திருமணமாகாத விரக்தியில் விவசாயி தற்கொலை

வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலின் வடபுற கரையில் தண்ணீரில் மிதந்த நிலையில் சுந்தர்ராஜன் உடல் கிடந்தது தெரியவந்துள்ளது.இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகாத விரக்தியில் விவசாயி தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள வெட்டையன் கிணறு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (47). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

சுந்தர்ராஜனும் அவரது தாயார் சரோஜாமணியும் வசித்து வந்தனர். சுந்தர்ராஜன் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. இதுகுறித்து அவர் விரக்தியில் தனது தங்கை சின்னம்மாளிடம் மனமுடைந்து பேசி வந்ததாக தெரிகிறது. சின்னம்மாளும் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 6 மணியளவில் வெளியில் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அப்போது வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலின் வடபுற கரையில் தண்ணீரில் மிதந்த நிலையில் சுந்தர்ராஜன் உடல் கிடந்தது தெரியவந்துள்ளது.

வாய்க்கால் கரையில் விஷ மாத்திரைகளும் கிடந்துள்ளன. உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுந்தர்ராஜனை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com