கடலூர் அருகே மின்நுகர்வோர் கூட்டம் குடும்பத்துடன் தற்கொலை செய்வதாக மிரட்டிய விவசாயி

கடலூர் அருகே மின்நுகர்வோர் கூட்டத்தில் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை செய்வதாக மிரட்டினார்.விண்ணப்பித்து பல வருடங்கள் ஆகியும் மேற்படி நபருக்கு மின் இணைப்பு வழங்க ப்படவில்லை.
கடலூர் அருகே மின்நுகர்வோர் கூட்டம் குடும்பத்துடன்  தற்கொலை செய்வதாக மிரட்டிய விவசாயி
Published on

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மின்துறை அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மின்சாரத்துறை அதிகாரி சதாசிவம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் செயற்பொறியாளர் லீனா, உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடலூர் அருகே குமளங்குளத்தை சேர்ந்த விவசாயி மாயவன் பேசுகையில் , 2014 ம் ஆண்டு விவசாயிகள் 50 ஆயிரம் கட்டினால் அவர்களது நிலத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின் கீழ் விண்ணப்பித்திருந்தார். ஆனால் விண்ணப்பித்து பல வருடங்கள் ஆகியும் மேற்படி நபருக்கு மின் இணைப்பு வழங்க ப்படவில்லை. இந்நிலையில் கூடுதலாக பணம் கட்ட வேண்டும் என கூறியதால் கடந்த ஏப்ரல் மாதம் கூடுதலாக மின்வாரியத்திற்கு பணம் செலுத்தப்பட்டது. ஆனால் இதுவரை மேற்படி விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு தரப்படவில்லை என புகார் தெரிவித்தார். 

இதுகுறித்து மின்சா ரத்துறை அதிகாரிகள் சரியான முறையில் பதில் சொல்லாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த விவசாயி மாயவன் கூட்டத்திலிருந்து வெளியில் வந்து தெரிவிக்கையில் , அடுத்த கூட்டத்திற்கு முன்னதாக மின்சார அலுவலர்கள் என்னுடைய விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் . இல்லையெனில் நான் என் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன் என தெரிவித்தார் . இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது,

X

Maalai Malar
www.maalaimalar.com