search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power connection"

    • மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் ஆகியவை குறித்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • அலுவலக நேரத்தில் காலையில் 9 மணி முதல் 5 மணி வரை அலுவலக நேரங்களில் நடைபெற உள்ளது.

    தாராபுரம்:

    தாராபுரம் பகுதியில் புதிய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் கடந்த 24-ந்தேதி முதல் வருகிற ஆகஸ்டு 24-ந்தேதி வரை அந்தந்த மின்சார வாரிய அலுவலகங்களில் நடைபெற உள்ளது.இது குறித்து தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற் பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாராபுரம் பகுதியில் மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் ஆகியவை குறித்து மின் நுகர்வோருக்கான சிறப்பு முகாம் கடந்த 24-ந்தேதி முதல் வருகிற ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி வரை ஒரு மாத காலத்திற்கு அலுவலக நேரத்தில் காலையில் 9 மணி முதல் 5 மணி வரை அலுவலக நேரங்களில் நடைபெற உள்ளது.

    மின் நுகர்வோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி புதிய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் செய்யலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உரிய கீழ்கண்ட ஆவணங்களை அந்தந்த மின்சார வாரிய அலுவலகத்தில் கொடுத்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மின் நுகர்வோர் பெயர் மாற்றம் செய்ய ஆதார் அட்டை நகல், நகராட்சி மற்றும் மாநகராட்சியில் சமீபத்தில் செலுத்திய சொத்துவரி ரசீது நகல், விற்பனை பத்திரத்தின் நகல் அல்லது நீதிமன்ற ஆணை, மின் உரிமையாளர் இறந்திருப்பின் அவற்றின் பெயர் மாற்றம் செய்ய கொடுக்க வேண்டிய ஆவணங்கள், ஆதார் அட்டை, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றின் புதிதாக சொத்து வரி செலுத்திய ரசீது நகல், நகராட்சி அல்லது மாநகராட்சி பகுதிகளுக்கு ஏதேனும் ஒரு நகலை சமர்ப்பிக்கலாம்.

    குழு இணைப்புகளில் பொது சேவைக்கான மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டிய ஆவணங்கள், பில்டர்கள், டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள், குரூப் ஹவுசிங்கில் உள்ள பொது சேவைக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நலவாழ்வு சங்கத்தின் பதிவு சான்று, அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற விண்ணப்பத்தில் கையொப்பமிட்ட குடியிருப்போரிடம் அனுமதி கடிதம் இவற்றுடன் ரூ.726-ஐ செலுத்தி பெயர் மாற்றம் செய்து பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திடீரென்று தண்டவாளத்தின் நடுவில் தடுப்பு போன்ற 2 பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.
    • விபத்து காரணமாக என்ஜினுடன் சேர்ந்த 4 பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, ரெயிலும் நிறுத்தப்பட்டது.

    திருச்சி:

    தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு சென்று வருகிறார்கள். அதேபோல் இந்த ரெயில்களில் சரக்கு போக்குவரத்தும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புதுக்குடி கிராமம் அருகிலுள்ள மேலவாளாடி பகுதிக்கு நள்ளிரவு சுமார் 1.05 மணிக்கு வந்தது.

    அப்போது திடீரென்று தண்டவாளத்தின் நடுவில் தடுப்பு போன்ற 2 பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை கவனித்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார்.

    ரெயில் அருகில் வந்தபோது தண்டவாளத்தில் நிற்க வைத்த நிலையில் ஒரு டயரும், படுக்க வைத்த நிலையில் மற்றொரு டயரும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதிக வேகத்தில் ரெயில் வந்ததால் அந்த டயர்கள் மீது மோதியது. பயங்கர சத்தம் கேட்டதுடன் ரெயிலின் வேகமும் குறைந்தது.

    இந்த விபத்து காரணமாக என்ஜினுடன் சேர்ந்த 4 பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, ரெயிலும் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து என்ஜின் டிரைவர் உள்ளிட்டோர் இறங்கி வந்து பார்த்தபோது ரெயில் என்ஜினுக்குள் சிக்கிய நிலையில் 2 லாரி டயர்கள் கிடந்தன. அத்துடன் அவை என்ஜின் பகுதிக்கு மின்சாரம் கொண்டு செல்லும் வயர்களையும் கடுமையாக சேதப்படுத்தி இருந்தது.

    இதனால்தான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது. யாரோ மர்ம நபர்கள் சதிச்செயலில் ஈடுபடும் வகையில் தண்டவாளத்தில் லாரி டயரை வைத்துவிட்டு சென்றுள்ளதும் தெரியவந்தது.

    இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நள்ளிரவில் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அதற்குள் தொழில்நுட்ப குழுவினர் ரெயில் நின்ற பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரெயில் பெட்டிகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சீரமைத்தனர். இதையடுத்து அரை மணி நேரம் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    மேலும் விபத்து நடந்த பகுதிக்கு ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாபரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த டயர்களை கைப்பற்றிய அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுவதற்கான பணிகளில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருந்தது.

    விவசாய நிலங்கள் அதிகம் கொண்ட அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்றும், விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லும் சுரங்கப்பாதையில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கும் நிலை ஏற்படும் என்று கூறி அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில்தான் ரெயில் தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து சதிச்செயல் அரங்கேறியுள்ளது.

    இதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார், கிராமத்தை சேர்ந்தவர்களா அல்லது வெளி நபர்களா என்பது உள்ளிட்ட கோணங்களில் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • விருதுநகர் மாவட்டத்தில் மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தது.
    • இணைய தளம் மூலமாக பணம் செலுத்தி மின் இணைப்பு பெறலாம் என அறிவித்தது.

    விருதுநகர்

    தமிழகத்தில் புதிதாக வீடு மற்றும் வணிக வளாகம் கட்டுவோர் மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தது. இதனை தவிர்க்க மின் இணைப்பு களை பெறவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி புதிதாக மின் இணைப்பு பெற விரும்பு வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து இணைய தளம் மூலமாக பணம் செலுத்தி மின் இணைப்பு பெறலாம் என அறிவித்தது. இந்த நடவடிக்கை காரணமாக ெபருமளவு முறைகேடுகள் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுவோர் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

    அரசு அறிவித்தப்படி ஆன்லைன் மூலம் மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்தாலும் இடைத்தரகர்கள் மற்றும் சிலர் மூலம் குறிப்பிட்ட பணம் செலுத்தினால் மட்டுமே உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படுவ தாகவும், இல்லை என்றால் பல்வேறு குறைகளை கூறி காலம் தாழ்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

    இதுகுறித்து பாதிக்கப் பட்ட ஒருவர் கூறுகையில், வீட்டு மின் இணை ப்புக்காக ஆன்லைன் மூலம் விண்ணப் பித்தேன்.

    ஆனால் தற்போது வரை மின் இணைப்பு கொடுக்கவில்லை. அரசு நிர்ண யித்த கட்டணத்தை விட இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்தால் மின் இணைப்பு உடனடியாக தரப்படும் என கூறுகிறார் கள் என வேதனையுடன் தெரிவித்தார்.

    • சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் 7 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவு நீரை வெளியேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • இதையடுத்து இந்த 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் விதிமுறையை மீறி இயங்கிய 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமலும், கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் வகையிலும் சாயப்பட்டறைகள் இயங்கு வதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம் தலை மையில் உதவி என்ஜினீ யர்கள் ஜாரி கொண்டலாம்பட்டி, சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, நெய்கா ரப்பட்டி உள்ளிட்ட பகுதி களில் ஆய்வு செய்தனர்.

    அதில், சீலநா யக்கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் 7 சாயப்பட்டறைகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. மேலும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் கழிவு நீரை வெளியேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செந்தில் விநாயகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் விதிமுறையை மீறி இயங்கிய 7 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    • மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது.
    • வருகிற 24-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மோகனூர் ரோட்டில் கூட்டுறவு காலனியில் அமைந்துள்ள நாமக்கல் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது . இது குறித்து நாமக்கல் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மின் விநியோக கோட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல் நகரம், வளையப்பட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதன்சந்தை, புதுசத்திரம், காளப்பராயப்பன்பட்டி, பேளுகுறிச்சி, கொல்லி மலை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மோகனூர் ரோட்டில் கூட்டுறவு காலனியில் அமைந்துள்ள நாமக்கல் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் வீடு மற்றும் கடைகள் மின் இணைப்புகளுக்கு வீட்டு வரி ரசீது, பத்திர நகல் , வாரிசுதாரிடம் இருந்து ஆட்சேபனை இன்மை கடிதம் கொண்டு வரவேண்டும். விவசாய மின் இணைப்பு–களுக்கு பத்திர நகல் அல்லது பட்டா, கிராம நிர்வாக அலுவலரின் உரிமை சான்று, புலவரைபடம், தாழ்வழுத்த ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    தொழில்துறை மின் இணைப்புகளுக்கு தாழ்வ–ழுத்த ஒப்பந்த பத்திரம், சொத்து வரி ரசீது, பத்திர நகல் போன்ற சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பெயர் மாற்றம் செய்து பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் காகித கப்களை உற்பத்தி செய்யும் சிறிய தொழிற்சாலை இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
    • இனிமேல் பிளாஸ்டிக் கப்கள் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சேலம் கோட்ட என்ஜினீயர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று தாதம்பட்டியில் சோதனை நடத்தினர்.

