பணகுடியில் ரெயில்வே தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம்

நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.அவர் ரெயிலில் அடிபட்டு 2 வாரத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

நாகர்கோவில்:

பணகுடி-வள்ளியூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சென்றவர்கள் ஆண் பிணம் கிடப்பதை பார்த்தனர்.

இது தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டனர்.

அப்போது ரெயில்வே தண்டவாளத்தையொட்டி உள்ள முட்புதரில் சுமார் 45 வயது மதிக்க த்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. உடல் அழுகிய நிலையில் இருந்தது.

எனவே அவர் ரெயிலில் அடிபட்டு 2 வாரத்திற்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com