search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In desperation"

    • வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலின் வடபுற கரையில் தண்ணீரில் மிதந்த நிலையில் சுந்தர்ராஜன் உடல் கிடந்தது தெரியவந்துள்ளது.
    • இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள வெட்டையன் கிணறு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (47). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

    சுந்தர்ராஜனும் அவரது தாயார் சரோஜாமணியும் வசித்து வந்தனர். சுந்தர்ராஜன் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. இதுகுறித்து அவர் விரக்தியில் தனது தங்கை சின்னம்மாளிடம் மனமுடைந்து பேசி வந்ததாக தெரிகிறது. சின்னம்மாளும் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 6 மணியளவில் வெளியில் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அப்போது வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலின் வடபுற கரையில் தண்ணீரில் மிதந்த நிலையில் சுந்தர்ராஜன் உடல் கிடந்தது தெரியவந்துள்ளது.

    வாய்க்கால் கரையில் விஷ மாத்திரைகளும் கிடந்துள்ளன. உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுந்தர்ராஜனை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
    • நேற்று வீட்டில் தனியாக இருந்த இவர் திடீரென உடலில் மண் எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

    சேலம்:

    சேலம் சங்கர் நகர் வெங்கடேசபுரத்ைத சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 36),

    தனியார் நிறுவன ஊழியர்

    பி.காம் பட்டதாரியான இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த இவர் திடீரென உடலில் மண் எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

    உடல் முழுவதும் பற்றி எரிந்த தீயால் உடல் கருகி சம்பவ இடத்திலயே இறந்தார். தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    உருக்கமான தகவல்கள்

    அப்போது வெளியான உருக்கமான தகவல்கள் வருமாறு-

    மோகன சுந்தரம் 10 மாத குழந்தையாக இருந்த போது அவரது பெற்றோர் இறந்து விட்டனர். மாமா ரகுநாதன் என்பவரது பராமரிப்பில் வளர்ந்தார். பட்டப்படிப்பு முடித்த இவர் கடந்த 4 ஆண்டுகளாக கோவையில் உளள ஒருதனியார் கண்ணாடி நிறுவனத்தில் ஊர், ஊராக சென்று பணம் வசூலிக்கும் பணி செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகத்திற்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த அவர் பெற்றோர் இறந்து விட்டதால் 36 வயதாகியும் தனக்கு திருமணமாகவில்லையே என்று மன வேதனையில் தவித்தார்.

    தொடர் விசாரணை

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 

    ×