ஜேடர்பாளையம் அருகே குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கணவன்-மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மனமுடைந்த யுவராஜ் வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜேடர்பாளையம் அருகே குடும்ப தகராறில் வாலிபர்   தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 29). எலக்ட்ரீசியன்.

இவருக்கும், பிரியா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மனமுடைந்த யுவராஜ் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று யுவராஜ் வெகுநேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் அவரது தாய் பேபி வீட்டிற்கு சென்று பார்த்தபோது யுவராஜ் வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com