    அப்போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் காகித கப்களை உற்பத்தி செய்யும் சிறிய தொழிற்சாலை இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஏரித் தெரு வில் இயங்கிய தனியார் பேப்பர் கப்ஸ், சூலக்கரை உடையார் தெருவில் இயங்கிய பேப்பர் கப்ஸ் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. இனிமேல் பிளாஸ்டிக் கப்கள் தயாரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர், விற்போரின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு உற்பத்தி எந்திரங்களும் முடக்கப்படும், என்றனர்.

    • பொருட்களை அழுகாமல் வீணாகாமல் பாதுகாப்பதற்கு குளிரூட்டப்பட்ட அறை ஏற்படுத்தப்பட வேண்டும்.
    • முன்னதாக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை திலகர் திடல் மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், திலகர் திடல் மார்க்கெட்டுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும், கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் , பொருட்களை அழுகாமல் வீணாகாமல் பாதுகாப்பதற்கு குளிரூட்டப்பட்ட அறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி சங்க தலைவராக சேவையா, செயலாளராக மணிகண்டன், பொருளாளராக பாலமுருகன், துணைத்தலைவராக அயூப்க்கான், துணைச் செயலாளராக கல்யாணி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட தலைவர் சேவையா, மாநில பொருளாளர் கோவிந்தராஜன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் அருகே மின்நுகர்வோர் கூட்டத்தில் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை செய்வதாக மிரட்டினார்.
    • விண்ணப்பித்து பல வருடங்கள் ஆகியும் மேற்படி நபருக்கு மின் இணைப்பு வழங்க ப்படவில்லை.


    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மின்துறை அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மின்சாரத்துறை அதிகாரி சதாசிவம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் செயற்பொறியாளர் லீனா, உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடலூர் அருகே குமளங்குளத்தை சேர்ந்த விவசாயி மாயவன் பேசுகையில் , 2014 ம் ஆண்டு விவசாயிகள் 50 ஆயிரம் கட்டினால் அவர்களது நிலத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின் கீழ் விண்ணப்பித்திருந்தார். ஆனால் விண்ணப்பித்து பல வருடங்கள் ஆகியும் மேற்படி நபருக்கு மின் இணைப்பு வழங்க ப்படவில்லை. இந்நிலையில் கூடுதலாக பணம் கட்ட வேண்டும் என கூறியதால் கடந்த ஏப்ரல் மாதம் கூடுதலாக மின்வாரியத்திற்கு பணம் செலுத்தப்பட்டது. ஆனால் இதுவரை மேற்படி விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு தரப்படவில்லை என புகார் தெரிவித்தார். 

    இதுகுறித்து மின்சா ரத்துறை அதிகாரிகள் சரியான முறையில் பதில் சொல்லாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த விவசாயி மாயவன் கூட்டத்திலிருந்து வெளியில் வந்து தெரிவிக்கையில் , அடுத்த கூட்டத்திற்கு முன்னதாக மின்சார அலுவலர்கள் என்னுடைய விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் . இல்லையெனில் நான் என் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன் என தெரிவித்தார் . இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது,

    பரமத்திவேலூர் அருகே சோழசிராமணியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2 ஆயிரத்து 300 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணியை சேர்ந்த பெண் ஒருவர், புதிய மின் இணைப்பு வேண்டி, சோழசிராமணியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு கடந்த வாரம் சென்றார். அங்கு அவரிடம், புதிய மின் இணைப்பு வழங்க, வணிக உதவியாளர் கார்த்திக் ரூ.2 ஆயிரத்து 300 லஞ்சம் கேட்டுள்ளார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த பெண், நாமக்கல் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கார்த்திக்கை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று காலையில் அந்த பெண்ணிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அவரும் அவர்கள் கொடுத்த ரூ.2 ஆயிரத்து 300-ஐ சோழசிராமணியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.

    அங்கு அந்த பெண் லஞ்ச பணத்தை கார்த்திக்கிடம் கொடுத்தார். அப்போது அலுவலகம் அருகே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் அந்த அலுவலகத்திற்குள் புகுந்து லஞ்சம் வாங்கிய கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதுடன், அங்கிருந்த சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    புதிய மின் இணைப்புக்கு ரூ.2 ஆயிரத்து 300 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலக வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் சோழசிராமணியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    ×