என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பெரியசாமி.
வேப்பூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் கால் முறிவு
- கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரியசாமியின் கால் முறிவு ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெசலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. . இவர் இன்று காலை 8 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள முத்துக்கருப்பன் என்பவரது வீட்டின் சந்தில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது தொடர் மழை காரணமாக முத்துக் கருப்பனின் கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரியசாமியின் கால் முறிவு ஏற்பட்டது.
இது குறித்து கால் முறிவு ஏற்பட்ட பெரியசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.
Next Story






