கோவையில் புது மாப்பிள்ளை தற்கொலை

செல்வகுமார் கார் ஷோரூம் மில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.செல்வகுமார் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார் இதனை அவரது மனைவி கண்டித்தார்.
கோவையில் புது மாப்பிள்ளை தற்கொலை
Published on

கோவை

கோவை வரதராஜபு ரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 30). இவர் கார் ஷோரூம் மில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செல்வகுமாரும், நந்தினி(24) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான செல்வகுமார் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார் இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இதன் காரணமாக கடந்த சில நாட்களாக செல்வகுமார் மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் மது உடன் விஷம் கலந்து குடித்தார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் வாந்தி எடுத்து மயங்கினார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தினி தனது கணவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

அங்கே செல்வகுமாரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வகுமார் இறந்தார் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com