search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leg broken"

    • எதிர்பாராத விதமாக தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
    • அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவாரூர்:

    ரெயில் நிலையங்களில் ரெயில்கள் வரும்போது இருக்கையில் அமர வேண்டி பயணிகள் அவசர, அவசரமாக முண்டியடித்து பெட்டிகளில் ஏற முயலும் போது சில சமயங்களில் தண்டவாளத்தில் விழுந்து தனக்கு ஆபத்தை விளை வித்து கொள்கின்றனர்.

    இது போன்ற சம்பவம் தற்போது திருவாருரில் நடந்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    நாகை மாவட்டம் குருவாடி பகுதியை சேர்ந்தவர் நாடிமுத்து மகன் வெங்கடேஷன் (வயது 20).

    இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் சென்னைக்கு செல்வதற்காக தனது ஊரிலிருந்து திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    மன்னார்குடியில் இருந்து சென்னை வழியாக வெளிமாநிலத்திற்கு செல்லக்கூடிய ரெயிலில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார்.

    அப்போது ரெயிலானது திருவாரூர் ரெயில் நிலையத்தில் நடைமேடையில் வரும் போது, பொது பெட்டியில் ஏறுவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை வெளியில் இழுத்துள்ளனர்.

    இதில் அவர் கணுக்கால் துண்டாகியது.

    இதில் வலியால் துடித்த அவரை பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரியசாமியின் கால் முறிவு ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெசலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. . இவர் இன்று காலை 8 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள முத்துக்கருப்பன் என்பவரது வீட்டின் சந்தில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது தொடர் மழை காரணமாக முத்துக் கருப்பனின் கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரியசாமியின் கால் முறிவு ஏற்பட்டது.

    இது குறித்து கால் முறிவு ஏற்பட்ட பெரியசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.

    • திருநாவலூர் அருகே பார்சல் லாரி மற்றொரு லாரி மீது மோதி டிரைவர் கால் முறிவு ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார்.
    • மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் (வயது 35) இவர் தனியார் பார்சல் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சேலத்தில் இருந்து சென்னை நோக்கி லாரியில் பார்சல் ஏற்றிக்கொண்டு வந்தார். அ ப்போது உளுந்தூ ர்பேட்டை அருகே மேட்டத்தூர் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நடப்பட்டிருந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பார்சல் லாரி மோதியது. பார்சல் லாரி வேகமாக வருவதைப் பார்த்த தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். இதனால் அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் உயிர் தப்பினர்.

    இந்த விபத்தில் பார்சல் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மனோஜ்க்கு கால் முறிவு ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார். இதை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×