இதனை அவரது மனைவி கண்டித்தார்.

    கோவை

    கோவை வரதராஜபு ரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 30). இவர் கார் ஷோரூம் மில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செல்வகுமாரும், நந்தினி(24) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    மதுப்பழக்கத்திற்கு அடிமையான செல்வகுமார் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார் இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இதன் காரணமாக கடந்த சில நாட்களாக செல்வகுமார் மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார்.


    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் மது உடன் விஷம் கலந்து குடித்தார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் வாந்தி எடுத்து மயங்கினார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தினி தனது கணவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

    அங்கே செல்வகுமாரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வகுமார் இறந்தார் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் பெரிகடை பஜாரை சேர்ந்தவர் காசிராஜா (45). தனியாக வசித்து வந்த இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் காசிராஜா வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை பெரியகட்டங்குடியைச் சேர்ந்தவர் முனியாண்டி (75). நோய் பாதிப்பு கொடுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கீழ திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (25), பட்டாசு தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி ராஜேஸ்வரி பிரிந்து சென்று விட்டார். இதில் விரக்தியடைந்த மாரீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அழகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது75). இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த சந்திரன் அழகர் கோவில் மெயின் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(40). சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியேறிய இவர் விஷம் குடித்து திருமலைநாயக்கர் மகால் முன்பு இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய தெற்குவாசல் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ரமேஷ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கடலூரில் பரபரப்பு மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதி.
    • சூர்யா மற்றும் அவரது நண்பர் 2 பேரும் சத்யா வீட்டுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

     கடலூர்:

    கடலூர் குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் சத்யா (வயது 25). சம்பவத்தன்று அந்த பகுதியில் சைக்கிளில் சத்யா சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் சத்யாவை வழிமறித்து மொபைல் எண்ணை கேட்டார். அப்போது சத்யா மொபைல் நம்பர் தர மறுத்ததால் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த சத்யா தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சத்யாவின் தாய் சூர்யாவின் மனைவியிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனை அறிந்த சூர்யா மற்றும் அவரது நண்பர் 2 பேரும் சத்யா வீட்டுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட சத்யா மாத்திரை சாப்பிட்டு விட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் சூர்யா, காத்தமுத்து என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி எல்.என்.புரம் நைனார் நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன்கார்த்திக் என்ஜினீயர்.
    • பண்ருட்டியில் என்ஜினீயர் திடீர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

    பண்ருட்டி:

    பண்ருட்டி எல்.என்.புரம் நைனார் நகரை சேர்ந்தவர் ரவி.இவரது மகன்கார்த்திக்(வயது 29), என்ஜினீயர்.

    இவர் வெளி நாட்டில்வேலை பார்த்து விட்டு கடந்த 3 மாதமாக வீட்டில் இருந்து வருகிறார் வீட்டில் பெட்டிகடை நடத்திவந்தார்.வருமானம்போதவில்லை எனமன உளைச்சலில் இருந்து வந்தார்

    இவர் கடந்த 31-ந் தேதி எலிமருந்து சாப்பிட்டார். மயங்கிய நிலையில் இருந்த இவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில்சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை வருகின்றனர்.

    ×