search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டவாளம்"

    • எதிர்பாராத விதமாக தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
    • அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவாரூர்:

    ரெயில் நிலையங்களில் ரெயில்கள் வரும்போது இருக்கையில் அமர வேண்டி பயணிகள் அவசர, அவசரமாக முண்டியடித்து பெட்டிகளில் ஏற முயலும் போது சில சமயங்களில் தண்டவாளத்தில் விழுந்து தனக்கு ஆபத்தை விளை வித்து கொள்கின்றனர்.

    இது போன்ற சம்பவம் தற்போது திருவாருரில் நடந்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    நாகை மாவட்டம் குருவாடி பகுதியை சேர்ந்தவர் நாடிமுத்து மகன் வெங்கடேஷன் (வயது 20).

    இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் சென்னைக்கு செல்வதற்காக தனது ஊரிலிருந்து திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    மன்னார்குடியில் இருந்து சென்னை வழியாக வெளிமாநிலத்திற்கு செல்லக்கூடிய ரெயிலில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார்.

    அப்போது ரெயிலானது திருவாரூர் ரெயில் நிலையத்தில் நடைமேடையில் வரும் போது, பொது பெட்டியில் ஏறுவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை வெளியில் இழுத்துள்ளனர்.

    இதில் அவர் கணுக்கால் துண்டாகியது.

    இதில் வலியால் துடித்த அவரை பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திடீரென்று தண்டவாளத்தின் நடுவில் தடுப்பு போன்ற 2 பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.
    • விபத்து காரணமாக என்ஜினுடன் சேர்ந்த 4 பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, ரெயிலும் நிறுத்தப்பட்டது.

    திருச்சி:

    தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு சென்று வருகிறார்கள். அதேபோல் இந்த ரெயில்களில் சரக்கு போக்குவரத்தும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புதுக்குடி கிராமம் அருகிலுள்ள மேலவாளாடி பகுதிக்கு நள்ளிரவு சுமார் 1.05 மணிக்கு வந்தது.

    அப்போது திடீரென்று தண்டவாளத்தின் நடுவில் தடுப்பு போன்ற 2 பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை கவனித்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார்.

    ரெயில் அருகில் வந்தபோது தண்டவாளத்தில் நிற்க வைத்த நிலையில் ஒரு டயரும், படுக்க வைத்த நிலையில் மற்றொரு டயரும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதிக வேகத்தில் ரெயில் வந்ததால் அந்த டயர்கள் மீது மோதியது. பயங்கர சத்தம் கேட்டதுடன் ரெயிலின் வேகமும் குறைந்தது.

    இந்த விபத்து காரணமாக என்ஜினுடன் சேர்ந்த 4 பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, ரெயிலும் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து என்ஜின் டிரைவர் உள்ளிட்டோர் இறங்கி வந்து பார்த்தபோது ரெயில் என்ஜினுக்குள் சிக்கிய நிலையில் 2 லாரி டயர்கள் கிடந்தன. அத்துடன் அவை என்ஜின் பகுதிக்கு மின்சாரம் கொண்டு செல்லும் வயர்களையும் கடுமையாக சேதப்படுத்தி இருந்தது.

    இதனால்தான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது. யாரோ மர்ம நபர்கள் சதிச்செயலில் ஈடுபடும் வகையில் தண்டவாளத்தில் லாரி டயரை வைத்துவிட்டு சென்றுள்ளதும் தெரியவந்தது.

    இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நள்ளிரவில் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அதற்குள் தொழில்நுட்ப குழுவினர் ரெயில் நின்ற பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரெயில் பெட்டிகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சீரமைத்தனர். இதையடுத்து அரை மணி நேரம் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    மேலும் விபத்து நடந்த பகுதிக்கு ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாபரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த டயர்களை கைப்பற்றிய அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுவதற்கான பணிகளில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருந்தது.

    விவசாய நிலங்கள் அதிகம் கொண்ட அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்றும், விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லும் சுரங்கப்பாதையில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கும் நிலை ஏற்படும் என்று கூறி அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில்தான் ரெயில் தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து சதிச்செயல் அரங்கேறியுள்ளது.

    இதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார், கிராமத்தை சேர்ந்தவர்களா அல்லது வெளி நபர்களா என்பது உள்ளிட்ட கோணங்களில் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சுரங்கம் பணி விரைவில் தொடங்குகிறது
    • ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட், 4 மாத காலம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் ரெயில்வே கேட் உள்ளது. வடிவீஸ்வரத்தில் இருந்து ஊட்டுவாழ்மடம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு செல்லும் வகையில் இந்த வழித்தடம் உள்ளது.

    ரெயில் நிலையத்தின் அருகே இந்த கேட் இருப்பதால், ரெயில்கள் வருகை, என்ஜின் சோதனை ஓட்டம் போன்றவற்றுக்காக அடிக்கடி மூடி திறக்கப்படுகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகனங்கள் கேட் முன்பு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. தினமும் 15 முறைக்கு மேல் கேட் மூடப்படுவதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டு வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கான டெண்டர் விடப்பட்டு, கடந்த 15-ந்தேதி முதல் பணிகள் தொடங்க இருப்ப தாக அறிவிக்கப்பட் டது. இந்த பணி காரணமாக ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட், 4 மாத காலம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே கேட் பகுதியில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

    இதனை பார்த்த ஊட்டு வாழ்மடம் உள்ளிட்ட பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுரங்க பாதைக்காக 4 மாதம் கேட் மூடப்பட்டால், தாங்கள் நாகர் நகருக்கு வருவது சிக்கலாகும். சுமார் ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடிவீஸ்வரம் வர, சுசீந்திரம் சோழன்திட்டை அணை வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்ற வேண்டி வரும்.

    எனவே தற்போதுள்ள ரெயில்வே கேட் அருகே காலியாக இருக்கும் இடத்தில் தற்காலிக சாலை அமைத்து விட்டு அதன்பிறகு சுரங்கப்பாதை பணியை தொடங்க வேண்டும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளிடம் மனுவும் கொடுத்தனர். இதனை தொடர்ந்து ஊட்டுவாழ்மடம் கேட் மூடும் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் தற்காலிக சாலை தொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஊட்டுவாழ்மடம் கேட் அருகே உள்ள தனியார் இடத்தை சீரமைத்து தற்காலிக சாலை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்காலிக சாலை அமைப்பதற்காக, தனியார் இடங்களை சீரமைக்கும் பணி இன்று காலை தொடங்கியது. அங்குள்ள மேடு, பள்ளங்கள் மண் கொட்டி நிரப்பப்பட்டது. சாலை அமைக்கப்பட்டதும், அங்கு தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் அனைத்தும் முடிந்ததும், ஊட்டுவாழ்மடம் கேட் மூடப்பட்டு, சுரங்கப்பாதை பணி தொடங்கப்படும் என ரெயில்வே வட்டாரங்களில் கூறப்படுகிறது.

    • அண்ணாநகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
    • உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஜவுளிகடை தெரு சேர்ந்தவர் சண்முகம் (வயது 58) விவசாயி. மேலும் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை திருத்துறைப்பூண்டி அருகே அண்ணாநகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு சென்ற ெரயில் சண்முகம் மீது மோதியது.

    இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து திருத்துறைப்பூண்டி ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அவர் ரெயிலில் அடிபட்டு 2 வாரத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நாகர்கோவில்:

    பணகுடி-வள்ளியூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சென்றவர்கள் ஆண் பிணம் கிடப்பதை பார்த்தனர்.

    இது தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டனர்.

    அப்போது ரெயில்வே தண்டவாளத்தையொட்டி உள்ள முட்புதரில் சுமார் 45 வயது மதிக்க த்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. உடல் அழுகிய நிலையில் இருந்தது.

    எனவே அவர் ரெயிலில் அடிபட்டு 2 வாரத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புத்தாண்டு கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார்.
    • ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    திருவாரூர்:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்து கொள்வர்.மேலும் தேவாலயங்கள் போன்றவற்றில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருவாரூர் அருகிலுள்ள ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவரின் மகன் விக்கி என்கிற கணேசன் வயது 20.

    ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் திருவாரூர் ெரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடந்து ெரயில்வே காலணி பகுதிக்கு செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ெரயில் மோதியதில் சிறிதுரம் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கணேசன் உடல் சிதறி தண்டவாளத்திலேயே உயிரிழந்து கடந்துள்ளார்.

    அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ெரயிலின் டிரைவர் ெரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இளைஞர் எந்த ெரயில் மோதி உயிரிழந்தார் விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    புத்தாண்டு தினத்தன்று ெரயில் மோதி இளைஞர் உடல் சிதறி பலியான சம்பவம் என்பது ெரயில்வே காலணி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் துரிதமாக செயல்பட்டு தங்கள் செல்போன் வெளிச்சம் மற்றும் செய்கைகள் மூலம் சுமார் 300 மீட்டருக்கு முன்பாக ரெயிலை நிறுத்தினர்.
    • பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தியதால் தாய்-மகள் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் ரீத்தாபுரத்தை சேர்ந்தவர் வர்கீஸ் (49).

    இவர் நேற்று இரவு திங்கள்நகரில் இருந்து அழகிய மண்டபத்திற்கு காரில் வந்தார். காரில் அவரது மகள் ஆஷா (24), ஆஷாவின் மகள் செரியா (4) ஆகியோர் அமர்ந்திருந்தனர். கார் பரம்பை ரெயில்வே மேம்பாலம் அருகே வந்த போது வழி தெரியாமல் ரெயில்வே துறையினர் போட்டு இருந்த மண்பாதையில் சென்று விட்டனர்.

    சிறிது தூரம் சென்றதும் பாதை மாறிவிட்டதை உணர்ந்த வர்கீஸ் காரை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் ரெயில்வே தண்ட வாளத்தில் கவிழ்ந்தது.

    அப்போது திருவனந்த புரத்தில் இருந்து நாகர் கோவில் நோக்கி பயணிகள் ரெயில் வந்து கொண்டி ருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் துரிதமாக செயல்பட்டு தங்கள் செல்போன் வெளிச்சம் மற்றும் செய்கைகள் மூல மும் சுமார் 300 மீட்டருக்கு முன்பாக ரெயிலை நிறுத்தினர். இதுபற்றி திங்கள்நகர் தீயணைப்பு நிலையம், ரெயில்வே துறைக்கும் தகவல் தெரி விக்கப்பட்டது.

    இதனிடையே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வந்த ரெயில் இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கயிறு மூலம் காரை கட்டி இழுத்து மீட்டனர். இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயில்கள் இயக்கப் பட்டன.

    பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தியதால் தாய்-மகள் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    • மதுரை அழகப்பன் நகர் ரெயில்வே கேட் இன்று முதல் மூடப்பட்டது.
    • இரட்டை ரெயில் பாதை திட்டத்தில் மதுரை-திருமங்கலம் இடையே தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை-தூத்துக்குடி இரட்டை ரெயில் பாதை திட்டத்தில் தற்போது மதுரை-திருமங்கலம் இடையே தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக பழங்காநத்தம் - பசுமலையை இணைக்கும் அழகப்பன் நகர் ரெயில்வே கேட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்து தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.

    எனவே அழகப்பன் நகர் ரெயில்வே கேட் இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 18-ந் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியானார்.
    • இச்சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூத்தி யார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் காசி விசுவநாதன்(26), கட்டிட தொழிலாளி.

    இவர் இரவு நேரத்தில் வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது காசி விசுவநாதன் மீது அந்த வழியாக வந்த ரெயில் மோதியது.

    இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நிலையில் காசி விஸ்வநாதன் நீண்டநேர மாகியும் வீடு திரும்பாததால் காலையில் உறவினர்கள் தேடிப்பார்த்தனர். அப்போது காசி விசுவநாதன் தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தது தெரியவந்தது. மதுரை ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோத னைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பொதுமக்கள் பார்த்து தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள சோழகம்பட்டி ரெயில்வே நிலைய தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது.

    இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல் தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் இசையரசன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர். ஆனால் அவர் யார்? எந்த ஊர்? என்று விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபர் தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ‌‌. மேலும் அவர் யார் என்ற விவரம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 2 நாட்கள் 4 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்ல உள்ளது.
    • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் - வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் 4 ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்ல உள்ளது. அதன்படி ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.13352) நாளை ஆலப்புழாவில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும். அதாவது 3 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது.

    இதுபோல் எர்ணாகுளம் சந்திப்பு - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12678) நாளை 2½ மணி நேரம் தாமதமாக எர்ணாகுளத்தில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்படும். திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) நாளை மறுநாள் திருச்சியில் இருந்து 2½ மணி நேரம் தாமதமாக மதியம் 3.30 மணிக்கு புறப்படும். நாகர்கோவில் - கோவை ரெயில் (16321) நாளை மறுநாள் நாகர்கோவிலில் 2 மணி நேரம் தாமதமாக காலை 9.35 மணிக்கு புறப்படும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரெயில் நடுவழியில் நிறுத்தம்
    • வாகன ஓட்டிகள் அவதி

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே சுக்குப்பாறை தேரிவிளை பகுதியில் நேற்று மாலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.

    இது பற்றி நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து புனலூருக்கு பாசஞ்சர் ரயில் வந்தது.

    சுக்கு பாறை தேரிவிளை பகுதியில் ரயில் வந்த போது தண்டவாளத்தில் பிணம் கிடந்ததால் டிரைவர் ரயிலை நடு வழியில் நிறுத்தினார்.சுமார் அரை மணி நேரமாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்ததை யடுத்து அந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு இருந்தன. மூடப்பட்ட ரயில்வேகேட் திறக்க தாமதம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    அரசு பஸ்கள் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஒரு சில வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பி மாற்று பாதை வழியாக சென்றனர். சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு தண்டவாளத்தில் கிடந்த உடலை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

    பின்னர் ெரயில் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்தது. கன்னியாகுமரி புனலூர் பாசஞ்சர் ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். நாக ர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற ெரயில்களும் தாமதமாக சென்றது.

    பிணமாக கிடந்தவரின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை போலீசார் இது தொடர்பாக விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×